Officer Cadet (Sri Lanka Army)

April 19, 2022

Officer Cadet (Sri Lanka Army) 
 
Age: 18 - 24. 
 
Marital status: Single. 
 
Closing date: 04-05-2022.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....

Officer Cadet (Sri Lanka Army) Officer Cadet (Sri Lanka Army) Reviewed by Irumbu Thirai News on April 19, 2022 Rating: 5

10 நாட்களைக் கண்ட காலிமுகத்திடல்.... 10 நாட்களும் நடந்தவை என்ன? ஒரே பார்வையில்...

April 18, 2022

எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் தாமாக ஒன்று சேர்ந்த மக்கள் குழுவினர் கடந்த 9ஆம் திகதி முதல் காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தனர். 
 
அந்தப் போராட்டக் களம் இன்றுடன் 10வது நாளை பார்க்கிறது. 
 
எரிபொருள் நெருக்கடி, மின்சார நெருக்கடி, எரிவாயு நெருக்கடி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, கட்டுப்பாடில்லாமல் பொருட்கள் சேவைகளின் விலை அடிக்கடி அதிகரிக்கின்றமை, பால்மா தட்டுப்பாடு, பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தும் தமக்குரிய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை, இந்த நெருக்கடியான நிலைமைகளுக்கு அரசாங்கத்தினால் முறையான திட்டம் முன்வைக்கப்படாமை அல்லது நடைமுறைப்படுத்தபடாமை போன்ற பல்வேறு காரணங்களினால் பொறுமை இழந்த மக்கள் ஆங்காங்கே தமது பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். 
 
இதன் தொடராக கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் கடந்த 9ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். இதற்கான அழைப்பு சமூக வலைத்தளங்கள் மூலம் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
 
ஓரிரு நாட்களில் இந்த ஆர்ப்பாட்டம் கலைந்து சென்று விடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பத்தாவது நாளையும் பார்த்துள்ளது. 
 
இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்துகின்றமை விசேட அம்சமாகும். 
 
நாட்டிலுள்ள சகல இன மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்தமை இந்த ஆர்ப்பாட்டத்தில் காணக்கூடியதாக உள்ளது. 
 
ஆரம்பம் முதல் இன்று வரை இந்தப் போராட்டக் களத்தில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை இங்கே தொகுத்து தருகிறோம். 
 
ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்திற்கு கோட்டா கோகம (GOTAGOGAMA) என பெயரிட்டனர். 
 
இங்குள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், குடிநீர் மற்றும் அத்தியாவசிய வசதிகள் என்பவற்றை ஏனையவர்கள் கொண்டுவந்து வழங்கினர். பின்னர் தங்குவதற்கு கூடாரங்களும் அமைக்கப்பட்டன. 
 
நாட்கள் செல்ல செல்ல இந்த போராட்டத்திற்கான ஆதரவுகள் பெருகின. பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அந்த இடத்திற்கு வருகை தந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 
 
பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் தொழிற்சங்க அமைப்புகள் உட்பட பல தரப்பினரும் அந்த இடத்திற்கு வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர். 
 
இதுவரை அந்த இடத்தில் வாசிகசாலை, வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை, இலவச சட்ட உதவி மையம், செஞ்சிலுவை சங்கத்தின் முதலுதவி மையம், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி மையம், தற்காலிக மலசலகூட தொகுதி, இலவச WIFI வசதி, கையடக்க தொலைபேசிகளை சார்ஜ் (Charge) செய்வதற்கான இடம் போன்ற பல்வேறு விடயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
இங்குள்ள புத்தகசாலை சுமார் 4, 5 புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்டாலும் இப்பொழுது பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சேர்ந்துள்ளன. 
 
பலர் தமது பிள்ளைகள், சிறு குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். 
 
பிள்ளைகள் சித்திரம் வரைவதற்கு என்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. யாரும் வழிகாட்டாமலேயே அவர்கள் சுயமாக வரையும் சித்திரங்களில் பெரும்பாலானவை இந்தப் போராட்டங்களை சித்தரிப்பதாகவும் அரசாங்கத்திற்கு எதிரான விடையங்களை வெளிப்படுத்துவதாகவும் காணப்படுகின்றன. 
 
ஒவ்வொருவரும் தம்மால் எது முடியுமோ அதை அங்கே வந்து போராட்டக்காரர்களுக்கு இலவசமாக வழங்குகின்றனர். 
 
கடந்த தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களிலும் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் சென்ற மக்கள் அந்த போராட்டக்காரர்களோடு தமது புத்தாண்டை கொண்டாடினர். 
 
