Chief Internal Auditor (State Mortgage & Investment Bank)
Vacancies (Sri Lanka Army)
தொடர்ச்சியாக வராத மாணவர்களை எவ்வாறு பதிவது?
மாணவர் இடைவிலகல் தொடர்பாக எவ்வாறு பதிவுகளை மேற்கொள்வது என்பது தொடர்பான விளக்கம் கல்வியமைச்சின் 2008/39 சுற்று நிருபத்திற்கு அமைவாக பின்வருமாறு மேற்கொள்ளப்பட வேண்டும்.
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அறிவித்தலின்றி ஒரு மாணவர் தொடர்ச்சியாக 40 பாடசாலை நாட்கள் சமூகமளிக்காத பட்சத்தில் அவர் பாடசாலையிலிருந்து விலகிச் சென்றவராக கருதப்பட வேண்டும். விலகிய திகதியாக 41ஆவது பாடசாலை நாளுக்குரிய திகதி குறிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பான மேலதிக விளக்கங்களை கீழே காணலாம்.
விரைவில் கல்வி அமைச்சினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் சிலருக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்
சில மாகாணங்களுக்குரிய மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கல்வியமைச்சினால் மிக விரைவில் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாணத்தில் விரைவில் 355 பேருக்கு ஆசிரிய நியமனம்!
பாடசாலை நேரத்தை அதிகரித்தல்: கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய 16 தொழிற்சங்கங்கள்!
பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பது தொடர்பான கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
மேலும் குறித்த முடிவை மீளப் பெறுமாறும் தொழிற்சங்க கூட்டமைப்பு குறித்த கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கடிதத்தில் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வரலாறு நெடுகிலும் அதிபர்கள் ஆசிரியர்கள் இரவு பகல் பாராது பல சிரமங்களுக்கு மத்தியிலும் எவ்வித மேலதிக கொடுப்பனவுமின்றி பணியாற்றி வந்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி கொரோனா காலப்பகுதியிலும் மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும் பரீட்சைகளை நடத்துவதற்கும் அரசின் எவ்வித அனுசரணையும் இல்லாத நிலையிலும் பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளை கருத்தில் கொள்ளாது மாணவர்களையும் அதிபர்கள் ஆசிரியர்களையும் பல்வேறு சிரமங்களுக்குள் தள்ளும் வகையில் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளதைக் கண்டிக்கிறோம்.
தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள், மின்சாரம் எரிவாயு, அத்தியாவசியப் பொருள் மற்றும் பொது போக்குவரத்து என்பவற்றில் காணப்படும் நெருக்கடி நிலைமை காரணமாக சாதாரண மக்களுக்கு தமது அன்றாட வாழ்வை கொண்டு செல்வதிலுள்ள சிரமத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
அதேபோல் தற்போது காணப்படும் உணவுப் பொருள் தட்டுப்பாடு எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் பொதுப் போக்குவரத்து நெருக்கடி நிலைமை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவதில் சிக்கல் ஏற்படும்.
இவ்வாறான நிலைமையில் 07:30 - 02:30 வரை பாடசாலை நேரத்தை அதிகரிப்பது மாணவர்களைப் போல ஆசிரியர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
வரலாறு நெடுகிலும் அதிபர்கள் ஆசிரியர்கள் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் தமது கடமைகளை செய்கின்றனர். அதே போல் இந்த நிலைமையிலும் செயற்படுவர்.
எனவே நேரத்தை அதிகரிக்கும் முடிவை மீளப்பெறுமாறு அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற வகையில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-04-2022.
12-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். (15ஆம் திகதி வெளியாக வேண்டிய வர்த்தமானி அறிவித்தல் தொடர் விடுமுறை காரணமாக 12ஆம் திகதி வெளியாகியுள்ளது)
08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-04-2022.
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் அகில இலங்கை பல்கலைக்கழக இளம் பட்டதாரிகளுக்கிடையே கட்டுரை போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
சா. தர பரீட்சை - 2021(2022): விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்கள் கோரல்:
2021 ற்கான சாதாரண தர பரீட்சை இந்த வருடம் நடைபெறுகிறது. இதற்காக விடைத்தாள் திருத்தம் பணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம்
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.