பாடசாலை கல்வி முறைமை, தொழிற் கல்வி, ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வு தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர்

August 24, 2023


பாடசாலை கல்வி முறைமை, தொழிற்கல்வி வழங்குதல், ஆசிரியர் பற்றாக்குறைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள். ஆசிரியர் இடமாற்றம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இது தொடர்பான விடயங்களை தெரிவித்தார். 

அவர் இவை தொடர்பில் தெரிவிக்கையில்,
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் கல்வி அமைச்சர் என்ற வகையில் கல்வித் துறையின் முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தி வருகிறார்.

கல்வித் துறையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நவீன உலகுக்கு முகங்கொடுக்கக் கூடியவாறு, எமது மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.  அதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலைத்துறை, கணிதவியல் உள்ளிட்ட பாட விடயதானங்களை உள்ளடக்கிய வகையில் “STEAM” என்ற தொனிப்பொருளில் எதிர்காலத்தில் கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, அண்மையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறிவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கவும் மேலும் இரண்டாம் மொழி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கும் அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே சுமார் 8000 பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் மேலும் 5500 பட்டதாரிகள், ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள். 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 

மேலும், நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.. 

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் வரை மாணவர்கள் தமது நேரத்தை வீணாகக் கழிப்பதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு ஆங்கிலம், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சிகளுடன் கூடிய பாடநெறிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இது மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள உதவும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Source: news.lk



Previous:

பாடசாலை கல்வி முறைமை, தொழிற் கல்வி, ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வு தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் பாடசாலை கல்வி முறைமை, தொழிற் கல்வி, ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வு தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on August 24, 2023 Rating: 5

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளர் (தகவல் தொழில்நுட்பம்) பதவிக்கான விண்ணப்பம்

August 24, 2023


தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் பிரதிப் பணிப்பாளர் (தகவல் தொழில்நுட்பம்) பதவிக்கான விண்ணப்பங்களை கோருதல் 

மேற்படி விடயம் தொடர்பாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவித்த வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் முழு வடிவத்தை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:


தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளர் (தகவல் தொழில்நுட்பம்) பதவிக்கான விண்ணப்பம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளர் (தகவல் தொழில்நுட்பம்) பதவிக்கான விண்ணப்பம் Reviewed by Irumbu Thirai News on August 24, 2023 Rating: 5

சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்!

August 23, 2023


சந்திராயன் - 3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது இந்தியா. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (23) 40 நாட்கள் பயணத்தின் பின்னர் மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப் பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது.

சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தரையிறங்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதையடுத்து விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 க்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது 

சந்திராயன்-3 ஆனது தனது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமையின் ஊடாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பின்னர், நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு சாதனைகளைப் படைத்த உலகின் 4வது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. 

தென் துருவத்தை தொட்ட முதல் நாடு:
நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் பொதுமக்களுக்காக இஸ்ரோவின் உத்தியோகபூர்வ YOUTUBE தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டமை சிறப்பம்சமாகும்.  

சந்திரயான் 3 கடந்து வந்த பாதை
இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் 386 கோடி இந்திய ரூபா செலவில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் - 2 திட்டத்திற்கு 978 கோடி இந்திய ரூபா செலவிடப்பட்டது. சந்திரயான்-3 திட்டத்திற்கான செலவு 615 கோடி இந்திய ரூபா. 

சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்துகொண்டு LVM3 M4 ஏவுகணை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

பின்னர், சந்திரயான்-3 விண்கலத்தின் பாதை உயரத்தை உயர்த்தும் (Orbit Raising) நடவடிக்கை 5 முறை மேற்கொள்ளப்பட்டது. புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி இடையிலான நேரத்தில் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. 

 ஆகஸ்ட் 17 ஆம் திகதி சந்திரயான்-3 உந்து சக்தி கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. 

 ஆகஸ்ட் 23: விக்ரம் லேண்டர் நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கியது 


 விக்ரம் லேண்டர் நிலவில் என்ன செய்யப் போகிறது? 
 நிலவின் தென் துருவப் பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்கி, அங்கு சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யவுள்ளது. 

 நிலவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, அங்குள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பம் தாங்கும் தன்மை கொண்டதா போன்ற பல தரவுகளை சந்திரயான்-3 கண்டறியவுள்ளது. 

 தகவல்களை கண்டறிவது ஆகிய பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. இதேபோல், பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. 

 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதன் உள்ளே இருக்கும் ரோவர் (Rover) எனப்படும் ஊர்திக்கலன் வெளியே வரும். 

இந்த ஊர்திக்கலன் நிலவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து, தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவிற்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களை சேகரித்து அனுப்பும்.
Source: newsfirst.
சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்! சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்! Reviewed by Irumbu Thirai News on August 23, 2023 Rating: 5

Results Released: 2nd EB Exam for Development Officers (DO) Service - 2018(1) 2023

August 22, 2023
Results Released: 2nd EB Exam for Development Officers (DO) Service - 2018(1) 2023 Results Released: 2nd EB Exam for Development Officers (DO) Service - 2018(1) 2023 Reviewed by Irumbu Thirai News on August 22, 2023 Rating: 5

COMMONWEALTH POSTGRADUATE SCHOLARSHIPS TENABLE IN THE UNITED KINGDOM - 2024

August 21, 2023

 
MINISTRY OF EDUCATION 
COMMONWEALTH POSTGRADUATE SCHOLARSHIPS TENABLE IN THE UNITED KINGDOM – 2024 
 
Applications are invited from eligible Sri Lankans for awarding of Postgraduate Scholarships offered under the Commonwealth Scholarship Programme. 
 
 
Fields of Study: 
Science and Technology for development 
 
Strengthening health system and capacity 
 
Promoting global prosperity 
 
Strengthening global peace, security and governance 
 
Strengthening resilience and response to crisis 
 
Access, inclusion and opportunity 
 
 
Application Method
Online 
 
Closing Date: 
18th September 2023. 
 
 
Click the link below for online application: 
 
 
Scholarship Commission website Click here
 
 
 
Previous:
 
COMMONWEALTH POSTGRADUATE SCHOLARSHIPS TENABLE IN THE UNITED KINGDOM - 2024 COMMONWEALTH POSTGRADUATE SCHOLARSHIPS TENABLE IN THE UNITED KINGDOM - 2024 Reviewed by Irumbu Thirai News on August 21, 2023 Rating: 5

G.C.E.(A/L) Communication & Media Studies: Question Paper Structure and Prototype Questions 2022 and afterwards

August 21, 2023

 
G.C.E.(A/L) Examination – Structure of the question paper and prototype questions 2022 and afterwards. 
 
2022 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான வினாத்தாள் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும்
 
Subject:  Communication & Media Studies (29)


Click the links below for full details (Tamil & Sinhala)
 
 
 
 
Previous:
 
 
 
G.C.E.(A/L) Communication & Media Studies: Question Paper Structure and Prototype Questions 2022 and afterwards G.C.E.(A/L) Communication & Media Studies: Question Paper Structure and Prototype Questions 2022 and afterwards Reviewed by Irumbu Thirai News on August 21, 2023 Rating: 5

G.C.E.(A/L): Question Paper Structure and Prototype Questions 2023 and afterwards (Korean-88)

August 21, 2023

 
G.C.E.(A/L) Examination – Structure of the question paper and prototype questions 2023 and afterwards. 
 
2023 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான வினாத்தாள் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும்
 
Subject: Korean (88)  
 
 
Click the link below for full details:




Previous:
 
G.C.E.(A/L): Question Paper Structure and Prototype Questions 2023 and afterwards (Korean-88) G.C.E.(A/L): Question Paper Structure and Prototype Questions 2023 and afterwards (Korean-88) Reviewed by Irumbu Thirai News on August 21, 2023 Rating: 5

Examination Calendar for September 2023

August 21, 2023

 
The Examination department has released the Examination Calendar for September 2023. 
 
பரீட்சை திணைக்களத்தால் 2023 செப்தம்பர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
 
Click the link below for examination calendar:

 
 
 
 
Previous:
 
 
 
Examination Calendar for September 2023 Examination Calendar for September 2023 Reviewed by Irumbu Thirai News on August 21, 2023 Rating: 5

Circular: Providing an Adjustment Allowance for Teacher Advisors’ Service / ஆசிரியர் ஆலோசகர் சேவைக்காக அனுசரிப்பு கொடுப்பனவொன்றை வழங்குதல்

August 19, 2023

 
Circular: Providing an Adjustment Allowance for Teacher Advisors’ Service 
 
Circular No: 25/2023 
 
ஆசிரியர் ஆலோசகர் சேவைக்காக அனுசரிப்பு கொடுப்பனவொன்றை வழங்குதல் 
 
மேற்படி விடயம் சம்பந்தமாக கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
1) 2023/03/27 ம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய 2022-01-02 முதல் அமுலாகும் வகையில் ஆசிரியர் ஆலோசகர் சேவைக்காக அனுசரிப்பு கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு உள்ளீர்க்கப்படுவதற்கு முன்னால் இலங்கை ஆசிரியர் சேவையில் பெறப்பட்ட சம்பள ஏற்றத்தை விட ஆசிரியர் ஆலோசகர் சேவையின் போது குறைவாக சம்பள ஏற்றத்தை பெற்றுள்ள ஆசிரிய ஆலோசகர்களுக்கு மாத்திரம் புதிய சம்பள திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சம்பள ஏற்றத்தின் பெறுமதி இலங்கை ஆசிரியர் சேவையில் இறுதியாக பெறப்பட்ட சம்பள ஏற்றத்தின் நிதி பெறுமதியை விட குறைவான காலப்பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தும் வகையில், 
 
1. பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 06/2006 இல் 19 (உ) வின் கீழ் கட்டப்பட்டுள்ளவாறு அனுசரிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கும் 
 
11. சகல பணிகளுக்காகவும் அதை சம்பளத்தில் ஒரு பாதியாக கருதுவதற்கும் 
 
 
2) 2022-01-02 ஆம் திகதி உள்ளீர்க்கப்பட்டு ஆசிரியர் ஆலோசகர் சேவையில் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்களின் ஓய்வூதியத்தையும் மேற்கண்டவாறு தயாரித்து வழங்குவதற்கும்.. 
 
 
Click the link below for circulars (Tamil, English and Sinhala) 

 
 
 
 
Previous:
 
 
Circular: Providing an Adjustment Allowance for Teacher Advisors’ Service / ஆசிரியர் ஆலோசகர் சேவைக்காக அனுசரிப்பு கொடுப்பனவொன்றை வழங்குதல் Circular: Providing an Adjustment Allowance for Teacher Advisors’ Service / ஆசிரியர் ஆலோசகர் சேவைக்காக அனுசரிப்பு கொடுப்பனவொன்றை வழங்குதல் Reviewed by Irumbu Thirai News on August 19, 2023 Rating: 5

Selected Name List for Interview (Recruitment to Management Service Officer's Service)

August 18, 2023


Limited competitive exam for recruitment to grade 111 of Management Service Officer's Service 2019 (2021) - 3rd stage 

Name list of the candidates to be called to the interview 

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 111ஆந் இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 2019 (2021) - மூன்றாம் கட்டம். 

Click the link below for details and name list.



Previous:


Selected Name List for Interview (Recruitment to Management Service Officer's Service) Selected Name List for Interview (Recruitment to Management Service Officer's Service) Reviewed by Irumbu Thirai News on August 18, 2023 Rating: 5

Circular: Documents to be submitted for obtaining the Approval on the Payment of Pensions

August 18, 2023

 
Documents to be submitted for obtaining the Approval on the Payment of Pensions to the Public Officers / Judicial Officers, who have been sent on Retirement under Section 2:12 and 2:15 of the Pension Minute. 
 
ஓய்வூதிய பிராமணக் கோவையின் 2:12 மற்றும் 2:15 பிரிவின் கீழ் ஓய்வு பெறச் செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர் / நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் செலுத்துவது தொடர்பில் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு முன்வைக்க வேண்டிய ஆவணங்கள் 
 
Circular Number 15/2023 
 
Circular Date 2023-07-31 
 
 
Click the link below for circulars: 

 
 
 
Previous:
 
 
Circular: Documents to be submitted for obtaining the Approval on the Payment of Pensions Circular: Documents to be submitted for obtaining the Approval on the Payment of Pensions Reviewed by Irumbu Thirai News on August 18, 2023 Rating: 5

Bachelor of Software Engineering Honours - 2023/2024 (The Open University of Sri Lanka)

August 18, 2023


This degree programme aims to produce quality, skillful graduates in this rapidly developing discipline, which covers one of the major fields of computing according to the ACM/IEEE curriculum guidelines. The degree has been specially designed in response to the industry demand to produce graduate software engineers.

Medium: English

Duration: 4 years.

Application fee: Rs. 750/-

Application opening date: 20-8-2023

Application closing date: 22-09-2023

Selection test: 8, 10, 11, 12 October 2023.

Student guide book Click here

Course page (full details) Click here

Online Application Click here






Previous:

 
Bachelor of Software Engineering Honours - 2023/2024 (The Open University of Sri Lanka) Bachelor of Software Engineering Honours - 2023/2024 (The Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on August 18, 2023 Rating: 5

18-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-08-2023

August 18, 2023


18-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 

குறிப்பு: தற்போதைய நிலையில் (18-08-2023 - 11:45AM) தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல வர்த்தமானிகள் பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்குகளை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 

Click the link below for Gazette






Previous:


18-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-08-2023 18-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-08-2023 Reviewed by Irumbu Thirai News on August 18, 2023 Rating: 5
Powered by Blogger.