இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவித்தல்கள் / Important Notices from The Open University of Sri Lanka
(01) ஜூலை 5, 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழா மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
(02) ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை நடைபெறவிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.
24-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 24-06-2022
27-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
27-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன.
வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2022/2023 (சப்பிரகமுவ மாகாணம்)
சப்பிரகமுவ மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வலயத்தினுள் அல்லது ஒரு வலயத்திலிருந்து இன்னொரு வலயத்திற்கு அல்லது வேறு மாகாணத்திற்கு அல்லது தேசிய பாடசாலைக்கு செல்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மேற்படி 04 முறைகளிலும் விண்ணப்பிக்கும் ஆசிரியர் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
31-12-2022 ற்கு 5 வருடங்களை பூர்த்தி செய்த சகலரும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்காதவர்கள் சப்ரகமுவ மாகாணத்தில் எந்த இடத்திற்கும் இடமாற்றம் பெற்றுச் செல்ல விரும்புவதாக கருதப்படும்.
சகல விண்ணப்பங்களும் ஒன்லைன் முறையிலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Online இல் விண்ணப்பிக்கும்போது தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் கீழ்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.
071-8111513. (அன்சப் - உதவிப் பணிப்பாளர்)
070-4001966. (WhatsApp)
072-2355681 (WhatsApp)
ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தினம்: 31-07-2022.
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
இலங்கையின் எரிபொருள் நெருக்கடி: விரைந்து செயற்பட்ட அரச ஊழியர்! வீட்டில் இடம்பெற்ற பிரசவம்!
பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை! கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்!
அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான புதிய சுற்றறிக்கை (மும்மொழிகளிலும்)
16 / 2022 (1) இலக்கம் கொண்ட குறித்த சுற்றறிக்கை 26-06-2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 17 - 6 - 2022 ஆம் திகதி 16/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையை மறு அறிவித்தல் வரை பின்பற்றுமாறு கூறியே புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான சுற்றறிக்கையை இந்த லிங்கில் சென்று பார்வையிடலாம்.
https://www.irumbuthirainews.com/2022/06/blog-post_79.html
ஏனெனில் ஏற்கனவே வெளியான சுற்றறிக்கையில் இரு வாரங்களுக்கே அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு வரவழைப்பதை மட்டுப்படுத்துமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மறு அறிவித்தல் வரை அதை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகளுக்கு தடையில்லாத விதத்தில் ஆகக்குறைந்த ஊழியர்களை மட்டுமே அமைக்குமாறு கூறப்பட்டுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மும்மொழிகளிலும் கீழே காணலாம்.
இலங்கையின் எரிபொருள் நெருக்கடி: விரைந்து செயற்பட்ட அரச ஊழியர்! வீட்டில் இடம்பெற்ற பிரசவம்!
இலங்கையில் தற்போது உக்கிரமடைந்துள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சனை என்பவற்றின் காரணமாக பல்வேறு துறைகளின் செயற்பாடுகளும் முடங்கும் நிலையை அடைந்துள்ளது.
பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை! கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்!
நாட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற் கொண்டே புதிய தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் புதிய அறிவித்தலின்படி கடந்த வாரத்தை போன்று மேல் மாகாணம் கொழும்பு வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மற்றும் நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இந்த வாரம் மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பிரதான நகர பாடசாலை தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போக்குவரத்து பிரச்சனைகள் காணப்படாவிட்டால் மாத்திரம் செவ்வாய், புதன் வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மாத்திரம் பாடசாலை நடத்தப்பட வேண்டும்.
குறித்த கிராமிய பாடசாலைகளை நடாததுவது தொடர்பில் சிக்கல் நிலை இருந்தால் அது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி பொருத்தமான முடிவை எடுக்கலாம்.
இதேவேளை நாளை திங்கட்கிழமை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தவணை பரீட்சை
ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தால் அந்த பரிட்சைகளை இரண்டு வாரத்தில் பின்னர் நடத்தும் படியும் கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை பாடசாலை நடைபெறாவிட்டால் மாணவர்களுக்கு இணையவழி மூலம் கற்பித்தலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடசாலை நடைபெற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக வரமுடியாத மாணவர்களுக்கும் இணையவழியில் கற்பித்தலை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Bachelor of Information Technology (BIT - External) - 2022 (University of Colombo)
Short course in Professional Certificate in Revit Architecture (Online)
Results Released - Bachelor of Arts (BA- External) - 2020 (2021)
அரச ஊழியர்கள் தற்காலிகமாக உள்நாட்டிலேயே தனியார் துறையில் பணிபுரியலாம்? இரு வாரங்களில் அறிக்கை!
07 பேர் அடங்கிய குறித்த குழுவின் அறிக்கையானது இன்னும் 02 வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இது தொடர்பான சுற்றறிக்கை யானது சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச ஊழியர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு சம்பளமற்ற லீவு வழங்குதல் என்ற தலைப்பிலேயே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)
ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கு விசேட வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர்
புதிய சுற்றறிக்கையின் படி ஒரு அரச நிறுவனத்திலிருந்து எத்தனை பேர் வெளிநாடு செல்லலாம்?
"சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு / வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறை வழங்குதல்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை தொடர்பான விளக்கங்களை வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதாவது வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அரச ஊழியர் தமது விதவைகள் அனாதைகள் ஓய்வூதிய நிதியத்திற்கு மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் வதியாதோர் வெளிநாட்டு கணக்கு திறந்து அதன் ஊடாக நாட்டுக்கு மாதாந்தம் பணம் அனுப்ப வேண்டும்.
அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)
நிறைவேற்று தரமில்லாத புதிதாக இணைந்த அரச ஊழியர்களும் தமது தகுதிகாண் காலம் முடிவடைவதற்கு முன்னர் வெளிநாடு செல்லலாம். அவ்வாறு சென்றவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்ததன் பின்னர் தகுதிகாண் காலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் எத்தனை பேரை வெளிநாடு செல்ல அனுமதிப்பது என்பது தொடர்பான தீர்மானம் அந்த நிறுவனம் நியமிக்கும் குழு மூலமே எடுக்கப்படும். அதன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து எத்தனை பேரை உச்ச அளவில் வெளிநாடு செல்ல அனுமதிப்பது என்ற விடயம் தீர்மானிக்கப்படும்.