அரச செலவுகளைக் கட்டுப்படுத்த ஓய்வுபெற்றோர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

May 28, 2022


அரச செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக நிதி அமைச்சின் செயலாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய அரச சேவைகள் ஆணைக்குழு ஓய்வுபெற்றோர் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த அரச சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? பிரதமரின் அறிவிப்பு!

இந்த தீர்மானம் தொடர்பில் சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விண்ணப்பங்களை மறு அறிவித்தல் வரை சமர்ப்பிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு தற்போதைய அதிகாரிகளைக் கொண்டே நிரப்புவதில் கூடிய கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச செலவுகளைக் கட்டுப்படுத்த ஓய்வுபெற்றோர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! அரச செலவுகளைக் கட்டுப்படுத்த ஓய்வுபெற்றோர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! Reviewed by Irumbu Thirai News on May 28, 2022 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜுன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

May 28, 2022

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜூன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

நாட்டின் தேசிய பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை உட்பட 09 வகையான பரீட்சைகள் ஜுன் மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம்.

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜுன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜுன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on May 28, 2022 Rating: 5

13-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-05-2022

May 28, 2022

13-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
13-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-05-2022 13-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-05-2022 Reviewed by Irumbu Thirai News on May 28, 2022 Rating: 5

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? பிரதமரின் அறிவிப்பு

May 27, 2022


எதிர்வரும் இடைக்கால வரவு செலவு திட்டத்தின் போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பரவும் செய்தியில் உண்மையில்லை எனவும் அவ்வாறான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் சுகாதாரம் கல்வி தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மக்களுக்கான நிவாரணங்களும் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் பிரதமரின் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? பிரதமரின் அறிவிப்பு அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? பிரதமரின் அறிவிப்பு Reviewed by Irumbu Thirai News on May 27, 2022 Rating: 5

நாளை முதல் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தல் தொடர்பான சுற்றறிக்கை

May 25, 2022


அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தல் தொடர்பான 10/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்றைய தினம் (25) வெளியிட்டுள்ளது.

எரிபொருள் பிரச்சினை மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிப்பதில் உள்ள சிக்கல்கள் பல்வேறு தரப்புகளினாலும் முன்வைக்கப்பட்டன. 

மேலும் தற்போதைய கஷ்டமான காலகட்டத்தில் எரிபொருள், மின்சாரம், நீர் என்பவற்றுக்கான அரச செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

எனவே பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு பாதிப்பில்லாத வகையில் அரசாங்க ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் மறு அறிவித்தல் வரை அத்தியாவசியமாகத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையான ஊழியர்களை மாத்திரம் நாளைமுதல் சேவைக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டத்தை நிறுவனத் தலைவர்கள் தயாரிக்க வேண்டும். 

இதன் போது மின்சாரம், எரிபொருள் என்பவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக  2022-3-8 ல் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையையும் கவனம் செலுத்தி செயற்பட வேண்டும். 

மேலும் அத்தியாவசிய அரச சேவைகளை பெறுவதற்கு இந்த விடயங்கள் தடையாக அமையக்கூடாது.

குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.



நாளை முதல் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தல் தொடர்பான சுற்றறிக்கை நாளை முதல் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தல் தொடர்பான சுற்றறிக்கை Reviewed by Irumbu Thirai News on May 25, 2022 Rating: 5

கப்பம் கேட்கிறார்கள்! பரீட்சையின் பின் சேவையிலிருந்து விலகுவோம் - தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

May 25, 2022


தற்போது நடைபெறும் சாதாரண தர பரீட்சையின் பின்னர் சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்  சங்கம் அறிவித்துள்ளது. 

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கப்பம் கேட்கிறார்கள். பஸ் ஒன்றுக்கு 100 லிட்டர் டீசல் அடிப்பதற்காக ஆயிரம் ரூபாயை கப்பமாக கேட்கிறார்கள். 

எனவே முறையாக எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் சேவையிலிருந்து விலக சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கப்பம் கேட்கிறார்கள்! பரீட்சையின் பின் சேவையிலிருந்து விலகுவோம் - தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கப்பம் கேட்கிறார்கள்! பரீட்சையின் பின் சேவையிலிருந்து விலகுவோம் - தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் Reviewed by Irumbu Thirai News on May 25, 2022 Rating: 5

கல்வித்துறையின் பிரச்சினைகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் தீர்வு - கல்வி அமைச்சர்

May 25, 2022


கல்வித் துறையிலே காணப்படும் அவசியம் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக M. நிஹால் ரணசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பாடநூல்களை விநியோகித்தல், பரீட்சைகளை நடாத்துதல், பெறுபேறுகளை வெளியிடல், பல்கலைக்கழக பிரவேசம் போன்ற கல்வித்துறையில் முக்கியமாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும். மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மாணவர்களுக்கு மதிய போசன திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கல்வித்துறையின் பிரச்சினைகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் தீர்வு - கல்வி அமைச்சர் கல்வித்துறையின் பிரச்சினைகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் தீர்வு - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on May 25, 2022 Rating: 5

அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைத்தல்: சுற்றுநிருபம் இன்று வெளியாகாமைக்கான காரணம்!

May 24, 2022


அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைப்பதற்கான அதிகாரத்தை நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கும் வகையில் பொது நிர்வாக அமைச்சினால் இன்றைய தினம் சுற்றுநிறுபம் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்றைய தினம் சுற்றுநிறுபம் வெளியாகாமைக்கான காரணம் குறித்த அமைச்சுக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டமையே என தெரியவருகிறது. எவ்வாறாயினும் குறித்த சுற்றுநிறுபம் மிக விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவை அமைச்சர்களுக்கான புதிய செயலாளர்கள் 23 பேர் இன்றைய தினம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைத்தல்: சுற்றுநிருபம் இன்று வெளியாகாமைக்கான காரணம்! அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைத்தல்: சுற்றுநிருபம் இன்று வெளியாகாமைக்கான காரணம்! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது!

May 24, 2022


வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாபிட்டிய வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் ஒருவரையும் அந்த மாணவர் தங்கியிருந்த விடுதியின் காவலாளி ஒருவரையும் தாக்கியமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது! பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்!

May 24, 2022


தென் கொரியாவில் வேலை வாய்ப்புக்காக இலங்கையர்களை தெரிவு செய்யும் பணி கொரிய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. 

அந்த வகையில் இவ்வாறு கொரியாவுக்காக இளைஞர் யுவதிகளை வேலைவாய்ப்பின் பொருட்டு தெரிவு செய்வதற்காக கொரிய மொழி பரீட்சை நடத்தப்படுகிறது. அதில் இந்த வருடத்திற்கான பரீட்சை நேற்றைய தினம் ஆரம்பமானது. இது இலங்கையில் நடத்தப்படும் ஐந்தாவது கொரிய மொழி பரீட்சையாகும். 

இந்த பரீட்சைக்காக இம்முறை 31, 378 விண்ணப்பதாரிகள் தகுதி பெற்றுள்ளனர். அதில் தினமும் 4 குழுக்கள் கணினி அடிப்படையிலான பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

இந்தப் பரீட்சை தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எவ்வித செல்வாக்கையம் செலுத்த முடியாது என பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

சா. தர பரீட்சை எழுதியவர் கைது!

May 24, 2022


தற்போது சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில் கல்முனை பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையம் ஒன்றில் பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மைத்துனருக்காக பரீட்சை எழுதிய நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் போலீசில் இவர் தொடர்பில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் குறித்த மைத்துனரும் கைது செய்யப்பட்டு தற்போது இருவருக்கும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சா. தர பரீட்சை எழுதியவர் கைது! சா. தர பரீட்சை எழுதியவர் கைது! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை - 2021: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

May 24, 2022


2021 ம் வருடத்திற்குரிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. 

அந்த வகையில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகளைக் கீழே காணலாம்.




புலமைப்பரிசில் பரீட்சை - 2021: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின! புலமைப்பரிசில் பரீட்சை - 2021: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் எடுத்த முக்கிய முடிவு!

May 20, 2022


கல்வி அமைச்சராக இன்றைய தினம் பதவியேற்ற சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடும் போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதாவது தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்கள் வழங்கும் நடவடிக்கையை இன்று(20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்துள்ளார். 

மேலும் தற்போதைய பாடசாலை விடுமுறை முடிவதற்குள் இது தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பில் பொது மக்களுக்கும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் எடுத்த முக்கிய முடிவு! புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் எடுத்த முக்கிய முடிவு! Reviewed by Irumbu Thirai News on May 20, 2022 Rating: 5
Powered by Blogger.