போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பான அறிவித்தல் (தமிழ் மற்றும் சிங்களத்தில் முழுமையாக)

June 20, 2022

போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பாக கல்வியமைச்சால் 16-6-2022 அன்று வெளியிடப்பட்ட அறிவித்தலின் முழுமையான தமிழ் வடிவத்தை இங்கே தருகிறோம். 

 
சகல மாகாண அரச சேவை ஆணைக்குழு செயலாளர்கள், 
சகல மாகாண கல்விச் செயலாளர்கள், 
சகல மாகாண கல்விப் பணிப்பாளர்கள், 
சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள், 
சகல தேசிய பாடசாலை அதிபர்கள். 
 
 
நிலவும் போக்குவரத்து சிக்கல் காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகை வழங்கல் 
 
நிலவும் போக்குவரத்து சிக்கல் காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் பின்வரும் விடயங்களுக்கு உட்பட்ட விதத்தில் குறித்த ஆசிரியர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டு வசதியான பாடசாலைக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்குவதற்கு கருத்தில் கொள்ளுமாறு இத்தால் அறியத்தருகிறேன். 
 
(1) அடிப்படை விடயம்: 
 
1.1 ஒரே மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கிடையில் மற்றும் தேசிய பாடசாலை - மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சேவை இணைப்பு செய்வதற்கான அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
1.2 இரண்டு மாகாணங்களுக்கு இடையில் மாகாண பாடசாலை ஆசிரியர்களை இணைப்பு செய்வது, சம்பந்தப்பட்ட மாகாணங்களின் மாகாண அரச சேவை ஆணைக்குழு செயலாளர்களின் அனுமதியுடன் செய்வதற்கு யோசனை முன்வைக்கப்படுகிறது. 
 
1.3 மாகாணங்களுக்கு இடையில் இடம்பெறும் தேசிய பாடசாலைகளுக்கிடையிலான இணைப்பு கல்வி அமைச்சின் கல்வி பணிப்பாளர் (ஆசிரியர் இடமாற்றம்) மூலம் இடம்பெற வேண்டும். 
 
 
(2) மேலுள்ள சகல வழிகளிலும் இணைப்பு செய்தல், பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தடை இல்லாத முறையில் சம்பந்தப்பட்ட இரு பாடசாலைகளினதும் அதிபர்களின் எழுத்துமூல உடன்பாட்டுடன் மாத்திரம் இடம்பெற வேண்டும். 
 

(3) இணைப்பு நிபந்தனைகள்: 
 
3.1 கோரிக்கை விடுக்கும் ஆசிரியர் குறித்த பாடசாலையில் மேலதிகம் என்றால், அவர் அல்லது அவளுக்காக பதிலீடு பெற்றுக் கொடுப்பது அவசியம் இல்லை. 
 
3.2 கோரிக்கை விடுக்கும் ஆசிரியர் மேலதிகமானவர் இல்லை என்றால் பொருத்தமான பதிலீடு பெற்று கொடுத்ததன் பின்னர் இணைப்பு மேற்கொள்ள வேண்டும். 
 
3.3 அதிபர்களின் உடன்பாட்டுடன் பரஸ்பர இடமாற்றம் மேற்கொள்ளும் முறையிலேயே இந்த இணைப்பும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
 
(4) கர்ப்பிணிகள் மற்றும் வைத்திய சிபாரிசுக்கு அமைய மேற்கொள்ளும் இணைப்பு குறித்த வைத்திய சான்றிதழின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு மேற்கொள்ள வேண்டும். (2007/ 20 சுற்றுநிருபம் 3.4.111 ற்கு அமைய) 
 
 
(5) மாகாணக் கல்விப் பணிப்பாளர் மூலம் தேசிய பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளும் இணைப்பு பற்றிய கடிதத்தின் பிரதி கல்வி அமைச்சின் கல்வி பணிப்பாளர் (ஆசிரியர் இடமாற்றம்) க்கு அனுப்ப வேண்டும். 
 
(6) இந்த இணைப்பானது 2022-12-31 ம் திகதிவரை மட்டும் செல்லுபடியான விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். 
 
(7) இன்னும் இந்த இணைப்பு மேற்கொள்ளலானது குறித்த பாடசாலைக்கான இடமாற்றம் அல்ல என்பதுடன் இணைப்பு காலப்பகுதியினுள் ஆசிரியரின் சம்பளம் நிரந்தர சேவை நிலையத்தால் கொடுக்கப்பட வேண்டும். 
 
எம்.என். ரணசிங்க. 
செயலாளர். 
கல்வி அமைச்சு. 
 
 
 
குறித்த அறிவித்தலின் சிங்கள மொழி மூலத்தை கீழே காணலாம். 


 
போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பான அறிவித்தல் (தமிழ் மற்றும் சிங்களத்தில் முழுமையாக) போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பான அறிவித்தல் (தமிழ் மற்றும் சிங்களத்தில் முழுமையாக) Reviewed by Irumbu Thirai News on June 20, 2022 Rating: 5

விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து நாளை முதல் ஆசிரியர்கள் விலகத் தீர்மானம்! - ஜோசப் ஸ்டாலின்

June 19, 2022


சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து நாளை (20) முதல் ஆசிரியர்கள் விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமக்குத் தேவையான எரிபொருளை பெற்றுத்தரக்கோரி எம்பிலிப்பட்டிய, ஹட்டன், காலி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் தெரிவிக்கையில், 110 விடைத்தாள் திருத்தம் மத்திய நிலையங்கள் இருக்கும் நிலையில் அதில் 5, 6 மத்திய நிலையங்கள் தற்போதைய நிலையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எரிபொருள் பிரச்சினை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இன்று காலையும் பேசினேன்... விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கடமைக்கு செல்வதற்கு முன்னர் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது கடமை நிறைவடைந்து செல்லும்போது மாலை 5 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதியிலும் எரிபொருளை பெறச் சென்றால் அதனை வழங்க முடியுமாக இருக்கும் என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை காட்டி எரிபொருள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் ஏச்சு பேச்சு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து நாளை முதல் ஆசிரியர்கள் விலகத் தீர்மானம்! - ஜோசப் ஸ்டாலின் விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து நாளை முதல் ஆசிரியர்கள் விலகத் தீர்மானம்! - ஜோசப் ஸ்டாலின் Reviewed by Irumbu Thirai News on June 19, 2022 Rating: 5

கல்வி அமைச்சர், செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பு: தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்!

June 19, 2022

இன்று கல்வி அமைச்சர், கல்வியமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோர் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்களை இங்கு தருகிறோம். 

1) கொழும்பு வலயம் மற்றும் ஏனைய நகர்ப்புற பாடசாலைகள் ஜுன் 20 முதல் 24 வரை மூடப்படும். 

2) ஏனைய பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போக்குவரத்து சிரமமின்றி வர முடியுமாக இருந்தால் பாடசாலையை நடத்தலாம். 

3) இது விடுமுறை காலம். எனவே ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்வது கட்டாயம் அல்ல. அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் தொண்டர் அடிப்படையில் பாடசாலை சென்று பணி புரியலாம். 

4) இந்த வாரம் நடைபெறாத பாடசாலைகள் வாரத்தில் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பாக பதிவுகளை வைத்திருக்க வேண்டும். 

5) Nenasa TV, E-Thakshalawa, LMS, NIE YouTube channel என்பவற்றிற்கு மாணவர்கள் வழி காட்டப்பட வேண்டும்.

6) ஆகஸ்ட் மாத தவணை விடுமுறை குறைக்கப்படும். 

7) இந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய ரீதியான நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகும்.

குறிப்பு:- இந்த ஊடக சந்திப்பு தொடர்பான முழுமையான விவரங்களை விரைவில் எமது இணையதளத்தில் பதிவேற்றுவோம்.
 
கல்வி அமைச்சர், செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பு: தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்! கல்வி அமைச்சர், செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பு: தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்! Reviewed by Irumbu Thirai News on June 19, 2022 Rating: 5

National Level ICT Championship Competition -2022 (Registration Date Extended)

June 19, 2022

National Level ICT Championship Competition -2022 registration Date extended to 2022.06.30. 
 
All Particpiants Should Register for the Competition by only using the online form. 
 
Click the link below for full details & online application.
National Level ICT Championship Competition -2022 (Registration Date Extended) National Level ICT Championship Competition -2022 (Registration Date Extended) Reviewed by Irumbu Thirai News on June 19, 2022 Rating: 5

Annual Transfer Orders - 2022 (Appeals)

June 19, 2022


2022 வருடாந்த இடமாற்றம் கட்டளைகள் தொடர்பில் அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடுகளை சமர்ப்பித்தல் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 

 

மேல் முறையீடுகள் தொடர்பில் ஏற்கனவே தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய மேல்முறையீடுகள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.


