பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜுன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்டது)

June 09, 2022

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜூன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
நாட்டின் தேசிய பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை உட்பட 09 வகையான பரீட்சைகள் ஜுன் மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம்.

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜுன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்டது) பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜுன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்டது) Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை!

June 09, 2022

நாட்டில் நாளை(10) முதல் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் நாளை முதல் கட்டாயம் இல்லை. எவ்வாறாயினும் அதை பயன்படுத்த விரும்புபவர்கள் எவ்வித தடையுமின்றி பயன்படுத்தலாம். சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இதைத் தொடர்ந்து அணிவது பொருத்தமானது. 

அதேபோன்று நாளை முதல் பிசிஆர் மற்றும் என்டிஜன் (PCR & Antigen) பரிசோதனைகளும் அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலையில் 408 பேர் மாத்திரமே கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். 


நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை! நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை! Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

June 09, 2022

நாட்டிலுள்ள மாகாண பாடசாலைகளில் சுமார் 8000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 

நாட்டில் மாகாண பாடசாலைகளில் மாத்திரம் 8000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. 

இது மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. 

இதற்காக பட்டதாரி பயிலுனர்களாக அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

2018, 2019, 2020 பட்டமளிப்பு திட்டத்தின் கீழ் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடமிருந்து இவ்வாறு விண்ணப்பங்களை கோர அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

06-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

June 09, 2022

06-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
06-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 06-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

30-05-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

June 09, 2022

30-05-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
30-05-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 30-05-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

நாட்டின் முதலாவது சுதந்திர வீதி நூலகம் திறப்பு!

June 05, 2022


முதன்முறையாக நாட்டில் சுதந்திர வீதி நூலகம் ஒன்று கொழும்பு 7ல் திறக்கப்பட்டுள்ளது. 

சுமார் 2.3 மில்லியன் ரூபா செலவில் திறக்கப்பட்ட இந்த நூலகத்திற்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு: அரசின் புதிய திட்டம்! 

கொழும்பு 7ல் அமைந்துள்ள கொழும்பு வர்த்தக வளாகத்திற்கு பிரவேசிக்கும் நுழைவாயிலுக்கு அருகாமையில் இந்த வீதி நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை?

 

பொறுப்பாளரோ பாதுகாவலரோ இல்லாமல் தானியக்க முறையில் செயற்படும் இந்த நூலகத்திலிருந்து 24 மணி நேரமும் சேவையைப் பெறலாம். இந்த நூலகத்திலிருந்த புத்தகங்களை வெளியில் கொண்டு செல்ல அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டின் முதலாவது சுதந்திர வீதி நூலகம் திறப்பு! நாட்டின் முதலாவது சுதந்திர வீதி நூலகம் திறப்பு! Reviewed by Irumbu Thirai News on June 05, 2022 Rating: 5

அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு : அரசின் புதிய திட்டம்!

June 05, 2022

வேலை அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு 5 வருட கால சம்பளமில்லாத விடுமுறை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒப்சர்வர் பத்திரிகைக்கு தெரிவித்தார். 


அமைச்சர் குணவர்தனவின் கூற்றுப்படி, அரச ஊழியர்கள் 5 வருட முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் மூப்பு மற்றும் தரங்களை மீளப் பெறுவார்கள் என்று தி சண்டே ஒப்சர்வர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் அரச ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும். எனவே, இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு : அரசின் புதிய திட்டம்! அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு : அரசின் புதிய திட்டம்! Reviewed by Irumbu Thirai News on June 05, 2022 Rating: 5

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை?

June 05, 2022


தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டுஅரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில்  முன்வைக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை? அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை? Reviewed by Irumbu Thirai News on June 05, 2022 Rating: 5

27-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 27-05-2022

June 04, 2022


27-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Tamil


அங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

English


சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Sinhala


முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...

https://www.irumbuthirainews.com/2022/05/13-05-2022-official-government-gazette.html?m=1

27-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 27-05-2022 27-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 27-05-2022 Reviewed by Irumbu Thirai News on June 04, 2022 Rating: 5

துருக்கியின் பெயர் மாற்றம்! ஐ.நா.வும் அங்கீகாரம்!

June 02, 2022


துருக்கி விடுத்த கோரிக்கைக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையானது துருக்கியின் பெயரை துருக்கியே (Türkiye) என மாற்றியுள்ளது. 

துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லுவிடமிருந்து பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அனுப்பிய கடிதம் புதன்கிழமை வந்ததாகக் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார், 

அதாவது அனைத்து விவகாரங்களுக்கும் "துருக்கி" என்பதற்குப் பதிலாக "துர்க்கியே" என்று பயன்படுத்துமாறு கடிதத்தில் கோரியுள்ளதாக தெரிவித்தார்.

கடிதம் கிடைத்த தருணத்திலிருந்து நாட்டின் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்ததாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஒரு குறிப்பாணையை வெளியிட்டு, ஒவ்வொரு மொழியிலும் நாட்டை விவரிக்க Türkiye ஐப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டதை அடுத்து, துருக்கி தனது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயரை ஆங்கிலத்தில் Türkiye என மாற்றுவதற்கான நடவடிக்கையை டிசம்பரில் தொடங்கியது.

துருக்கிய மக்களின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளின் சிறந்த பிரதிநிதித்துவம் மற்றும் வெளிப்பாடு துர்கியே. என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


துருக்கியின் பெயர் மாற்றம்! ஐ.நா.வும் அங்கீகாரம்! துருக்கியின் பெயர் மாற்றம்! ஐ.நா.வும் அங்கீகாரம்! Reviewed by Irumbu Thirai News on June 02, 2022 Rating: 5

சா. தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான அறிவித்தல்!

June 01, 2022


2021 ற்குரிய சாதாரணதரப் பரீட்சை கடந்த மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (1) நிறைவடைந்தது. 

நடந்து முடிந்த பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பான அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன இன்று அறிவித்துள்ளார்.

85 பாடசாலைகளில் 106 மதிப்பீட்டு நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறும். மதிப்பீட்டு பணிகளுக்காக 32, 368  அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பரீட்சை எழுதிய மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த மேற்பார்வையாளர்! கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

முதலாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 26 ஆம் திகதி நிறைவடையும். 

இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஜூன் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 9ஆம் திகதி நிறைவடையும் என அவர் தெரிவித்தார்.

சா. தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான அறிவித்தல்! சா. தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on June 01, 2022 Rating: 5

பரீட்சை எழுதிய மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த மேற்பார்வையாளர்! கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

May 31, 2022


இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவிக்கு மண்டப மேற்பார்வையாளரினால் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த நிகழ்வொன்று அனுராதபுரம் நாச்சியாதீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் கல்வியமைச்சு விஷேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி ஹிந்தோகம பாடசாலை பரீட்சை நிலையத்தில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவிக்கு கேள்விக்கான விடையை சொல்லிக்கொடுக்கும் தோரணையில் குறித்த மாணவிக்கு பாலியல் ரீதியாக இடையூறு விளைவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்திய கல்வியமைச்சர் உடனடியாக இது தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார். 

பரீட்சைத் திணைக்களத்தினால் ஜூன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

அதற்கிணங்க தற்போது வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய, குறித்த மாணவி, பரீட்சை நிலைய மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர், குற்றச்சாட்டுக்குள்ளான  மேற்பார்வையாளர் (நோக்குனர்), குறித்த மண்டபத்தில் பரீட்சை எழுதிய ஏனைய பரீட்சார்த்திகள் ஆகியோரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குற்றம்சாட்டப்பட்ட மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் திணைக்கள மட்டத்தில உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் எக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை குறித்த மேற்பார்வையாளர் இந்த விடயத்தை மூடி மறைப்பதற்காக அந்த மாணவியின் குடும்பத்துக்கு லஞ்சம் வழங்க முற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அரச செலவுகளை கட்டுப்படுத்த ஓய்வு பெற்றோர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

சம்பவம் நடந்த தினத்தில் அந்தப் பாடசாலை ஆசிரியையிடம் குறித்த நிகழ்வை தெரிவித்த மாணவி அதற்கு அடுத்த நாள் தனது பெற்றோருடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட விஷேட ஊடக அறிக்கையை கீழே காணலாம்.



பரீட்சை எழுதிய மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த மேற்பார்வையாளர்! கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்! பரீட்சை எழுதிய மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த மேற்பார்வையாளர்! கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on May 31, 2022 Rating: 5

கின்னஸ் சாதனையுடன் ஆரம்பமான IPL இறுதிப் போட்டி! அறிமுகமான முதல் சீசனிலேயே சம்பியன் பட்டத்தை வென்ற அணி!

May 30, 2022


15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்றைய தினம் நிறைவடைந்தன. நேற்றைய இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பங்குபற்றின. 

இறுதிப் போட்டியானது கின்னஸ் உலக சாதனையுடனே ஆரம்பமானது. அதாவது போட்டிக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் சீருடையான ஜேர்சி மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இது 66 மீட்டர் நீளமும் 42 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.  

இந்த ஜேர்சியில் 15வது ஐபிஎல் தொடர் என குறிக்கப்பட்டதுடன் விளையாடிய 10 அணிகளின் இலச்சினைகளும் அதில் பொறிக்கப்பட்டிருந்தன. 

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நிறைவு விழாவில் இடம்பெற்றிருந்தது. 

இறுதிப்போட்டி நடைபெற்றது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திரமோடி மைதானத்திலாகும். 132,000 பேருக்கான இருக்கை வசதிகள் இதில் உள்ளன.

இம்முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது இந்த சீசனில்தான் அறிமுகமான அணி என்பது குறிப்பிடத்தக்கது. 


கின்னஸ் சாதனையுடன் ஆரம்பமான IPL இறுதிப் போட்டி! அறிமுகமான முதல் சீசனிலேயே சம்பியன் பட்டத்தை வென்ற அணி! கின்னஸ் சாதனையுடன் ஆரம்பமான IPL இறுதிப் போட்டி! அறிமுகமான முதல் சீசனிலேயே சம்பியன் பட்டத்தை வென்ற அணி! Reviewed by Irumbu Thirai News on May 30, 2022 Rating: 5
Powered by Blogger.