National Fuel Pass: New Feature Added for Non-Motor Vehicle

September 09, 2022


The registration of non-motor categories has been added as a new feature to the National Fuel Pass system, such as generators, grass-cutters, and other equipment. 



வாகனம் அல்லாத ஏனைய விடயங்களுக்காக தேசிய எரிபொருள் அனுமதி அட்டையை National Fuel Pass) பெற்றுக் கொள்ளும் முறையை அறிமுகம் செய்துள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதன் கீழ் ஜெனரேட்டர், புல்வெட்டும் இயந்திரம் மற்றும் ஏனைய இயந்திரங்கள் உபகரணங்கள் இன்ப வெற்றியும் பதிவு செய்யலாம். 

Click the link below & Select the Non-Vehicle Registration: 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து Non-Vehicle Registration என்பதை தெரிவு செய்யவும்.

National Fuel Pass: New Feature Added for Non-Motor Vehicle National Fuel Pass: New Feature Added for Non-Motor Vehicle Reviewed by Irumbu Thirai News on September 09, 2022 Rating: 5

02-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 02-09-2022

September 09, 2022

02-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் முக்கிய விடயங்கள் அடங்கியுள்ளன. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
02-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 02-09-2022 02-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 02-09-2022 Reviewed by Irumbu Thirai News on September 09, 2022 Rating: 5

05-09-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

September 09, 2022

05-09-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
05-09-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 05-09-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on September 09, 2022 Rating: 5

Essential learning content to be Implemented for grades 01 – 11

September 08, 2022

1 – 11 வரையிலான வகுப்புகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறையை செயற்படுத்துவதற்கான அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கம் தொடர்பான கல்வியமைச்சின் வழிகாட்டுதல்கள்... 
 
சகல பாடங்களையும் முழுமையாகப் பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Related:



Essential learning content to be Implemented for grades 01 – 11 Essential learning content to be Implemented for grades 01 – 11 Reviewed by Irumbu Thirai News on September 08, 2022 Rating: 5

2022 உ.தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

September 05, 2022


2022ற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அந்த வகையில் புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி நடைபெறும் என்பதோடு உயர்தர பரீட்சை டிசம்பர் 5ஆம் தேதி ஆரம்பமாகி ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related:


2022 உ.தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு! 2022 உ.தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 05, 2022 Rating: 5

நாட்டை வந்தடைந்தார் கோத்தாபய!

September 03, 2022


முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நாட்டை வந்தடைந்தார். 

மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த ஜூலை 13ஆம் திகதி நாட்டில் இருந்து வெளியேறி மாலைதீவுக்கு சென்ற கோத்தாபய அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். 

சிங்கப்பூரிலிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். 
அதன் பின்னர் தாய்லாந்து சென்ற அவர் தற்போது அங்கிருந்து நாடு திரும்பியுள்ளார். 

கோத்தாபயவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய சகல உரிமைகள் சலுகைகள் என்பன வழங்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டை வந்தடைந்தார் கோத்தாபய! நாட்டை வந்தடைந்தார் கோத்தாபய! Reviewed by Irumbu Thirai News on September 03, 2022 Rating: 5

ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தல்: வெளியானது அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் இணைப்பு)

September 01, 2022


போக்குவரத்து பிரச்சினை காரணமாக தற்காலிக இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்து 30-08-2022 திகதியிடப்பட்ட அறிவித்தல் கடிதம் கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டது. 

இந்த அறிவித்தலை ரத்து செய்து ஏற்கனவே உள்ளபடி 31-12-2022 அன்று வரை இந்த தற்காலிக இணைப்பை நடைமுறைப்படுத்துமாறு அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இன்றைய தினம் கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தன. 
அந்த வகையில் ரத்து செய்யப்பட்ட தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் அறிவித்தல் தற்போது மீண்டும் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது அந்த அறிவித்தலின் பிரகாரம் குறித்த பாடசாலையின் அதிபர் அனுமதித்தால் 31-12-2022 வரை தற்காலிக இணைப்பில் இருக்கலாம். 

மேலும் 31-08-2022 திகதிக்கு பின்னர் புதிய தற்காலிக இணைப்பு வழங்கப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.


தொடர்புடைய செய்திகள்:


ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தல்: வெளியானது அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் இணைப்பு) ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தல்: வெளியானது அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 01, 2022 Rating: 5

ரத்து செய்யப்பட்ட ஆசிரியர் தற்காலிக இணைப்பு மீண்டும் நடைமுறைக்கு - ஜோசப் ஸ்டாலின்.

September 01, 2022

போக்குவரத்து பிரச்சினை காரணமாக வழங்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதத்தை மீண்டும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது www.irumbuthirainews.com இணையத்தளம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களை தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுடன் இன்று கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் அதிபர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இன்றைய சந்திப்பின்போது பல விடயங்களை அமைச்சருடன் கலந்துரையாடினோம்.  அதில் ஒன்று இடமாற்ற சபைகளை மீண்டும் முறைமைப்படுத்த அமைச்சர் தீர்மானித்துள்ளார். 

ஏனெனில் ஆசிரியர் இடமாற்ற சபைகளில் பல்வேறு போலியான தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்டு மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை நாம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த போது இந்த இடமாற்ற சபைகளை முறைமைப்படுத்த அமைச்சர் இணக்கம் தெரிவித்ததோடு அவ்வாறு போலியான தொழிற்சங்கங்கள் மூலம் இடம்பெற்ற நிதி மற்றும் ஏனைய மோசடிகள் தொடர்பில் போலீஸ் விசாரணைகளை ஆரம்பிக்கவும் தீர்மானித்துள்ளார். 

மேலும் இன்றைய கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட மற்றுமொரு தீர்மானமாவது, 

போக்குவரத்து பிரச்சினை காரணமாக தற்காலிக இணைப்பு பெற்ற ஆசிரியர்களின் இடமாற்றத்தை ரத்து செய்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதத்தை மீண்டும் ரத்து செய்து அந்த தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர அமைச்சர் இணங்கியுள்ளார். 

அந்த வகையில் ஏற்கனவே உள்ளபடி டிசம்பர் 31 வரை குறித்த தற்காலிக இணைப்பு மீண்டும் செல்லுபடியாகும். இது தொடர்பிலான எழுத்து மூல அறிவித்தல் இன்று கல்வி அமைச்சால் மீண்டும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார். 

இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின் ராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் நிதி மோசடி தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பதவி நீக்கப்பட்டமை தொடர்பிலும் தனது கருத்தை தெரிவித்தார். 

அதாவது குறித்த அதிபர் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். எனவே இந்த விடயத்தை கருத்தில் கொண்டு எமது அதிபர்கள் விசேடமாக தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அதிபர்கள் தமது கடமைகளின் போது மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி:

ரத்து செய்யப்பட்ட ஆசிரியர் தற்காலிக இணைப்பு மீண்டும் நடைமுறைக்கு - ஜோசப் ஸ்டாலின். ரத்து செய்யப்பட்ட ஆசிரியர் தற்காலிக இணைப்பு மீண்டும் நடைமுறைக்கு - ஜோசப் ஸ்டாலின். Reviewed by Irumbu Thirai News on September 01, 2022 Rating: 5

Announcement: 2021 A/L Application & Re- Correction

September 01, 2022


அண்மையில் வெளியிடப்பட்ட 2021 ற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வு தொடர்பான அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

அந்த வகையில் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பம் இம்மாதம் 19 முதல் 30 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதேவேளை உயர்தர பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று(1) முதல் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இன்று முதல் எதிர்வரும் 8 ம் தேதி வரை விண்ணப்பங்களை Online முறையில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உயர்தர பரீட்சை Online விண்ணப்பம் மற்றும் பிற தகவல்கள் என்பவற்றை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.



Related:






Announcement: 2021 A/L Application & Re- Correction Announcement: 2021 A/L Application & Re- Correction Reviewed by Irumbu Thirai News on September 01, 2022 Rating: 5

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர்களின் தற்காலிக இடமாற்றம் ரத்து (சுற்றறிக்கை இணைப்பு)

August 31, 2022


போக்குவரத்து பிரச்சினை காரணமாக எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றம் உடன் அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை(1) முதல் தமது நிரந்தர பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சுற்றறிக்கை கடிதத்தை கீழே காணலாம்.



உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர்களின் தற்காலிக இடமாற்றம் ரத்து (சுற்றறிக்கை இணைப்பு) உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர்களின் தற்காலிக இடமாற்றம் ரத்து (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on August 31, 2022 Rating: 5

அரச ஊழியர்களின் கொரோனா கால விடுமுறைகள் மற்றும் கொடுப்பணவுகளைக் கணக்கிடும் முறை (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)

August 31, 2022


 
கொரோனா காலத்தில் (2020-03-13 ற்கு பின்) அரச உழியர்களின் லீவுகள் மற்றும் கொடுப்பணவுகள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சு சற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை மும்மொழிகளிலும் கீழே காணலாம்.
 
 
Related:
 
அரச ஊழியர்களின் கொரோனா கால விடுமுறைகள் மற்றும் கொடுப்பணவுகளைக் கணக்கிடும் முறை (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) அரச ஊழியர்களின் கொரோனா கால விடுமுறைகள் மற்றும் கொடுப்பணவுகளைக் கணக்கிடும் முறை (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on August 31, 2022 Rating: 5

இடைக்கால வரவு செலவுத்திட்டம் – 2022 (முழுமையான தமிழ் வடிவம்)

August 31, 2022
நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவால் இடைக்கால வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று(30) சமர்ப்பிக்கப்பட்டது. 
 
அதன் முழுமையான தமிழ் வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
இடைக்கால வரவு செலவுத்திட்டம் – 2022 (முழுமையான தமிழ் வடிவம்) இடைக்கால வரவு செலவுத்திட்டம் – 2022 (முழுமையான தமிழ் வடிவம்) Reviewed by Irumbu Thirai News on August 31, 2022 Rating: 5

கௌதம் அதானியின் மற்றுமொரு சாதனை!

August 30, 2022

இந்திய பெரும் செல்வந்தரான கௌதம் அதானியின் அதானி குழுமமானது விமான நிலையம், துறைமுகம், எரிசக்தி, தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் கால் பதித்து வேகமாக முன்னேறி வருகிறது. 

வேகமாக முன்னேறி வரும் அதானி இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அம்பானியை கடந்த பெப்ரவரி மாதம் பின்தள்ளி இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றார். 

அதன் பின்னர் ஆசியாவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலிலும் முதலிடத்தை அடைந்தார். 

அதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸையும் பின்ள்ளி உலக பணக்காரர்கள் வரிசையில் 4ம் இடத்திற்கு முன்னேறினார். 

இந்நிலையில் அவரது பயணத்தின் மற்றுமொரு மைல் கல்லாக தற்போது 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அதானி, பிரான்சை சேர்ந்த பெர்னாட் ஆர்னால்ட் என்பவரை பின்தள்ளி உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

தற்போதைய நிலையில் உலக பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளனர். 

ப்ளூம்பேர்க் பில்லியனர்கள் குறியீட்டுக்கமைய ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
கௌதம் அதானியின் மற்றுமொரு சாதனை! கௌதம் அதானியின் மற்றுமொரு சாதனை! Reviewed by Irumbu Thirai News on August 30, 2022 Rating: 5
Powered by Blogger.