LPL கிண்ணம் செய்யப்பட்ட விதம்: வரலாற்றில் முதற் தடவை எனவும் அறிவிப்பு!
Irumbu Thirai News
July 30, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்குபற்றும் 4வது லங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடர் இன்று (30) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய முதலாவது போட்டி, கடந்த சீசனில் செம்பியனான ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் (JK Vs CS) இடையில் இடம்பெறவுள்ளது.
நான்கவாது LPL கிரிக்கெட் தொடரின் போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 24 போட்டிகள். 12 ஆரம்ப சுற்று போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்திலும், மேலும் 8 ஆரம்ப சுற்று போட்டிகள் கண்டி பல்லேகலை மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இறுதி சுற்றின் மூன்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இவ்வருட செம்பியனுக்கான வெற்றிக்கிண்ணம் நேற்று முன்தினம் (28)கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டது.
இது மாத்திரமன்றி இவ்வருட செம்பியனுக்கு வழங்கப்படும் LPL கிண்ணம் மீள்சுழற்சி செய்யப்பட்ட அலுமினிய கேன்களினால் தயாரிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். மறுசுழற்சி முறையில் கிரிக்கெட் கிண்ணம் உருவாக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். கடற்கரையில் சேகரிக்கப்பட்ட 2,523 அலுமினிய கேன்களைப் பயன்படுத்தி இந்த கிண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
LPL போட்டியின் பிரமாண்டமான ஆரம்ப விழா இன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், மைதானத்தின் வாயிற் கதவுகள் பிற்பகல் 3.30 மணி முதல் திறக்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Click the link below for LPL match schedule:
Previous:
LPL கிண்ணம் செய்யப்பட்ட விதம்: வரலாற்றில் முதற் தடவை எனவும் அறிவிப்பு!
Reviewed by Irumbu Thirai News
on
July 30, 2023
Rating: