நாளை முதல் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தல் தொடர்பான சுற்றறிக்கை
எரிபொருள் பிரச்சினை மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிப்பதில் உள்ள சிக்கல்கள் பல்வேறு தரப்புகளினாலும் முன்வைக்கப்பட்டன.
மேலும் தற்போதைய கஷ்டமான காலகட்டத்தில் எரிபொருள், மின்சாரம், நீர் என்பவற்றுக்கான அரச செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
எனவே பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு பாதிப்பில்லாத வகையில் அரசாங்க ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மறு அறிவித்தல் வரை அத்தியாவசியமாகத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையான ஊழியர்களை மாத்திரம் நாளைமுதல் சேவைக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டத்தை நிறுவனத் தலைவர்கள் தயாரிக்க வேண்டும்.
இதன் போது மின்சாரம், எரிபொருள் என்பவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக 2022-3-8 ல் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையையும் கவனம் செலுத்தி செயற்பட வேண்டும்.
மேலும் அத்தியாவசிய அரச சேவைகளை பெறுவதற்கு இந்த விடயங்கள் தடையாக அமையக்கூடாது.
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.