பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை! கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்!
நாட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற் கொண்டே புதிய தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் புதிய அறிவித்தலின்படி கடந்த வாரத்தை போன்று மேல் மாகாணம் கொழும்பு வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மற்றும் நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இந்த வாரம் மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பிரதான நகர பாடசாலை தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போக்குவரத்து பிரச்சனைகள் காணப்படாவிட்டால் மாத்திரம் செவ்வாய், புதன் வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மாத்திரம் பாடசாலை நடத்தப்பட வேண்டும்.
குறித்த கிராமிய பாடசாலைகளை நடாததுவது தொடர்பில் சிக்கல் நிலை இருந்தால் அது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி பொருத்தமான முடிவை எடுக்கலாம்.
இதேவேளை நாளை திங்கட்கிழமை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தவணை பரீட்சை
ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தால் அந்த பரிட்சைகளை இரண்டு வாரத்தில் பின்னர் நடத்தும் படியும் கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை பாடசாலை நடைபெறாவிட்டால் மாணவர்களுக்கு இணையவழி மூலம் கற்பித்தலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடசாலை நடைபெற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக வரமுடியாத மாணவர்களுக்கும் இணையவழியில் கற்பித்தலை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.