Annual Transfer Orders - 2022 (Appeals) Annual Transfer Orders - 2022 (Appeals) Reviewed by Irumbu Thirai News on June 19, 2022 Rating: 5

பிற்போடப்பட்ட ஜூன் மாத பரீட்சைகள்: பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு!

June 18, 2022


2022-06-17 ம் திகதிய 16/2022 இலக்க அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் அபேட்சகர்களின் வேண்டுகோளை கருத்திற்கொண்டு கீழே குறிப்பிடப்பட்ட பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



பிற்போடப்பட்ட ஜூன் மாத பரீட்சைகள்: பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு! பிற்போடப்பட்ட ஜூன் மாத பரீட்சைகள்: பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on June 18, 2022 Rating: 5

நாளை நடைபெறவுள்ள வெளிநாட்டு சேவை போட்டிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்!

June 18, 2022

நாளை நடைபெறவுள்ள வெளிநாட்டு சேவையின் மூன்றாம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை திட்டமிட்டபடி உரிய நேரத்திற்கு நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக பரீட்சைக்கு தாமதமாக வருபவர்களுக்கும் பரீட்சை எழுதுவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார். 

நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த பரீட்சை 60 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலையில் வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் அதிகமாக காணப்படுவதாகவும் எனவே பரீட்சையை தாமதமாக்காமல் விரைவாக நடத்த வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது எனவே திட்டமிட்டபடி உரிய தினத்தில் பரீட்சை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

நாளை நடைபெறவுள்ள வெளிநாட்டு சேவை போட்டிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! நாளை நடைபெறவுள்ள வெளிநாட்டு சேவை போட்டிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on June 18, 2022 Rating: 5

பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது? கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட முழுமையான அறிக்கை!

June 18, 2022

கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கல்வியமச்சு வெளியிட்டுள்ளது. 
 
கல்வியமைச்சின் இந்த அறிவித்தலை முழுமையாக தமிழில் தருகிறோம். 

 
2022 ஜூன் 20 - 24 வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 
 
கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கிடையில் 2022-6-18 அன்று இணைய வழியில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து 2022-6-20 முதல் 2022-6-24 வரை உள்ள ஒரு வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை கீழே உளள முறைகளில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள் என்பவர்களின் கருத்துக்கள் மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடாகப் பெறப்பட்டு அவையும் இந்த தீர்மானம் மேற்கொள்ளலின் போது கவனத்தில் கொள்ளப்பட்டன. 
 
1. பிரதேச மட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் போக்குவரத்து சிரமங்களை ஏற்படுத்தாத வகையில் பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்திச் செல்ல மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
2. அதேபோன்று குறித்த பாடசாலைக்கு வர முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அந்த நிலையிலும் குறித்த பாடசாலையை நடாத்திச் செல்ல முடியுமான நிலை காணப்பட்டால் அது தொடர்பாக அதிபர்கள் வலயக்கல்வி பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
3. பாடசாலை நடைபெற்றும் குறித்த மாணவர் குழுவுக்கு வர முடியாவிட்டால் அந்த மாணவர் தொடர்பாக இணையவழியில் கற்பிப்பதற்கான வசதி காணப்பட்டால் அந்த முறையை பயன்படுத்த முடியும். 
 
4. மேல் மாகாணத்தில் கொழும்பு வலயம் மற்றும் அண்மைய நகர பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணத்தின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் நடத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் பிரதான நகரங்கள் அல்லாத பிரதேசங்களில் காணப்படும் பாடசாலைகள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களின் கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

5. வாரநாட்களில் இணைய வழியில் கற்பிக்க வசதியான முறையில் காலை 8 மணி முதல் பகல் 1 மணிவரை மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உடன்பட்டுள்ளது. 
 
இந்த காலப்பகுதியினுள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் சுயமாக செய்யப்படும் வேலைகளை கல்வி அமைச்சு பாராட்டும் அதேவேளை,  இதை கருத்திற் கொண்டு செயற்படுமாறு மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த வாரத்தில் இடம்பெறும் செயற்பாடுகளை அவதானித்து எதிர்வரும் சனிக்கிழமை அதாவது 2022-6-25ஆம் திகதி மாகாண கல்வி அதிகாரிகளுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் ஜூன் 27 ஆரம்பமாகும் வாரம் தொடர்பாக தீர்மானங்கள் வெளியிடப்படும். 
 
ஊடகப்பிரிவு. 
கல்வி அமைச்சு. 
 
இது தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையைக் கீழே காணலாம்.
 


பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது? கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட முழுமையான அறிக்கை! பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது? கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட முழுமையான அறிக்கை! Reviewed by Irumbu Thirai News on June 18, 2022 Rating: 5

17-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-06-2022

June 18, 2022

17-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
17-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-06-2022 17-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-06-2022 Reviewed by Irumbu Thirai News on June 18, 2022 Rating: 5

மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழகம்! மாணவர்களையும் வெளியேறுமாறு உத்தரவு!

June 18, 2022

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சகலவிதமான கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் என்பன மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ஸ தெரிவித்துள்ளார். 

 இரு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான சுற்றுநிறுபம் (தமிழில்)


தற்போது நிலவும் நெருக்கடி நிலைமைகள் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இது மாத்திரமன்றி விடுதிகளில் உள்ள மாணவர்களும் உடனடியாக விடுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழகம்! மாணவர்களையும் வெளியேறுமாறு உத்தரவு! மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழகம்! மாணவர்களையும் வெளியேறுமாறு உத்தரவு! Reviewed by Irumbu Thirai News on June 18, 2022 Rating: 5

குறைக்கப்பட்டது கல்விசாரா ஊழியர்களின் வேலை நேரம் (சுற்றுநிருபம் இணைப்பு)

June 17, 2022

தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக தேசிய பாடசாலைகளில் கடமை புரியும் கல்விசாரா ஊழியர்கள் பிற்பகல் 2 மணிக்கு தமது பணியை நிறைவு செய்யலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 


தரம் 1 மாணவர் அனுமதி - 2023 (விண்ணப்பமும் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும்) 


இந்த நடைமுறை எதிர்வரும் 31 - 12 - 2022 வரை அல்லது மீண்டும் வேறு அறிவித்தலில் குறிப்பிடப்படும் திகதி இவை இரண்டிலும் எந்த திகதி முன்னதாக வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும். 

மேலும் நிறுவன செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஊழியர்கள் தமது வேலை நேரம் நிறைவடைவதற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாக செல்வதற்கு அனுமதி வழங்க பீடாதிபதி / ஆசிரியர் கலாசாலை அதிபர்கள், ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.






குறைக்கப்பட்டது கல்விசாரா ஊழியர்களின் வேலை நேரம் (சுற்றுநிருபம் இணைப்பு) குறைக்கப்பட்டது கல்விசாரா ஊழியர்களின் வேலை நேரம் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on June 17, 2022 Rating: 5

இரு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான சுற்றுநிறுபம் (தமிழில்)

June 17, 2022

அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல் என்ற தலைப்பிலான சுற்று நிருபத்தை இன்றைய தினம்(17) பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கை 15/2022 மூலம் தற்போது அரச அலுவலகங்களை மூடும்படி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள வாரத்தின் வெள்ளிக்கிழமை தினத்திற்கு மேலதிகமாக உள்ள வாரத்தின் மிகுதியாக உள்ள ஏனைய வேலை நாட்களிலும் 20 - 6 - 2022 ஆம் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் இரண்டு வார காலத்திற்கு அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு வரவழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை 

 
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட தமிழ் மொழிமூல சுற்றறிக்கையை கீழே காணலாம். 

இரு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான சுற்றுநிறுபம் (தமிழில்) இரு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான சுற்றுநிறுபம் (தமிழில்) Reviewed by Irumbu Thirai News on June 17, 2022 Rating: 5

அடுத்த இரு வாரங்கள் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் Online முறையில்....

June 17, 2022

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து பிரச்சினைக்கு மத்தியில் அரச சேவை மற்றும் பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் இன்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. 
 
இதில் ஜனாதிபதியின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  
 
இதன்போது அடுத்த இரு வாரங்களுக்கு அரச சேவை மற்றும் பாடசாலை என்பவற்றின் நடவடிக்கைகளை 

Online முறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அந்த வகையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பான இரண்டு சுற்றறிக்கைகளை பொது நிர்வாக அமைச்சும் கல்வி அமைச்சும் வெளியிட்டுள்ளன.
அடுத்த இரு வாரங்கள் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் Online முறையில்.... அடுத்த இரு வாரங்கள் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் Online முறையில்.... Reviewed by Irumbu Thirai News on June 17, 2022 Rating: 5
Powered by Blogger.