வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்
irumbuthirai
October 05, 2019
கிராம உத்தியோகத்தர்கள் இரு நாள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர். சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சேவகர்களும் எதிர்வரும்
16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். கிராம உத்தியோகத்தர் சேவையை தனியொரு சேவையாக அறிவிக்குமாறும், தமக்கு 5000 ரூபா சலுகை கொடுப்பனவை பெற்றுத் தருவதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்பிப்பதாக தெரிவித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அதனை
சமர்பிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்த மாதம் 9 ஆம் மற்றும் 10 திகதிளில் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் எல்பிட்டிய பிரதேச தேர்தல் நடைபெறுவதை கருத்திற்கொண்டு எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் தமது போராட்டத்தை முன்னேடுக்க போவதாக அந்த தொழிற்;சங்கத்தின் தலைவர் கே.டி.சுமித் கொடிகார கூறியுள்ளார்.
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்
Reviewed by irumbuthirai
on
October 05, 2019
Rating: