Short Course in Professional Computer Applications (Open University of Sri Lanka)

September 17, 2022

The Short Course in Professional Computer Applications is designed to provide in-depth knowledge for an office worker who needs competency in the working environment of a general office. 
 
Duration : 06 Months (Sundays) 
 
Medium : English / Sinhala 
 
Entry Qualification: Entrance is open for anyone over 18 years of age. 
 
Course fee: Rs.30, 000 /= 
 
Closing Date: 30th September 2022.
 
Click the link below for online application:

Click the link below for full details:
 
 
Short Course in Professional Computer Applications (Open University of Sri Lanka) Short Course in Professional Computer Applications (Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on September 17, 2022 Rating: 5

அரசதுறை வெற்றிடங்கள் மேலதிகவர்களைக் கொண்டு நிரப்பப்படும்

September 17, 2022

அரச நியமனங்கள் புதிதாக வழங்கப்படமாட்டாது என்று தீர்மானித்திருக்கின்ற நிலையில், அரச துறையில் பதவி வெற்றிடம் ஏற்படும் பட்சத்தில் அதனை ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள மேலதிக ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக அரச துறையில் ஆள்பற்றாக்குறையோ சேவைகளை வழங்குவதில் பின்னடைவோ ஏற்பட வாய்ப்பில்லை. உதாரணமாக 2020ல் 60000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அவர்களில் சிலர் பொருத்தமில்லாத வேலைகளை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே பதவி வெற்றிடங்கள் ஏற்படும் பட்சத்தில் இவ்வாறானவர்களை கொண்டு அவற்றை நிரப்பலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்:



அரசதுறை வெற்றிடங்கள் மேலதிகவர்களைக் கொண்டு நிரப்பப்படும் அரசதுறை வெற்றிடங்கள் மேலதிகவர்களைக் கொண்டு நிரப்பப்படும் Reviewed by Irumbu Thirai News on September 17, 2022 Rating: 5

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவித்தல்!

September 16, 2022


2022ம் வருடத்திற்குரிய உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

அந்த வகையில் புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும். உயர்தர பரீட்சை டிசம்பர் 5 ஆரம்பமாகி ஜனவரி 2ஆம் தேதி வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.. 

இந்த திகதிகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சார்த்திகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
விசேடமாக 2022 ஆம் வருடத்திற்குரிய பாடசாலை நாட்காட்டியை அடிப்படையாக வைத்து இந்த பரீட்சை தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுமுறை வழங்கப்படும் டிசம்பர் மாதத்தில் இந்த பரீட்சை நடாத்தப்படுகிறது.

யாதேனும் காரணத்தால் இந்த பரீட்சைகளை பிற்போட்டால் பாடசாலை நாட்களையும் மாற்றி அமைத்து அடுத்த வருடம் நடைபெறவுள்ள சாதாரண பரீட்சை உட்பட ஏனைய பரீட்சைகளையும் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும். 

இந்நிலைமையானது பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை மாத்திரமன்றி முழு மாணவ சமூகத்தையும் பாதிப்பதோடு உயர்கல்விக்கான வாய்ப்புகளையும் தாமதப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.


உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவித்தல்! உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 16, 2022 Rating: 5

சுற்றறிக்கை: அரச ஊழியர்களுக்கு உள்நாட்டில் சம்பளமற்ற விடுமுறை வழங்கல் (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)

September 16, 2022

சுற்றறிக்கை தலைப்பு: சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டில் சம்பளமற்ற லீவு வழங்குதல் 

திகதி: 15-09-2022.

சுற்றறிக்கை இலக்கம்: 14/2022(11) 

அமுல்படுத்தும் திகதி: 05-09-2022 முதல்

குறித்த சுற்றறிக்கையை மும்மொழிகளிலும் கீழே காணலாம்.


Related:
 

 
 
சுற்றறிக்கை: அரச ஊழியர்களுக்கு உள்நாட்டில் சம்பளமற்ற விடுமுறை வழங்கல் (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) சுற்றறிக்கை: அரச ஊழியர்களுக்கு உள்நாட்டில் சம்பளமற்ற விடுமுறை வழங்கல் (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 16, 2022 Rating: 5

பல்கலைக்கழகத்திற்குள்ளேயே தொழில் வாய்ப்பு: பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சந்தர்ப்பம்!

September 15, 2022


பேராதனை பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள்ளேயே குறுகிய கால அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் விஷேட வைத்திய நிபுணர் கலாநிதி M.D லமாஹேவா தெரிவித்துள்ளார். 

சுமார் 300 மாணவர்கள் இவ்வாறு தொழில் வாய்ப்பை பெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்: 






பல்கலைக்கழகத்திற்குள்ளேயே தொழில் வாய்ப்பு: பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சந்தர்ப்பம்! பல்கலைக்கழகத்திற்குள்ளேயே தொழில் வாய்ப்பு: பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சந்தர்ப்பம்! Reviewed by Irumbu Thirai News on September 15, 2022 Rating: 5

அரச ஊழியரின் ஓய்வு பெறும் வயது தொடர்பான புதிய சுற்றுநிறுபம் (மும்மொழிகளிலும் சுற்றுநிறுபம் இணைப்பு)

September 15, 2022

அரச ஊழியரின் ஓய்வு பெறும் வயதை 60 ஆகக் குறைத்து சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இதனை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் கீழே காணலாம். 
 
Related:

 
அரச ஊழியரின் ஓய்வு பெறும் வயது தொடர்பான புதிய சுற்றுநிறுபம் (மும்மொழிகளிலும் சுற்றுநிறுபம் இணைப்பு) அரச ஊழியரின் ஓய்வு பெறும் வயது தொடர்பான புதிய சுற்றுநிறுபம் (மும்மொழிகளிலும் சுற்றுநிறுபம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 15, 2022 Rating: 5

Re - Correction Application: G.C.E. (A/L) - 2021 (2022)

September 15, 2022

உ.தர பெறுபேறு மீளாய்வுக்காக இன்று(15) முதல் விண்ணப்பிக்கலாம். 
 
1 பாடத்திற்கான கட்டணம் - 250/-. இதை தபால் நிலையத்திலோ அல்லது Credit card/ Debit card மூலமோ செலுத்தலாம். 
 
ஒன்லைன் மூலம் மாத்திரம் விண்ணப்பிக்கலாம். அதை PDF முறையில் Download செய்து வைத்துக்கொள்ளுங்கள். 
 
பொது சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகளை விட குறைவாக எடுத்தவர்களும் அந்த பாடத்தின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்கலாம். 
 
விண்ணப்ப முடிவு திகதி: 28-09-2022.
 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Related:
Re - Correction Application: G.C.E. (A/L) - 2021 (2022) Re - Correction Application: G.C.E. (A/L) - 2021 (2022) Reviewed by Irumbu Thirai News on September 15, 2022 Rating: 5

குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App)

September 15, 2022

உலக நாடுகளை பாதித்து வரும் கொரோனா(Covid-19) நோய்த் தொற்றை எளிமையாக கண்டறிய தொலைபேசி செயலி (Mobile App) ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 
 
செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மூலம் செயல்படும் இந்த செயலியானது நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது குறித்த நபருடைய மருத்துவ குணங்கள், அவரது புகைபிடிக்கும் நிலை போன்ற சில அடிப்படை தகவல்களை அதில் பதிவு செய்து, பின்னர் அவர்களின் சில சுவாச ஒலிகளையும் அதில் பதிவு செய்ய வேண்டும். 

அதன்படி 03 முறை இருமல், 03 - 05 முறை வாய் வழியாக ஆழமாக சுவாசித்தல் மற்றும் திரையில் ஒரு சிறிய வாக்கியத்தை 03 முறை வாசிப்பது என்பன இதில் அடங்கும். 

இந்த விடயங்களைக் கொண்டு குறிப்பிட்ட அந்த நபருக்கு தொற்று இருக்கிறதா? என்பதை துல்லியமாக இந்த செயலி தெரிவிக்கும் என நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

இந்த செயலியானது 89% அளவுக்கு துல்லியமாக முடிவை காட்டும் என தெரிவித்த விஞ்ஞானிகள், ஏனைய பரிசோதனை முறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது என்றும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இவற்றை எளிதாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App) குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App) Reviewed by Irumbu Thirai News on September 15, 2022 Rating: 5

12-09-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

September 15, 2022

12-09-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
12-09-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 12-09-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on September 15, 2022 Rating: 5

ஐந்து வருட சம்பளமற்ற விடுமுறை ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினருக்கும் பொருந்தாது!

September 14, 2022


அரச ஊழியர்கள் 05 வருடங்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலலோ சம்பளமற்ற விடுமுறை பெறுவது தொடர்பான சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் தொழில்நுட்ப சேவை நிபுணர்கள் என்பவர்களுக்கு பொருந்தாது என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான சுற்றறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த விடுமுறையானது ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள மேலதிக ஊழியர்களை விடுவிப்பதற்காக அறிமுகப்படுத்தபட்டதாகும். மாறாக நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய சேவையில் உள்ளவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் அவர் தெரிவித்தார்.

Related:

ஐந்து வருட சம்பளமற்ற விடுமுறை ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினருக்கும் பொருந்தாது! ஐந்து வருட சம்பளமற்ற விடுமுறை ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினருக்கும் பொருந்தாது! Reviewed by Irumbu Thirai News on September 14, 2022 Rating: 5

உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு நாள் இன்று!

September 11, 2022

2001ல் இன்று போல் ஒரு நாள் அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்தது. 

இந்த கோர தாக்குதலின் 21 வருட நினைவு நாள் இன்று. இந்த தாக்குதல்களுக்கு அல்கொய்தா அமைப்பு உரிமை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. 

அன்றைய தினம் அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மொத்தம் 04 பயணிகள் விமானம் கடத்தப்பட்டது. அதில் இரண்டு விமானங்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மீது மோதியதில் சுமார் 110 அடுக்குமாடிகள் கீழே விழுந்து தரைமட்டமாகின. அதன் புகை மண்டலம் பல கிலோமீட்டருக்கு பரவியது. 

மற்றுமொரு விமானம் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீது தாக்குதல் நடத்தியது. 

பிளைட் 93 என்ற மற்றுமொரு விமானம் அமெரிக்க பென்சில்வேனியாவில் உள்ள வயல் பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் குறித்த தாக்குதல்தாரர்களை எதிர்த்து போராடியதில் விமானம் உரிய இலக்கை அடைய தவறி வயல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த தாக்குதல்களில் மொத்தமாக சுமார் 3000 பேர வரை கொல்லப்பட்டனர். அமெரிக்க வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு நாளாக இது பதிவானது. 

அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் மறைந்துள்ளதாக கூறி ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுத்தது. அங்கு பல வருடங்கள் யுத்தம் நடந்தது. பின்னர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டார். 

ஆப்கானை விட்டு அண்மையில் அமெரிக்க வெளியேறியது. இருந்தாலும் ஆப்கானில் அமெரிக்கா சந்தித்த இழப்புகளை ஒப்பீடு செய்த பாதுகாப்பு நிபுணர்கள் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தோல்வியை சந்தித்ததாகவே பொதுவாக கருத்து வெளியிட்டனர். 

இதேபோன்று ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்திருந்தது. பின்னர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். ஆனால் அங்கு எவ்வித ரசாயன ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

அப்பாவி மக்களை கொள்ளும் எந்த ஒரு செயலும் மன்னிக்க முடியாத பயங்கரவாத தாக்குதலாகும். இது யார் செய்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.


ஏனைய செய்திகள்:




உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு நாள் இன்று! உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு நாள் இன்று! Reviewed by Irumbu Thirai News on September 11, 2022 Rating: 5

அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கல்வியமைச்சின் அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் கடிதம் இணைப்பு)

September 11, 2022

தரம் 01 முதல் 11 வரை அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கல்வியமைச்சு சகல மாகாணங்களுக்கும் அறிவித்தல் வழங்கியுள்ளது. அதனை கீழே காணலாம். 



தரம் 01 முதல் 11 வரையான அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்களை பார்வையிட மற்றும் Download செய்ய கீழே உள்ள லிங்கிற்கு செல்க.
அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கல்வியமைச்சின் அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் கடிதம் இணைப்பு) அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கல்வியமைச்சின் அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் கடிதம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 11, 2022 Rating: 5

Revised Circular: 05 Years Leave for Government servants (Circular in Three Languages)

September 11, 2022

Public Administration Circular: 14/ 2022(1). 

Topic: Granting Leave with no pay to be spent in or out of the Island to public officers without causing any prejudice to the seniority and pension. 
 
To view and download Circulars in Tamil, English and Sinhala languages are given below.

அரச ஊழியர்களுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டிலோ தொழில் புரிவதற்காக சம்பளமற்ற விடுமுறை 5 வருடங்களுக்கு வழங்குவது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சால் ஏற்கனவே 22-6-2022 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட 14/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கைக்கு மேலதிகமாக, திருத்தங்கள் செய்யப்பட்ட 14/ 2022(1) இலக்கம் கொண்ட சுற்றறிக்கையே இதுவாகும். 

இதனை தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலும் கீழே காணலாம்.

Revised Circular: 05 Years Leave for Government servants (Circular in Three Languages) Revised Circular: 05 Years Leave for Government servants (Circular in Three Languages) Reviewed by Irumbu Thirai News on September 11, 2022 Rating: 5
Powered by Blogger.