செப்தம்பர் - திசம்பர் வரையான பாடசாலை நாட்காட்டி

August 29, 2020


02-09-2020 முதல் திசம்பர் வரையான காலப்பகுதிக்கான பாடசாலை நாட்காட்டியை இங்கு தருகிறோம்.

தவணை விடுமுறை, பரீட்சை திகதிகள் போன்றவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

செப்தம்பர் - திசம்பர் வரையான பாடசாலை நாட்காட்டி செப்தம்பர் - திசம்பர் வரையான பாடசாலை நாட்காட்டி Reviewed by irumbuthirai on August 29, 2020 Rating: 5

2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு:

August 28, 2020


ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். 
இம்முறை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாகவும் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 
இதேவேளை, பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறையை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கி மீண்டும் ஜனவரி 4 ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு: 2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு: Reviewed by irumbuthirai on August 28, 2020 Rating: 5

நீடிக்கப்பட்டது சீருடை வவுச்சருக்கான கால எல்லை..

August 27, 2020


சகல அரச பாடசாலைகளிலும் தரம் 1 மாணவர்களுக்காக 2020 ஆம் ஆண்டிற்காக விநியோகிக்கப்படும் சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலததை செப்தம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
ஏற்கனவே இந்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2020.08.31ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. நாட்டில் நிலவிய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மாணவர்களுக்கான இந்த வவுச்சர்கள் மூலம் சீருடைகளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இதற்கான கால எல்லையை மேலும் நீடிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு   ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீடிக்கப்பட்டது சீருடை வவுச்சருக்கான கால எல்லை.. நீடிக்கப்பட்டது சீருடை வவுச்சருக்கான கால எல்லை.. Reviewed by irumbuthirai on August 27, 2020 Rating: 5

பட்டதாரி நியமனம்: முறைப்பாடுகளுக்கு பின் வெளியான புதிய அறிவிப்பு:

August 27, 2020


தொழிலற்ற பட்டதாரிகளுக்கு மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கு நியமனம் வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 16-8-2020 வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலுக்கு மேலதிகமாக திருத்தியமைக்கப்பட்ட புதிய பெயர்ப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
மாவட்ட ரீதியாக திருத்தியமைக்கப்பட்ட பெயர் பட்டியல், அதற்கான காரணம், நிராகரிக்கப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட எண்ணிக்கை போன்ற விடயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. 
இதுதொடர்பாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.

 


புதிய பெயர் பட்டியல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Name list
பட்டதாரி நியமனம்: முறைப்பாடுகளுக்கு பின் வெளியான புதிய அறிவிப்பு: பட்டதாரி நியமனம்: முறைப்பாடுகளுக்கு பின் வெளியான புதிய அறிவிப்பு: Reviewed by irumbuthirai on August 27, 2020 Rating: 5

அமெரிக்க தேர்தல்.... இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளுமா..?

August 26, 2020


அமெரிக்க தேர்தல்:  
கொவிட் 19 கொள்ளை நோய்க்கிடையே எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. 
அமெரிக்க யாப்பின் படி ஜனாதிபதி தேர்தல் தினம் நிச்சயிக்கப்பட்டதாகும். தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யும் திகதியும் நிச்சயிக்கப்பட்டது. இம்முறையும் வழமை போன்று குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களிடையே போட்டி நிலவுகிறது. அமெரிக்க தேர்தல் முறை கொஞ்சம் சிக்கலானது. விளக்குவது கடினம். ஜனாதிபதியுடன் உப ஜனாதிபதி தேர்வும் நடைபெறும். 
 குடியரசுக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவருடைய துணை ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். 
 ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார். இவர் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருக்கும் போது அவரின் துணை ஜனாதிபதியாக இருந்தவர். பைடனின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் ஒரு பெண். இது அமெரிக்க வரலாற்றில் விஷேட நிகழ்வாகும். பைடன் நவம்பரில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதியாக அவர் தெரிவாவார். 

#வரலாற்றில் இடம்பிடிக்கும் கமலா ஹரீஸ்.
முதலாவது ஆசிய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரீஸ் அவர் 55 வயதுடைய கமலா ஹாரிஸ் எனும் ஜமெய்க்கா மற்றும் 

ஆசிய வம்சாவளி கொண்ட பெண்ணாவார். கலிஃபோனியா செனடரான இவர் ஒரு சட்டத்தரணி. முதலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடன் உடன் போட்டியிட்டார். போட்டியில் பின் வாங்க ஆரம்பித்ததும் போட்டியில் இருந்து விலகி பைடனுக்கு ஆதரவளித்தார். தற்போது ஜோ பைடனின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வந்திருக்கிறார். இவர் அமெரிக்க சென்ட் க்கு தெரிவான முதலாவது ஆசிய வம்சாவளி பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
கமலா ஹரிசின் தாய் இந்தியாவை அதுவும் தமிழ் நாட்டை சேர்ந்தவர். அவரின் குடும்பத்தவர்கள் இன்றும் தமிழ் நாட்டில் வசிக்கின்றனர். புகழ் பெற்ற ஜோசியராக புது டில்லியில் வசிக்கும் பாலச்சந்தர கோபாலன் கமலாவின் மாமனார் ஆவார். 

