215 டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம்
irumbuthirai
September 01, 2019
215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு
ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (31) நடைபெற்றது. இதில் 148 ஆரம்பக்கல்வி ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனமும் 67 உடற்கல்வி டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனமும் ஆளுநரினால் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ஆரம்பகால கல்வி என்பது மிகவும் முக்கியமானது. விழுந்திருக்கின்ற இந்த தேசத்தின், விளிம்பிலே இருக்கின்ற மக்களை திரும்பவும் வாழவைப்பதற்காகவும், வருகின்ற சந்ததியின் ஆரம்பகல்வியை உங்கள் கைகளில் இந்த மாகாணம் இன்று கொடுக்கின்றது. எனவே இந்த பொறுப்பை
இறைபக்தியுடனும் சமுதாய நோக்கத்துடனும் செய்து இந்த தேசத்தை திருப்பவும் கட்டியெழுப்பும் பணியை செவ்வனே செய்யவேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள் என்று ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
215 டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம்
Reviewed by irumbuthirai
on
September 01, 2019
Rating: