சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்!
Irumbu Thirai News
January 17, 2024
சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்த கூடாது என்று மத்திய மாகாணத்தில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. பெற்றோர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த சுற்றறிக்கையை மீறும் வகையில் சில ஆசிரியர்கள் மேலதிக வகுப்புக்களை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள், சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மத்திய மகாண கல்வி அமைச்சு விசேட சுற்றி வளைப்பு பிரிவை நிறுவி உரிய இடங்களில் சோதனையும் நடத்தியது.
சுற்றி வளைப்பிற்காக அமைக்கப்பட்ட விசேட குழு உரிய இடங்களுக்கு சென்று முறையாக விசாரணைகளையும் மேற்கொண்டது.
இதன் போது சில ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பில் பங்கேற்குமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே இவ்வாறு சுற்றறிக்கையை மீறும் வகையில் மேலதிக வகுப்புகளை பணம் வசூலித்து நடாத்திய 51 ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Previous:
சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்!
Reviewed by Irumbu Thirai News
on
January 17, 2024
Rating: