தரம் 1 மாணவர் அனுமதி - 2023 (விண்ணப்பமும் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும்)
2023 ம் வருடத்திற்காக தரம் 1க்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பம் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள் என்பவற்றை கல்வி அமைச்சு இன்றைய தினம் (16) வெளியிட்டுள்ளது.
- சகல தகுதிகளும் 2022 ஜூன் 30ஆம் திகதிக்கு செல்லுபடியானதாக அமையும்.
- 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதியன்று பிள்ளையின் வயது 05 வருடங்கள் பூரணமாய் இருத்தல் வேண்டும். 2023 ஜனவரி மாதம் 31ஆம் திகதியன்று 06 அல்லது 06 வயதை விடக்கூடிய பிள்ளைகள், 6 வயதுக்கு குறைந்த தகைமைகளையுடைய சகல பிள்ளைகளையும் அனுமதித்த பின்னரே சேர்த்துக் கொள்ளப்படுவர்.
- வகுப்பு ஒன்றில் இருக்க வேண்டிய உச்ச மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகும்.
- சகல விண்ணப்பதாரிகளும் குறைந்தபட்சம் தமக்கு அண்மித்த மாகாண பாடசாலைகள் 03 உட்பட பாடசாலை 06 க்காவது விண்ணப்பித்தல் கட்டாயமாகும். பாடசாலைகளை பெயரிடும் போது அனைத்து விண்ணப்பங்களும் பாடசாலைகளின் விருப்பு முன்னுரிமைக்கேற்ப குறிப்பிடுதல் வேண்டும்.
