குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App)
Irumbu Thirai News
September 15, 2022
உலக நாடுகளை பாதித்து வரும் கொரோனா(Covid-19) நோய்த் தொற்றை எளிமையாக கண்டறிய தொலைபேசி செயலி (Mobile App) ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மூலம் செயல்படும் இந்த செயலியானது நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது குறித்த நபருடைய மருத்துவ குணங்கள், அவரது புகைபிடிக்கும் நிலை போன்ற சில அடிப்படை தகவல்களை அதில் பதிவு செய்து, பின்னர் அவர்களின் சில சுவாச ஒலிகளையும் அதில் பதிவு செய்ய வேண்டும்.
அதன்படி 03 முறை இருமல், 03 - 05 முறை வாய் வழியாக ஆழமாக சுவாசித்தல் மற்றும் திரையில் ஒரு சிறிய வாக்கியத்தை 03 முறை வாசிப்பது என்பன இதில் அடங்கும்.
இந்த விடயங்களைக் கொண்டு குறிப்பிட்ட அந்த நபருக்கு தொற்று இருக்கிறதா? என்பதை துல்லியமாக இந்த செயலி தெரிவிக்கும் என நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செயலியானது 89% அளவுக்கு துல்லியமாக முடிவை காட்டும் என தெரிவித்த விஞ்ஞானிகள், ஏனைய பரிசோதனை முறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது என்றும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இவற்றை எளிதாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App)
Reviewed by Irumbu Thirai News
on
September 15, 2022
Rating: