விரைவில் 5000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - அமைச்சர் சுசில்
Irumbu Thirai News
August 02, 2023
விரைவில் 5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அது தொடர்பாக அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பிரதான பாடங்களுக்காக 09 மாகாணங்களுக்கமைய இந்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மாகாணங்களினூடாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தேசிய பாடசாலைகளுக்கான ஆட்சேர்ப்பு கல்வி அமைச்சினால் செய்யப்படும் செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Previous:
விரைவில் 5000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - அமைச்சர் சுசில்
Reviewed by Irumbu Thirai News
on
August 02, 2023
Rating: