அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தவணைப் பரீட்சை மாத்திரமே - கல்வி அமைச்சர்

August 06, 2023


2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணைப் பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 


கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இத்தீர்மானம் தரம் 01 முதல் உயர்தரம் வரை அதாவது தரம் 13 வரை ஒவ்வொரு பாடசாலையிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

இதுவரை ஒவ்வொரு பாடசாலையிலும் ஒரு வருடத்தில் மூன்று தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு வந்தன. ஒவ்வொரு பாடத்திலும் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தவணை முடிவிலும் ஒரு பரீட்சை நடத்தப்பட்டது. 
மேலும் ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அந்தந்த தரத்தில் அவர்களின் நிலையும் அறியப்பட்டது. ஒரு தவணை பரீட்சை முடிவில் மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்தது. அந்த விடுமுறையின் போது மாணவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. 

மூன்றாம் தவணை பரீட்சையின் பின் பள்ளி விடுமுறைக்குப் பிறகு மாணவர்களை புதிய தரத்திற்கு உயர்த்தும் பணியை பாடசாலை அமைப்பு இதுவரை செய்து வருகிறது. 

பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடசாலையின் சுமையை குறைக்கும் வகையில் வருடத்திற்கு ஒரு முறை தவணைப் பரீட்சை நடத்துவதற்கு கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Previous:

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தவணைப் பரீட்சை மாத்திரமே - கல்வி அமைச்சர் அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தவணைப் பரீட்சை மாத்திரமே - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on August 06, 2023 Rating: 5

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு!

August 06, 2023


இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது இங்கிலாந்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிகமானோர்க்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்நிலைமை பெருமளவான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

 இது தொடர்பாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டுள்ளது. 

 இந்த வைரஸானது இங்கிலாந்தில் 07 பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Eris என்பது கிரேக்க தெய்வத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.



Previous:


இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! இங்கிலாந்தில் பரவும் புதிய வகை  கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! Reviewed by Irumbu Thirai News on August 06, 2023 Rating: 5

Special announcement from Examinations Department (Online forwarding of Examination Certificates)

August 05, 2023


Online forwarding of Examination Certificates to the ministry of foreign affairs for authentication Taking another step forward under the digitalization process of the department examinations, Sri Lanka, the examination certificates applied by the public for authentication of the ministry of foreign affairs will be forwarded online to the ministry of foreign affairs from 7th August 2023. 

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் டிஜிட்டலாக்க செயல்முறையின் மற்றுமொரு முன்னெடுப்பாக நிகழ்நிலை (Online) முறையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக செவ்வை பார்ப்பதற்காக விண்ணப்பிக்கப்படுகின்ற பரீட்சை சான்றிதழ்கள் 07-08-2023 ஆம் திகதி தொடக்கம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு நிகழ்நிலை முறையில் அனுப்பப்படும். 
2001 மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு இச்செயன்முறை உரித்தாகும். 

செவ்வை பார்க்கப்பட்ட சான்றிதழின் டிஜிட்டல் பிரதியொன்று விண்ணப்பதாரியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். 

உரிய விண்ணப்பம் கிடைக்கப்பெற்றதிலிருந்து இச்செயன் முறை தொடர்பாக குறுஞ்செய்திகள் (SMS) ஊடாக விண்ணப்பதாரரி அறிவுறுத்தப்படுவார். எனவே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு விண்ணப்பதாரி செல்ல தேவையில்லை. 


Click the link below for full announcement (Sinhala, Tamil and English)




Previous:


Special announcement from Examinations Department (Online forwarding of Examination Certificates) Special announcement from Examinations Department (Online forwarding of Examination Certificates) Reviewed by Irumbu Thirai News on August 05, 2023 Rating: 5

Certificate Course in Basic ICT Skills - Batch 11 (University of Jaffna)

August 05, 2023


University of Jaffna 
Centre for open and distance learning 
 
Course: Certificate Course in Basic ICT Skills 
 
Duration: 60 hours 
 
Course fee: Rs. 20000/- 
 
Application fee: Rs. 500/- 
 
Closing date: 20-08-2023. 
 
Application method: by register post. 
 
Classes will be conducted in weekends. 
 
 
Click the link below for full details 
 
 
Click the link below for download application
 
 
 
Previous:

 
Certificate Course in Basic ICT Skills - Batch 11 (University of Jaffna) Certificate Course in Basic ICT Skills - Batch 11 (University of Jaffna) Reviewed by Irumbu Thirai News on August 05, 2023 Rating: 5

Selected List: Bachelor of Business Management (External) - 2023 (Jaffna University)

August 05, 2023
Selected List: Bachelor of Business Management (External) - 2023 (Jaffna University) Selected List: Bachelor of Business Management (External) - 2023 (Jaffna University) Reviewed by Irumbu Thirai News on August 05, 2023 Rating: 5

இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

August 05, 2023


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செஷன் நீதிமன்றம் இவ்வாறு 3 வருட சிறை தண்டனை விதித்ததோடு ஒரு லட்சம் பாகிஸ்தானிய ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான் கான், பிரதமர் பதவியை இழந்தார். அதன் பின்னர் அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன அதில் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளும் அடங்கும். 

எவ்வாறாயினும் இம்ரான் கான் தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார். மேலும் பொது மக்களிடையே அவருக்கான ஆதரவு அதிகரித்திருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


Previous:


இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்! இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்! Reviewed by Irumbu Thirai News on August 05, 2023 Rating: 5

2023 ஜூலை மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in July 2023

August 05, 2023


2023 ஜூலை மாதம் வெளியான அரசு வர்த்தமானிகளை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 

 

Here we are giving the official government Gazettes published in the month of July 2023 in trilingual.

July 07

Tamil 

English

Sinhala 

 

July 14

- Not yet published (Section (11A) - Advertising) -

 

July 21

Tamil 

English 

Sinhala 

 

July 28

Tamil 

English 

Sinhala 

 

 

Previous:

Bachelor of Management Studies Honours in Human Resource Management - (The Open University of Sri Lanka) 

 

04-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 04-08-2023 

 

2023 ஜூலை மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in July 2023 2023 ஜூலை மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in July 2023 Reviewed by Irumbu Thirai News on August 05, 2023 Rating: 5

Bachelor of Management Studies Honours in Human Resource Management - (The Open University of Sri Lanka)

August 05, 2023


This is a 04 year degree programme. with 120 course credits worth courses along with industrial training and scientific research in the field of Human Resource Management. This degree programme is carefully designed with the utmost intention of producing highly skilled management graduates specialized in Human Resource Management who will be ideal candidates to meet the highest industry standard in people management. 
 
Closing Date for Online Applications: 31st August 2023 
 
Date of the Selection Test: 23rd September 2023 from 10.30 am – 12.00 noon 
 
Duration: 04 years. 
 
Application Fee: 750/-
 
Course Structure Click here
 
Prospectus Click here
 
Click the link below for online application: 





Previous:
 

Bachelor of Management Studies Honours in Human Resource Management - (The Open University of Sri Lanka) Bachelor of Management Studies Honours in Human Resource Management - (The Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on August 05, 2023 Rating: 5

04-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 04-08-2023

August 05, 2023

 
04-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (05-08-2023 - 11:15AM) தமிழ்  மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்கின் மூலம் பார்வையிடலாம். 
 
 
Click the link below for Gazettes. 

 



Previous:
 
04-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 04-08-2023 04-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 04-08-2023 Reviewed by Irumbu Thirai News on August 05, 2023 Rating: 5

விரைவில் 5000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - அமைச்சர் சுசில்

August 02, 2023


விரைவில் 5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

 பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அது தொடர்பாக அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

 இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், 

விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பிரதான பாடங்களுக்காக 09 மாகாணங்களுக்கமைய இந்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார். 

 எதிர்காலத்தில் மாகாணங்களினூடாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தேசிய பாடசாலைகளுக்கான ஆட்சேர்ப்பு கல்வி அமைச்சினால் செய்யப்படும் செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



Previous:


விரைவில் 5000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - அமைச்சர் சுசில் விரைவில் 5000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - அமைச்சர் சுசில் Reviewed by Irumbu Thirai News on August 02, 2023 Rating: 5

31-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 01, 2023


31-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 

இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.




Previous:


31-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 31-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on August 01, 2023 Rating: 5

Amended Examination Calendar for August 2023

July 31, 2023
Amended Examination Calendar for August 2023 Amended Examination Calendar for August 2023 Reviewed by Irumbu Thirai News on July 31, 2023 Rating: 5

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகள் - 2023

July 30, 2023


2023 October 2 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு சகல அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே சித்திரம் மற்றும் கட்டுரை போட்டிகளை நடாத்துவதற்கான விண்ணப்பங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது. 

சித்திரப் போட்டி 03 குழுக்களாக நடாத்தப்படும். 

கட்டுரைப் போட்டி 02 குழுக்களாக தமிழ், சிங்களம் மொழி மூலங்களில் நடாத்தப்படும். 

பரிசுகள்
1ம் இடம் - ரூ. 15,000 பணப்பரிசும் கிண்ணமும் சான்றிதழும். 

2ம் இடம் - ரூ. 10,000 பணப்பரிசும் கிண்ணமும் சான்றிதழும். 

3ம் இடம் - ரூ. 7,500 பணப்பரிசும் கிண்ணமும் சான்றிதழும். 

திறமைக்கான பரிசுகள் - ரூ. 3,000 பெறுமதியான 05 ஆறுதல் பரிசில்களும் சான்றிதழும் 


சகல ஆக்கங்களும் 31-08-2023 ற்கு முன் நேரிலோ தபால் மூலமோ அனுப்ப வேண்டும். 

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களின் பிள்ளைகள் கலந்து கொள்ள முடியாது. 

வெற்றி பெறுபவர்களுக்கான பரிசில்கள் ஒக்டோபர் 2 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் விஷேட நிகழ்வின் போது வழங்கப்படும். 

விண்ணப்பம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.








Previous:



உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகள் - 2023 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகள் - 2023 Reviewed by Irumbu Thirai News on July 30, 2023 Rating: 5
Powered by Blogger.