அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான புதிய சுற்றறிக்கை (மும்மொழிகளிலும்)
16 / 2022 (1) இலக்கம் கொண்ட குறித்த சுற்றறிக்கை 26-06-2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 17 - 6 - 2022 ஆம் திகதி 16/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையை மறு அறிவித்தல் வரை பின்பற்றுமாறு கூறியே புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான சுற்றறிக்கையை இந்த லிங்கில் சென்று பார்வையிடலாம்.
https://www.irumbuthirainews.com/2022/06/blog-post_79.html
ஏனெனில் ஏற்கனவே வெளியான சுற்றறிக்கையில் இரு வாரங்களுக்கே அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு வரவழைப்பதை மட்டுப்படுத்துமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மறு அறிவித்தல் வரை அதை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகளுக்கு தடையில்லாத விதத்தில் ஆகக்குறைந்த ஊழியர்களை மட்டுமே அமைக்குமாறு கூறப்பட்டுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மும்மொழிகளிலும் கீழே காணலாம்.