 #இலங்கை வம்சாவளி ரோஹிணி:  
கமலா ஹரிஸ் தனது அலுவலக ஆளணித் தலைமை உத்தியோகதராக ரோஹிணி லக்ஷ்மி எனும் இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணை நியமித்துள்ளார். அவ்வாறான பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட முதல் ஆசிய வம்சாவளிப் பெண்ணாக அவர் உள்ளார். இவர் இலங்கையின் வடபுலத்தை சேர்ந்த பெற்றோருக்கு மகளாக பிறந்தவர். வைத்தியரான இவரது தந்தை 1980 களில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர். 
அத்துடன் மிச்சிகன் மற்றும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் மிச்சிகன் செனடர் டெபி இன் அலுவலக பணியாளராகவும், பின்னர் கொளராடோ செனடர் மைக்கல் பெனட் இன் சுகாதார ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். 
அக்காலப்பகுதியில் கமலா ஹாரிசின் அறிமுகம் ரோஹிணிக்கு கிடைத்தது. இருவரும் தமிழ் என்பதால் ஒட்டுறவு அதிகமாக இருந்தது. அதன் பின்னர் உதவி அலுவலக ஆளணித் தலைமை உத்தியோகதராக கமலாவுடன் இணைத்து கொண்டார். தற்போது அலுவலக ஆளணித் தலைமை உத்தியோகதர் பதவிக்கு மேலதிகமாக கமலாவின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியையும் அவர் வகித்து வருகிறார். 

 #கொரோனா பின்னணியில் அமெரிக்க தேர்தல்:  
கொரோணா கட்டுப்பாடு மிக மோசமான நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். நாட்டின் தலைவர் என்ற ரீதியில் டொனால்ட் டிரம்ப் ஒரு சிறு பிள்ளை போன்றே ஆட்சி செய்கிறார். 
குறிப்பாக தனக்கு கொரோணா என்று வேடிக்கையாக சொல்லித் திரிந்தமை, வெட்டியாக சீனாவுடன் முரண்பாட்டுக் கொண்டு நின்றமை, ஜோர்ஜ் ப்ளோயிட் கொலைக்கு பின் நடந்து கொண்ட முறை என்பன அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கி உள்ளது. 
கிளிண்டன், ஜோர்ஜ் W புஷ், பரக் ஒபாமா ஆகிய மூவரும் தொடர்ச்சியாக தமது இரு பதவிக் காலங்களிலும் ஜனாதிபதியாக இருந்த பின்னர் ஓய்வு பெற்றனர். ஆனால் டிரம்ப் அண்மைக்கால ஜனாதிபதிகளில் தோல்வி கண்டு ஒதுங்கும் தலைவராக மாறலாம் என்றே எதிர்வு கூறப்படுகிறது. என்ற போதிலும் கொரோனா பாதிப்பினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட அமெரிக்க பொது மக்களிற்காக அரசு பெரும் தொகையை செலவு செய்கிறது. மூன்றாம் மண்டல நாடுகள் போன்று இந்த நலன்புரிகள் ஆட்சியை தீர்மானிக்குமா என்பதை நவம்பர் 3 ஆம் திகதியே அறிந்து கொள்ளலாம். 

#இலங்கை தமிழர் பிரச்சினையும், அமெரிக்க தேர்தலும்:  
மறுபுறம் ஜோ பைடன் வெற்றி பெற்றால் அமெரிக்க அரசின் அதிகாரம் மிக்க இரு பதவிகளுக்கு தமிழர்கள் வரப் போகிறார்கள். இது இலங்கையின் தமிழர் பிரச்சினை குறித்த அமெரிக்காவின் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரலாம் என்று எதிர்வு கூறலாம். குறிப்பாக தமிழ் டையஸ்போராவை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹிணி போன்றவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது தெளிவில்லை. இந்நிலையில் இலங்கை குறித்த அமெரிக்காவின்  கொள்கையில் எவ்வாறான மாற்றங்கள் வரும் என்ற கேள்விக்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும். சில வேளை அந்த பதில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளலாம்.... 
fபயாஸ் M fபரீட்.
அமெரிக்க தேர்தல்.... இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளுமா..? அமெரிக்க தேர்தல்.... இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளுமா..? Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

M.Sc in Computer Science: University of Sri Jayawardanapura

August 26, 2020

M.Sc in Computer Science:
University of Sri Jayawardanapura
Closing date: 15-09-2020.


M.Sc in Computer Science: University of Sri Jayawardanapura M.Sc in Computer Science: University of Sri Jayawardanapura Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

MBA: University of Jaffna & University of Moratuwa

August 26, 2020
Master of Business Administration (MBA)
University of Jaffna & University of Moratuwa.


MBA: University of Jaffna & University of Moratuwa MBA: University of Jaffna & University of Moratuwa Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: Insurance Regulatory Commission of Sri Lanka

August 26, 2020


Vacancy in the Insurance Regulatory Commission of Sri Lanka.
Closing date: 31-08-2020.



Vacancy: Insurance Regulatory Commission of Sri Lanka Vacancy: Insurance Regulatory Commission of Sri Lanka Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: Sri Lanka State Trading (General) Corporation Ltd.

August 26, 2020

Vacancy in Sri Lanka State Trading (General) Corporation Ltd.
Closing date: 30-08-2020.


Vacancy: Sri Lanka State Trading (General) Corporation Ltd. Vacancy: Sri Lanka State Trading (General)  Corporation Ltd. