25-11-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-11-2022

December 09, 2022

25-11-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
25-11-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-11-2022 25-11-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-11-2022 Reviewed by Irumbu Thirai News on December 09, 2022 Rating: 5

தரம் 8 முதல் அறிமுகமாகும் புதிய பாடம்

December 08, 2022


 
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அடிப்படை அறிவு இல்லாமல் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் வேலை வாய்ப்புகளை தேடுவது கடினமான பணியாக காணப்படும். எனவே 2023 முதல் சாதாரண தரத்தில் தகவல் தொழில்நுட்ப பாடத்தை உள்ளடக்குவதோடு தரம் 8 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் உள்ளடக்க திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 
 
கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
செயற்கை நுண்ணறிவு பாடமானது தரம் 10 முதல் அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டாலும் நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமைய தரம் 8 முதல் அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளை பூர்த்தி செய்ய இத்தகைய மாற்றங்களை அறிமுகப்படுத்துவது அவசியம். இளைஞர்களும் இவ்வாறான மாற்றங்களையே விரும்புகின்றனர். கல்வித் துறையில் புரட்சிகர மாற்றங்களைச் செய்ய நான் எப்போதும் தயாராக உள்ளேன். காலாவதியான பரீட்சை மைய கல்வி முறையிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
ஏனையவை:

 
தரம் 8 முதல் அறிமுகமாகும் புதிய பாடம் தரம் 8 முதல் அறிமுகமாகும் புதிய பாடம் Reviewed by Irumbu Thirai News on December 08, 2022 Rating: 5

நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவித்தல்!

December 08, 2022


தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு நாளைய தினம் (9) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவித்தல்! நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on December 08, 2022 Rating: 5

Implementation of One day and normal services for issuing results

November 27, 2022

பரீட்சை சான்றிதழ்களை விநியோகிக்கும் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விபரங்களை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
2001 அல்லது அதற்குப் பின்னரான பரீட்சை சான்றிதழ்களை பெற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதற்கு முன்னைய வருடங்களின் பரீட்சை சான்றிதழ்களை பெற நேரடியாக சமூகமளிக்க வேண்டும். 
 
2022-11-22 ற்கு பின்னர் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறான விண்ணப்பங்கள் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது. 
 
பரீட்சை சான்றிதழ்கள் உரியவரிடமே கையளிக்கப்படும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கப்படும். 
 
பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமாயின் பாடசாலைகள் பரீட்சைகள் கிளையை நாட வேண்டும். ஆஸ்திரேலியா விசா பெற்றுக் கொள்வதற்கான சான்றிதழ்களை விநியோகிக்கும் போது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
 
இது தொடர்பான முழுமையான விபரங்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Others:
 

 
Implementation of One day and normal services for issuing results Implementation of One day and normal services for issuing results Reviewed by Irumbu Thirai News on November 27, 2022 Rating: 5

G.C.E. (A/L) TIME TABLE - 2022

November 27, 2022
G.C.E. (A/L) TIME TABLE - 2022 G.C.E. (A/L) TIME TABLE - 2022 Reviewed by Irumbu Thirai News on November 27, 2022 Rating: 5

வெளியாகின 2021 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ!

November 27, 2022

2021 ம் ஆண்டுக்குரிய சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 
 
பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் முறைகளில் பார்வையிடலாம். 
 
(01) பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் பார்வையிட... 
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலமாக பார்வையிட வேண்டுமென்றால் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பரீட்சை சுட்டெண்ணை வழங்கி பார்வையிடுக. 
 
 
 
(02) கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட... 
கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட வேண்டுமென்றால் உங்கள் தொலைபேசி வலையமைப்புக்கேற்ப கீழுள்ள பொருத்தமான முறையில் உரிய இலக்கத்திற்கு SMS செய்க. 
 
Mobitel 
EXAMS and send to 8884 
 
Airtel 
EXAMS and send to 7545 
 
Dialog 
EXAMS and send to 7777 
 
Hutch 
EXAMS and send to 8888 
 
 
 
ஏனையவை:

 

வெளியாகின 2021 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! வெளியாகின 2021 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! Reviewed by Irumbu Thirai News on November 27, 2022 Rating: 5

மாணவர்களுக்கு மாத்திரைகளை விநியோகித்த ஆசிரியர் கைது! பெருந்தொகையான மாத்திரைகளும் மீட்பு!

November 21, 2022


தரம் 4 முதல் 8 வரையான வகுப்பு மாணவர்களுக்கு விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை கற்பித்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தடை செய்யப்பட்ட Pregabline 150mg என்ற மாத்திரையை களுத்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேச மாணவர்களுக்கு விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை குறித்த ஆசிரியரிடமிருந்து மேற்படி மாத்திரைகள் 1299 கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


ஏனையவை:




மாணவர்களுக்கு மாத்திரைகளை விநியோகித்த ஆசிரியர் கைது! பெருந்தொகையான மாத்திரைகளும் மீட்பு! மாணவர்களுக்கு மாத்திரைகளை விநியோகித்த ஆசிரியர் கைது! பெருந்தொகையான மாத்திரைகளும் மீட்பு! Reviewed by Irumbu Thirai News on November 21, 2022 Rating: 5

கருத்துக் கணிப்பின் முடிவு: 22 மாதங்களின் பின் மீண்டும் இணைக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்!

November 20, 2022

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரின் தற்போதைய உரிமையாளரும் உலக செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான இலோன் மஸ்க் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2020இல் தற்காலிகமாக நீக்கப்பட்டது. 

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை இலோன் மஸ்க் கொள்வணவு செய்த பிறகு டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் இணைக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்புகள் மீண்டும் பேசப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து மீண்டும் ட்ரம்பை இணைக்கலாமா வேண்டாமா என்று கருத்து கணிப்பை இலான் மஸ்க் நடத்தினார். அதில் 51.8% ஆனோர் டொனால்ட் டிரம்ப்பை மீண்டும் இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். 

எனவே தற்போது சுமார் 22 மாதங்களின் பின்னர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ட்விட்டர் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஏனையவை:


கருத்துக் கணிப்பின் முடிவு: 22 மாதங்களின் பின் மீண்டும் இணைக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்! கருத்துக் கணிப்பின் முடிவு: 22 மாதங்களின் பின் மீண்டும் இணைக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்! Reviewed by Irumbu Thirai News on November 20, 2022 Rating: 5

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு!

November 20, 2022

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய திட்டத்தைத் தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் தொழுநோயானது பாடசாலை மாணவர்களிடையே பரவக்கூடிய அபாயமும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசார பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.   

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் (CDC) வெளியிட்டுள்ள தகவல்களின் படி 95% ஆன மனிதர்கள் தொழுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் நோயெதிர்ப்பு தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் “இலங்கையில் 02 வகையான தொழுநோய்கள் பரவுகின்றன. அவை தொற்றக்கூடியவை மற்றும் தொற்றாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. துரதிஷ்டவசமாக, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் 60% ஆனோர் தொற்றக் கூடிய நோய்த்தன்மையை கொண்டுள்ளமை வருந்தத்தக்கது” என்று மருத்துவர் பிரசாத் ரணவீர சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் 500க்கும் மேற்பட்ட தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு! பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு! Reviewed by Irumbu Thirai News on November 20, 2022 Rating: 5

18-11-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-11-2022

November 19, 2022

18-11-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல... 
 
 
ஏனையவை:
 
 
 
18-11-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-11-2022 18-11-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-11-2022 Reviewed by Irumbu Thirai News on November 19, 2022 Rating: 5

11-11-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 11-11-2022

November 19, 2022

11-11-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
 
ஏனையவை:
 

 
11-11-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 11-11-2022 11-11-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 11-11-2022 Reviewed by Irumbu Thirai News on November 19, 2022 Rating: 5

இஸ்லாம் பாட புத்தக விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சரின் எச்சரிக்கை!

November 18, 2022


இஸ்லாம் பாட புத்தக விவகாரம் தொடர்பில் தன் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துவது தொடர்பாக கல்வி அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, 

2022 ம் வருடத்திற்குரிய இஸ்லாம் பாட நூல்களின் திருத்தப்பட்ட பதிப்புகள் தரம் 06 தொடக்கம் 11 வரையான வகுப்புகளுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 

இந்தப் பாட நூல்களில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைத்தது. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட பாடநூல்கள் தற்போது அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் மத அடிப்படை வாதம் கொண்ட புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதாக சில இணையதளங்களில் என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கின்றேன். 

இந்த புத்தகங்களானது சகல மதத்தினரின் உடன்பாட்டுடனேயே விநியோகிக்கப்படுகிறது. சகல மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்த மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ளனர். அவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இதைச் செய்தேன். 

குறித்த இணையதளங்கள் பொய்யான பிரசாரங்களை பரப்பி வருகின்றன. இதை இவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இவர்களுக்கு எதிராக சிறப்புரிமை பிரச்சினை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.


இஸ்லாம் பாட புத்தக விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சரின் எச்சரிக்கை! இஸ்லாம் பாட புத்தக விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சரின் எச்சரிக்கை! Reviewed by Irumbu Thirai News on November 18, 2022 Rating: 5

Implementation of Official Language Policy (Circular in Trilingual)

November 15, 2022

Public Administration Circular: 18/2020(1) 
Topic: Implementation of Official Language Policy. 
Date: 28-10-2022. 
 
அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் என்ற தலைப்பில் 18/2020(1) இலக்கம் கொண்ட சுற்றறிக்கை 28-10-2022 அன்று பொது நிர்வாக அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை மும்மொழிகளிலும்(Trilingual) கீழே காணலாம். 

Click the links below for Official Language Circulars 18/2020 dated 2020-10-16.

 
 


Previous:

 

Implementation of Official Language Policy (Circular in Trilingual) Implementation of Official Language Policy (Circular in Trilingual) Reviewed by Irumbu Thirai News on November 15, 2022 Rating: 5
Powered by Blogger.