இரத்தானது நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம்!
irumbuthirai
July 27, 2020
ஜுலை மாதம் 30 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் வேலைத்திட்டம் மேற்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் காரணமாக இதனை திட்டமிட்ட வகையில் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அரசியல் கட்சி செயலாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
அ.த.தி.
இரத்தானது நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம்!
Reviewed by irumbuthirai
on
July 27, 2020
Rating: