பரீட்சை எழுதிய மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த மேற்பார்வையாளர்! கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!
இது தொடர்பில் கல்வியமைச்சு விஷேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் திகதி ஹிந்தோகம பாடசாலை பரீட்சை நிலையத்தில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவிக்கு கேள்விக்கான விடையை சொல்லிக்கொடுக்கும் தோரணையில் குறித்த மாணவிக்கு பாலியல் ரீதியாக இடையூறு விளைவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்திய கல்வியமைச்சர் உடனடியாக இது தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பரீட்சைத் திணைக்களத்தினால் ஜூன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)
அதற்கிணங்க தற்போது வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய, குறித்த மாணவி, பரீட்சை நிலைய மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர், குற்றச்சாட்டுக்குள்ளான மேற்பார்வையாளர் (நோக்குனர்), குறித்த மண்டபத்தில் பரீட்சை எழுதிய ஏனைய பரீட்சார்த்திகள் ஆகியோரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் திணைக்கள மட்டத்தில உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் எக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மேற்பார்வையாளர் இந்த விடயத்தை மூடி மறைப்பதற்காக அந்த மாணவியின் குடும்பத்துக்கு லஞ்சம் வழங்க முற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச செலவுகளை கட்டுப்படுத்த ஓய்வு பெற்றோர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
சம்பவம் நடந்த தினத்தில் அந்தப் பாடசாலை ஆசிரியையிடம் குறித்த நிகழ்வை தெரிவித்த மாணவி அதற்கு அடுத்த நாள் தனது பெற்றோருடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட விஷேட ஊடக அறிக்கையை கீழே காணலாம்.