ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தல்: வெளியானது அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் இணைப்பு)
Irumbu Thirai News
September 01, 2022
போக்குவரத்து பிரச்சினை காரணமாக தற்காலிக இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்து 30-08-2022 திகதியிடப்பட்ட அறிவித்தல் கடிதம் கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டது.
இந்த அறிவித்தலை ரத்து செய்து ஏற்கனவே உள்ளபடி 31-12-2022 அன்று வரை இந்த தற்காலிக இணைப்பை நடைமுறைப்படுத்துமாறு அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இன்றைய தினம் கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தன.
அந்த வகையில் ரத்து செய்யப்பட்ட தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் அறிவித்தல் தற்போது மீண்டும் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது அந்த அறிவித்தலின் பிரகாரம் குறித்த பாடசாலையின் அதிபர் அனுமதித்தால் 31-12-2022 வரை தற்காலிக இணைப்பில் இருக்கலாம்.
மேலும் 31-08-2022 திகதிக்கு பின்னர் புதிய தற்காலிக இணைப்பு வழங்கப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.
தொடர்புடைய செய்திகள்:
ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தல்: வெளியானது அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் இணைப்பு)
Reviewed by Irumbu Thirai News
on
September 01, 2022
Rating: