வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2022/2023 (சப்பிரகமுவ மாகாணம்)
சப்பிரகமுவ மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வலயத்தினுள் அல்லது ஒரு வலயத்திலிருந்து இன்னொரு வலயத்திற்கு அல்லது வேறு மாகாணத்திற்கு அல்லது தேசிய பாடசாலைக்கு செல்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மேற்படி 04 முறைகளிலும் விண்ணப்பிக்கும் ஆசிரியர் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
31-12-2022 ற்கு 5 வருடங்களை பூர்த்தி செய்த சகலரும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்காதவர்கள் சப்ரகமுவ மாகாணத்தில் எந்த இடத்திற்கும் இடமாற்றம் பெற்றுச் செல்ல விரும்புவதாக கருதப்படும்.
சகல விண்ணப்பங்களும் ஒன்லைன் முறையிலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Online இல் விண்ணப்பிக்கும்போது தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் கீழ்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.
071-8111513. (அன்சப் - உதவிப் பணிப்பாளர்)
070-4001966. (WhatsApp)
072-2355681 (WhatsApp)
ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தினம்: 31-07-2022.
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
இலங்கையின் எரிபொருள் நெருக்கடி: விரைந்து செயற்பட்ட அரச ஊழியர்! வீட்டில் இடம்பெற்ற பிரசவம்!
பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை! கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்!