குறைக்கப்பட்டது கல்விசாரா ஊழியர்களின் வேலை நேரம் (சுற்றுநிருபம் இணைப்பு)

June 17, 2022

தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக தேசிய பாடசாலைகளில் கடமை புரியும் கல்விசாரா ஊழியர்கள் பிற்பகல் 2 மணிக்கு தமது பணியை நிறைவு செய்யலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 


தரம் 1 மாணவர் அனுமதி - 2023 (விண்ணப்பமும் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும்) 


இந்த நடைமுறை எதிர்வரும் 31 - 12 - 2022 வரை அல்லது மீண்டும் வேறு அறிவித்தலில் குறிப்பிடப்படும் திகதி இவை இரண்டிலும் எந்த திகதி முன்னதாக வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும். 

மேலும் நிறுவன செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஊழியர்கள் தமது வேலை நேரம் நிறைவடைவதற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாக செல்வதற்கு அனுமதி வழங்க பீடாதிபதி / ஆசிரியர் கலாசாலை அதிபர்கள், ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.






குறைக்கப்பட்டது கல்விசாரா ஊழியர்களின் வேலை நேரம் (சுற்றுநிருபம் இணைப்பு) குறைக்கப்பட்டது கல்விசாரா ஊழியர்களின் வேலை நேரம் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on June 17, 2022 Rating: 5

இரு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான சுற்றுநிறுபம் (தமிழில்)

June 17, 2022

அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல் என்ற தலைப்பிலான சுற்று நிருபத்தை இன்றைய தினம்(17) பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கை 15/2022 மூலம் தற்போது அரச அலுவலகங்களை மூடும்படி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள வாரத்தின் வெள்ளிக்கிழமை தினத்திற்கு மேலதிகமாக உள்ள வாரத்தின் மிகுதியாக உள்ள ஏனைய வேலை நாட்களிலும் 20 - 6 - 2022 ஆம் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் இரண்டு வார காலத்திற்கு அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு வரவழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை 

 
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட தமிழ் மொழிமூல சுற்றறிக்கையை கீழே காணலாம். 

இரு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான சுற்றுநிறுபம் (தமிழில்) இரு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான சுற்றுநிறுபம் (தமிழில்) Reviewed by Irumbu Thirai News on June 17, 2022 Rating: 5

அடுத்த இரு வாரங்கள் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் Online முறையில்....

June 17, 2022

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து பிரச்சினைக்கு மத்தியில் அரச சேவை மற்றும் பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் இன்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. 
 
இதில் ஜனாதிபதியின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  
 
இதன்போது அடுத்த இரு வாரங்களுக்கு அரச சேவை மற்றும் பாடசாலை என்பவற்றின் நடவடிக்கைகளை 

Online முறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அந்த வகையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பான இரண்டு சுற்றறிக்கைகளை பொது நிர்வாக அமைச்சும் கல்வி அமைச்சும் வெளியிட்டுள்ளன.
அடுத்த இரு வாரங்கள் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் Online முறையில்.... அடுத்த இரு வாரங்கள் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் Online முறையில்.... Reviewed by Irumbu Thirai News on June 17, 2022 Rating: 5

நகர்ப்புற பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்!

June 17, 2022


நகர்ப்புற பாடசாலைகளுக்குச் செல்லும் தூர பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமக்கு அருகில் உள்ள பாடசாலையில் இணைந்து கொள்ளுமாறு கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் கித்சிரி லியனகே தெரிவித்துள்ளார்.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோர்க்கு எரிபொருளில் முன்னுரிமை!

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்துப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுக்க வேண்டிய நிலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

திங்கள் முதல் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் ஒன்லைன் முறையில்...?

தரம் 1 மாணவர் அனுமதி - 2023 (விண்ணப்பமும் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும்) 

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை 

அந்த வகையில் இந்த வருட கடைசி வரை இவ்வாறு மாணவர்கள் தமது பிரதேசத்திற்கு அருகில் உள்ள பாடசாலையில் இணைவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நகர்ப்புற பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்! நகர்ப்புற பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on June 17, 2022 Rating: 5

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோர்க்கு எரிபொருளில் முன்னுரிமை!

June 17, 2022

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (17) முதல் இடம்பெறுகின்றன. 

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் போது பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் மதிப்பீட்டின் போது ஏற்படக்கூடிய போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு நேற்றைய தினம்  கலந்துரையாடலில் ஈடுபட்டது. அந்தக் கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோர்க்கு எரிபொருளில் முன்னுரிமை! பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோர்க்கு எரிபொருளில் முன்னுரிமை! Reviewed by Irumbu Thirai News on June 17, 2022 Rating: 5

திங்கள் முதல் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் ஒன்லைன் முறையில்...?

June 16, 2022

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளிலும் ஒன்லைன் முறையில் செயற்பாடுகளை 1 அல்லது 2 வாரங்கள் நடத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. 
 
இதேவேளை, எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு நாளை (17) அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இன்று அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 

எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், நாளாந்தம் மேலதிக கொடுப்பனவாக ரூபா. 1200 ரூபா வழங்கவும், விடைத்தாள் மதிப்பீட்டிற்கான கொடுப்பனவை 25 வீதத்தால் அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார். 
 
இதேவேளை, 2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையத்தளத்தில் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாணவர் ஒரு மேல்முறையீட்டு படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் அந்த விண்ணப்பத்தின் மூலம் 3 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
திங்கள் முதல் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் ஒன்லைன் முறையில்...? திங்கள் முதல் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் ஒன்லைன் முறையில்...? Reviewed by Irumbu Thirai News on June 16, 2022 Rating: 5

தரம் 1 மாணவர் அனுமதி - 2023 (விண்ணப்பமும் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும்)

June 16, 2022

2023 ம் வருடத்திற்காக தரம் 1க்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பம் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள் என்பவற்றை கல்வி அமைச்சு இன்றைய தினம் (16) வெளியிட்டுள்ளது. 
 
  • சகல தகுதிகளும் 2022 ஜூன் 30ஆம் திகதிக்கு செல்லுபடியானதாக அமையும். 
 
  • 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதியன்று பிள்ளையின் வயது 05 வருடங்கள் பூரணமாய் இருத்தல் வேண்டும். 2023 ஜனவரி மாதம் 31ஆம் திகதியன்று 06 அல்லது 06 வயதை விடக்கூடிய பிள்ளைகள், 6 வயதுக்கு குறைந்த தகைமைகளையுடைய சகல பிள்ளைகளையும் அனுமதித்த பின்னரே சேர்த்துக் கொள்ளப்படுவர். 
 
  • வகுப்பு ஒன்றில் இருக்க வேண்டிய உச்ச மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகும். 
 
  • சகல விண்ணப்பதாரிகளும் குறைந்தபட்சம் தமக்கு அண்மித்த மாகாண பாடசாலைகள் 03 உட்பட பாடசாலை 06 க்காவது விண்ணப்பித்தல் கட்டாயமாகும். பாடசாலைகளை பெயரிடும் போது அனைத்து விண்ணப்பங்களும் பாடசாலைகளின் விருப்பு முன்னுரிமைக்கேற்ப குறிப்பிடுதல் வேண்டும். 

ஒவ்வொரு பிரிவின் கீழும் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் விகிதாசாரம்
 
(1) பாடசாலைக்கு அண்மித்து வசிப்போரின் பிள்ளைகள் 50 %.
 
(2) குறித்த பாடசாலையில் பழைய மாணவர்களாக உள்ள பெற்றோரின் பிள்ளைகள் 25 %. 
 
(3) தற்போது குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் சகோதர / சகோதரிகள் 14%.
 
(4) கல்வி அமைச்சின் கீழ் அரச பாடசாலைக் கல்வியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவோரின் பிள்ளைகள் 6 %. 
 
(5) அரச சேவை தேவையின் பொருட்டு இடமாற்றம் பெற்ற அரச / கூட்டுத்தாபன / நியதிச்சட்ட சபை/ அரச வங்கி அலுவலர்களின் பிள்ளைகள் 4 %. 
 
(6) பிள்ளையுடன் வெளிநாட்டில் வசித்து விட்டு வந்தவர்களின் பிள்ளைகள் 1 % 
 
விண்ணப்ப முடிவுத் திகதி: 16-07-2022. 
 
விண்ணப்பத்தையும் அறிவுறுத்தல்களையும் பார்வையிடவும் டவுன்லோட் செய்துகொள்ளவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
தரம் 1 மாணவர் அனுமதி - 2023 (விண்ணப்பமும் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும்) தரம் 1 மாணவர் அனுமதி - 2023 (விண்ணப்பமும் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும்) Reviewed by Irumbu Thirai News on June 16, 2022 Rating: 5

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை

June 16, 2022


அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு நேற்றைய தினம் (15) வெளியிட்டுள்ளது. 

15/2022 என்ற இலக்கம் கொண்ட குறித்த சுற்றறிக்கை அரச ஊழியர்கள் ஒரு நாள் வீட்டிலிருந்து விவசாய மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பளித்தல் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.




அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை Reviewed by Irumbu Thirai News on June 16, 2022 Rating: 5

விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பணவில் திருத்தம்

June 15, 2022


தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கான கொடுப்பனவில் திருத்தங்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த 2021 (2022) சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுகாக வழங்கும் கொடுப்பனவிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பணவில் திருத்தம் விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பணவில் திருத்தம் Reviewed by Irumbu Thirai News on June 15, 2022 Rating: 5

13-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

June 14, 2022

13-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், 
முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் தொடர்பான சுற்றுநிருபத்தை திருத்துதல், 
அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை வழங்கல், 
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கல் உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
13-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 13-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on June 14, 2022 Rating: 5

10-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-06-2022

June 11, 2022

10-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
10-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-06-2022 10-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-06-2022 Reviewed by Irumbu Thirai News on June 11, 2022 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜுன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்டது)

June 09, 2022

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜூன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
நாட்டின் தேசிய பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை உட்பட 09 வகையான பரீட்சைகள் ஜுன் மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம்.

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜுன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்டது) பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜுன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்டது) Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை!

June 09, 2022

நாட்டில் நாளை(10) முதல் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் நாளை முதல் கட்டாயம் இல்லை. எவ்வாறாயினும் அதை பயன்படுத்த விரும்புபவர்கள் எவ்வித தடையுமின்றி பயன்படுத்தலாம். சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இதைத் தொடர்ந்து அணிவது பொருத்தமானது. 

அதேபோன்று நாளை முதல் பிசிஆர் மற்றும் என்டிஜன் (PCR & Antigen) பரிசோதனைகளும் அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலையில் 408 பேர் மாத்திரமே கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். 


நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை! நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை! Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5
Powered by Blogger.