மன்னராக பிரகடனப்படுத்தப்பட்ட சார்ள்ஸ் பிறப்பித்த முதல் உத்தரவு!
Irumbu Thirai News
September 11, 2022
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை தொடர்ந்து ஐக்கிய ராஜ்யத்தின் அரசராக நேற்றைய தினம் மூன்றாம் சார்ள்ஸ் பிரகடனம் செய்யப்பட்டார்.
இந்த நிகழ்வு லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் நேற்று(10) காலை நடைபெற்றது.
கடந்த 07 தசாப்தங்களுக்கு மேலாக இத்தகைய ஒரு நிகழ்வு நடைபெறவில்லை. காரணம் அவ்வளவு காலப்பகுதி ராணியின் ஆட்சி நடைபெற்றது. இது மாத்திரமன்றி வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த நிகழ்வுகள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன.
ஆக்ட் ஒஃப் செட்டில்மன்ட் 1701 சட்டத்தின் விதிகளின்படி சார்ள்ஸ் மன்னர் அவருடைய தாயின் மறைவுக்குப் பிறகு தாமாக அரசர் ஆகிவிட்டார். இருந்தாலும் இன்று நடைபெற்றது சம்பிரதாய அறிவிப்பு மாத்திரமே.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்வில் ப்ரைவி கவுன்சிலை சேர்ந்த 200 பேர் அளவில் கலந்து கொண்டனர். ப்ரைவி கவுன்சில் என்பது இன்னாள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய அரசருக்கு முறைப்படி ஆலோசனை வழங்கும் குழுவாகும். இதில் சுமார் 700 பேர் உறுப்பினர்களாக இருந்தாலும் சுமார் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
நிகழ்வு நடைபெற்ற விதம்:
மேலும் இன்றைய இந்த நிகழ்வு இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்தன.
முதலாவது பாகத்தில் மகாராணி இறந்த விடயம் அறிவிக்கப்பட்டதுடன் புதிய மன்னரின் பெயரும் அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் பாகத்தில் புதிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் உரை இடம்பெற்றது.
அந்த உரையில், தமது அன்புக்குரிய தாயின் சேவை மிகுந்த வாழ்க்கையை பற்றி குறிப்பிட்டதுடன் அவரது காலடித்தடத்தை பின்பற்றுவதற்கும் உறுதிமொழி அளித்தார் சார்ள்ஸ்.
நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத இந்த இழப்பை குறித்து ஒட்டுமொத்த உலகமும் என் மீது அனுதாபம் கொள்கிறது. காலம் அர்ப்பணிப்பு மற்றும் பக்தியில் என்னுடைய தாயின் ஆட்சி காலம் வேறு எதற்கு நிகரில்லாதது. துயருற்றிருக்கும் இந்த நேரத்திலும் அப்படிப்பட்ட நம்பிக்கை அளிக்கும் வாழ்க்கைக்கு நாம் நன்றி கூறுகிறோம்.
என்னுடைய ஆழமான மரபு மற்றும் எனக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மிக்க கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நான் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன். மேலும் என் அன்புக்குரிய மனைவியின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது என்றும் தனது உரையில் தெரிவித்தார.
நிகழ்வின் இறுதியாக, பிரகடனங்களுக்கு மன்னர் ஒப்புதல் அளித்தார். அதில் முதலாவது மகாராணியின் இறுதிச்சடங்கு நடக்கும் நாளை பொது விடுமுறையாக அறிவித்ததாகும்.
எனவே புதிய மன்னர் 3ம் சார்ள்ஸின் முதலாவது உத்தரவாக பார்க்கப்படுகிறது.
Related:
மன்னராக பிரகடனப்படுத்தப்பட்ட சார்ள்ஸ் பிறப்பித்த முதல் உத்தரவு!
Reviewed by Irumbu Thirai News
on
September 11, 2022
Rating: