சா. தர பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களும் உரிய அதிபர்களும் பாடசாலைக்குச் செல்ல வேண்டும்! கூட்டம் Online முறையில்
Irumbu Thirai News
May 20, 2022
எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சனை என்பவற்றின் காரணமாக இன்று பாடசாலை நடைபெறாவிட்டாலும் சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள் குறித்த பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும் என பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளின் அதிபர்கள் இன்றைய தினம் பாடசாலைக்குச் சென்று அதுதடர்பான ஒழுங்குபடுத்தல் கருமங்களுக்கு உதவி புரிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரீட்சை நோக்குனர்களாக கடமை புரிபவர்கள் குறித்த மேற்பார்வையாளர்கள் அழைக்கும் பட்சத்தில் குறித்த பாடசாலைகளுக்கு செல்ல வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மாத்திரமன்றி பரீட்சை தொடர்பில் மேற்பார்வையாளர்களுக்கு நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்கள் இம்முறை Online முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு ஏதாவது அறிவுறுத்தல்கள் இருப்பின் இருபத்தி மூன்றாம் திகதி திங்கட்கிழமை பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா. தர பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களும் உரிய அதிபர்களும் பாடசாலைக்குச் செல்ல வேண்டும்! கூட்டம் Online முறையில்
Reviewed by Irumbu Thirai News
on
May 20, 2022
Rating: