பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டம்
irumbuthirai
September 16, 2019
எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் 22 வரையில் குருநாகல் டி.பீ.வெலகெதர விளையாட்டு மைதானத்தில் பாடசாலைகளுக்கிடையிலான
அஞ்சல் ஓட்டப்போட்டி நடைபெறவுள்ளது. நாடு முழுவதிலும் 357 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 8,000 வீரர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.
12 வயதிற்கு உட்பட்ட 14 வயதிற்கு உட்பட்ட, 16 வயதிற்கு உட்பட்ட, 18 வயதிற்கு உட்பட்ட மற்றும் 20 வயதிற்கு உட்பட்ட 5 பிரிவுகளில் போட்டி நடைபெறவுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய வகையில் 38 அஞ்சல் ஓட்டப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
கல்வி அமைச்சு மற்றும் வடமேல் மாகாண கல்வி திணைக்களம் ஒன்றிணைந்து இந்த போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளன. போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை 0718009193 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
(அ.த.தி)
பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டம்
Reviewed by irumbuthirai
on
September 16, 2019
Rating: