பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம்!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் என்பவற்றுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாளை விடுமுறை வழங்கப்பட்டு ஜூன் 6ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளைய தினம் கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் வட மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வழமைபோன்று நடைபெறும் என மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் குயின்றஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Closing date: 31-05-2022.
Age limit: Below 64.
Closing date: 04-05-2022.
ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....
https://www.irumbuthirainews.com/2022/04/programme-assistants-accounts.html?m=1