அன்றைய தினம் பெரும்பாலும் தமது உறவினர்களின் வீடுகளுக்கு செல்லாமல் போராட்டக் களத்திற்கு சென்று அங்குள்ள மக்களோடு புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தாம் தயாரித்த பலகாரம் சிற்றுண்டிகள் என்பவற்றை அந்த மக்களோடு பகிர்ந்து கொண்டனர். 
 
காலிமுகத்திடல் GOTAGOGAMA வில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு சமமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அதற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. 
 
இது மாத்திரமன்றி GOTAGOGAMA வின் கிளைகளும் ஆரம்பிக்கப்படுகின்றன. காலி, மாத்தறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி உட்பட பல பிரதேசங்களில் இவ்வாறு கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
 
நேற்றைய தினம் காலியில் கிளை ஆரம்பிக்கப்பட்ட பொழுது அங்கு வந்த போலீசார் அதை அகற்றிய போது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. எவ்வாறாயினும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். 
 
இது மாத்திரமன்றி ஆதிவாசிகள் குழு ஒன்றும் காலிமுகத்திடலுக்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 
 
போராட்டக் களத்திற்கு சீருடையில் சென்ற போலீஸ் அதிகாரி ஒருவர் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தமையினால் கைது செய்யப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவரை பிணையில் எடுப்பதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவொன்று இலவசமாக முன்வந்தது. நீதிமன்றமும் அவருக்கு பிணை வழங்கியது. 
 
இதேவேளை முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணிநேர சத்தியாக்கிரக போராட்டத்தையும் அங்கு நடத்தினார். ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பலியானோருக்கு நீதி வேண்டியும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவர் அந்த சத்தியாகிரகத்தை நடத்தினார். 
 
அவரைத் தொடர்ந்து இன்னும் சிலரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அவ்வப்போது கலைஞர்களால் பாடல்களும் பாடப்படுகின்றன. வீதிநாடகம், சொற்பொழிவு என்பனவும் இடம்பெறுகின்றன. 
 
நேற்றைய தினம் ஈஸ்டர் ஞாயிறு தினமாகும். 2019 இல் இதுபோன்ற ஒரு தினத்தில்தான் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்கு நீதிகோரி விஷேட நிகழ்வுகளும் நடந்தன. 
 
அங்கவீனமுற்ற படைவீரர்கள், விசேட தேவையுடையோர் என பல தரப்பினரும் அங்கு சென்று ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்றைய தினம் புதிய அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். பிரச்சினைகளுக்கு இது தீர்வல்ல எனக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 
 
இதேவேளை நிதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சென்றுள்ளனர். 
 
எதிர்க்கட்சி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை சமர்ப்பிக்க மும்முரமாக ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. 
 
இவ்வாறான நிலையில் இலங்கையின் நெருக்கடியான நிலை அடுத்து எந்தக் கட்டத்தை நோக்கி நகரும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- irumbuthirai news.
 
10 நாட்களைக் கண்ட காலிமுகத்திடல்.... 10 நாட்களும் நடந்தவை என்ன? ஒரே பார்வையில்... 10 நாட்களைக் கண்ட காலிமுகத்திடல்.... 10 நாட்களும் நடந்தவை என்ன? ஒரே பார்வையில்... Reviewed by Irumbu Thirai News on April 18, 2022 Rating: 5

Data Scientist (UNDP)

April 18, 2022
Data Scientist (UNDP) Data Scientist (UNDP) Reviewed by Irumbu Thirai News on April 18, 2022 Rating: 5

Chief Internal Auditor (State Mortgage & Investment Bank)

April 17, 2022

Chief Internal Auditor (State Mortgage & Investment Bank) 
 
Age: Not more than 45. 
 
Closing date: 25-04-2022. 

 Source: Sunday Observer.
 
ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...

 
Chief Internal Auditor (State Mortgage & Investment Bank) Chief Internal Auditor (State Mortgage & Investment Bank) Reviewed by Irumbu Thirai News on April 17, 2022 Rating: 5

Vacancies (Sri Lanka Army)

April 16, 2022


Vacancies (Sri Lanka Army) 

 Closing date: 30-04-2022.

Source: Sunday Observer.

Vacancies (Sri Lanka Army) Vacancies (Sri Lanka Army) Reviewed by Irumbu Thirai News on April 16, 2022 Rating: 5

தொடர்ச்சியாக வராத மாணவர்களை எவ்வாறு பதிவது?

April 15, 2022


மாணவர் இடைவிலகல் தொடர்பாக எவ்வாறு பதிவுகளை மேற்கொள்வது என்பது தொடர்பான விளக்கம் கல்வியமைச்சின் 2008/39 சுற்று நிருபத்திற்கு அமைவாக பின்வருமாறு மேற்கொள்ளப்பட வேண்டும். 

 

பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அறிவித்தலின்றி ஒரு மாணவர் தொடர்ச்சியாக 40 பாடசாலை நாட்கள் சமூகமளிக்காத பட்சத்தில் அவர் பாடசாலையிலிருந்து விலகிச் சென்றவராக கருதப்பட வேண்டும். விலகிய திகதியாக 41ஆவது பாடசாலை நாளுக்குரிய திகதி குறிக்கப்பட வேண்டும். 

 

இது தொடர்பான மேலதிக விளக்கங்களை கீழே காணலாம்.

நன்றி: மாணிக்கம் இளங்கோ (முகநூல்)

 

தொடர்ச்சியாக வராத மாணவர்களை எவ்வாறு பதிவது? தொடர்ச்சியாக வராத மாணவர்களை எவ்வாறு பதிவது? Reviewed by Irumbu Thirai News on April 15, 2022 Rating: 5

விரைவில் கல்வி அமைச்சினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் சிலருக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்

April 15, 2022

சில மாகாணங்களுக்குரிய மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கல்வியமைச்சினால் மிக விரைவில் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
தகவல் அறியும் சட்டத்திற்கமைய கோரப்பட்ட விடயங்களுக்கு கல்வியமைச்சு வழங்கிய பதிலிலேயே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 
 
அந்தவகையில் தெற்கு, கிழக்கு, ஊவா ஆகிய மாகாணங்களுக்குரிய கல்விப் பணிப்பாளர்களுக்கான விண்ணப்பங்களே இவ்வாறு கோரப்படவுள்ளன. 
 
இதற்கான அனுமதி அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச்சேவை குழுவினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தை கீழே காணலாம்.

 
விரைவில் கல்வி அமைச்சினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் சிலருக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் விரைவில் கல்வி அமைச்சினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் சிலருக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் Reviewed by Irumbu Thirai News on April 15, 2022 Rating: 5

வட மாகாணத்தில் விரைவில் 355 பேருக்கு ஆசிரிய நியமனம்!

April 14, 2022

கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறி ஆசிரிய நியமனத்துக்காக காத்திருப்பவர்களில் 355 பேருக்கு விரைவில் வட மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பான பத்திரிகை செய்தியைக் கீழே காணலாம். 

 
வட மாகாணத்தில் விரைவில் 355 பேருக்கு ஆசிரிய நியமனம்! வட மாகாணத்தில் விரைவில் 355 பேருக்கு ஆசிரிய நியமனம்! Reviewed by Irumbu Thirai News on April 14, 2022 Rating: 5

பாடசாலை நேரத்தை அதிகரித்தல்: கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய 16 தொழிற்சங்கங்கள்!

April 13, 2022


பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பது தொடர்பான கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளன. 

 

மேலும் குறித்த முடிவை மீளப் பெறுமாறும் தொழிற்சங்க கூட்டமைப்பு குறித்த கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கடிதத்தில் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

வரலாறு நெடுகிலும் அதிபர்கள் ஆசிரியர்கள் இரவு பகல் பாராது பல சிரமங்களுக்கு மத்தியிலும் எவ்வித மேலதிக கொடுப்பனவுமின்றி பணியாற்றி வந்துள்ளனர். 

 

அதுமாத்திரமன்றி கொரோனா காலப்பகுதியிலும் மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும் பரீட்சைகளை நடத்துவதற்கும் அரசின் எவ்வித அனுசரணையும் இல்லாத நிலையிலும் பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். 

 

இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளை கருத்தில் கொள்ளாது மாணவர்களையும் அதிபர்கள் ஆசிரியர்களையும் பல்வேறு சிரமங்களுக்குள் தள்ளும் வகையில் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளதைக் கண்டிக்கிறோம். 

 

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள், மின்சாரம் எரிவாயு, அத்தியாவசியப் பொருள் மற்றும் பொது போக்குவரத்து என்பவற்றில் காணப்படும் நெருக்கடி நிலைமை காரணமாக சாதாரண மக்களுக்கு தமது அன்றாட வாழ்வை கொண்டு செல்வதிலுள்ள சிரமத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள். 

 

அதேபோல் தற்போது காணப்படும் உணவுப் பொருள் தட்டுப்பாடு எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 

 

இந்நிலையில் பொதுப் போக்குவரத்து நெருக்கடி நிலைமை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவதில் சிக்கல் ஏற்படும். 

 

இவ்வாறான நிலைமையில் 07:30 - 02:30 வரை பாடசாலை நேரத்தை அதிகரிப்பது மாணவர்களைப் போல ஆசிரியர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். 

 

வரலாறு நெடுகிலும் அதிபர்கள் ஆசிரியர்கள் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் தமது கடமைகளை செய்கின்றனர். அதே போல் இந்த நிலைமையிலும் செயற்படுவர். 

 

எனவே நேரத்தை அதிகரிக்கும் முடிவை மீளப்பெறுமாறு அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற வகையில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாடசாலை நேரத்தை அதிகரித்தல்: கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய 16 தொழிற்சங்கங்கள்! பாடசாலை நேரத்தை அதிகரித்தல்: கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய 16 தொழிற்சங்கங்கள்! Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

12-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-04-2022.

April 13, 2022

12-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். (15ஆம் திகதி வெளியாக வேண்டிய வர்த்தமானி அறிவித்தல் தொடர் விடுமுறை காரணமாக 12ஆம் திகதி வெளியாகியுள்ளது)
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல... 
 
 
12-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-04-2022. 12-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-04-2022. Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-04-2022.

April 13, 2022

08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல....
 
 
 
08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-04-2022. 08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) /  Official Government Gazette Released on 08-04-2022. Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி

April 13, 2022

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் அகில இலங்கை பல்கலைக்கழக இளம் பட்டதாரிகளுக்கிடையே கட்டுரை போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
எழுத்தாளரின் பெயர், பல்கலைக்கழகம், பீடம், ஆண்டு என்பவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 
 
வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
 
தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் வருடாந்தம் 
 
வெளியிடப்படும் 'அல்இன்ஷிராஹ்' இதழில் பிரசுரமாகும். 
 
ஆக்கங்களை மின்னஞ்சல் மூலமோ அல்லது இணைய படிவத்தில் தரவேற்றுதன் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம். 
 
தலைப்புகள்(ஏதாவது ஒரு தலைப்பில் எழுத வேண்டும்): 
1) ஆன்மீகத்தை வலுவூட்டும் ரமழான். 
2) வாழ்க்கைக்கு வழிகாட்டும் பத்ர் போர். 
3) அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் தக்வாவில் சிறந்தவரே. 
4) அன்றைய மதீனாவின் ரமழானிய இரவொன்று. 

மொழி
தமிழ்மொழி மூலம் மாத்திரமே எழுதப்பட வேண்டும். 
 
சொற்கள்
1000 - 1250. 
 
மின்னஞ்சல் முகவரி: 
peramajlis@gmail.com 
 
இணைய படிவத்தில் பதிவேற்றுவதற்கான லிங்க்: 
 
முகவரி
Muslim Majlis. 
University of Peradeniya. 
Peradeniya. 
 
முடிவுத் திகதி: 
20-04-2022.
 
மேலதிக விபரங்களை கீழே காணலாம்.

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன?

April 10, 2022

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. 
 
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் யாப்புக்கு முரணானது எனக் கூறி அந்நாட்டின் பிரதி சபாநாயகர் அதனை நிராகரித்தார். 
 
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதாக இம்ரான்கான் அறிவித்தார். இவரின் இந்த பரிந்துரையை ஏற்று அந்நாட்டு ஜனாதிபதியும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கை கடந்த வியாழக்கிழமை விசாரித்த உயர் நீதிமன்றம் நம்பிக்கை இல்லா பிரேரணையை ரத்து செய்த பிரதி சபாநாயகரின் முடிவு செல்லாது எனவும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் நம்பிக்கை இல்லா பிரேரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 
 
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை நடைபெற்றது. இந்தப் பிரேரணை நிறைவேற்றுவதற்கு ஆகக்குறைந்தது 172 வாக்குகள் தேவை. 
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கானுக்கு எதிராக 

174 வாக்குகள் கிடைத்துள்ளன. அந்த வகையில் அவர் தற்போது பிரதமர் பதவியை இழந்துள்ளார். 
 
எனவே தற்போது வேறு ஒரு பிரதமர் தெரிவு செய்யப்பட வேண்டும். அவர் 2023 ஒக்ரோபர் மாதம் நடைபெறும் தேர்தல் வரை பதவியில் இருப்பார். 
 
பாகிஸ்தானில் எந்தவொரு பிரதமரும் ஆட்சி காலம் முடியும் வரை பதவியில் இருந்ததில்லை. மேலும் நம்பிக்கை இல்லா பிரேரணை மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் இம்ரான் கான் ஆவார். 
 
இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன? இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன? Reviewed by Irumbu Thirai News on April 10, 2022 Rating: 5
Powered by Blogger.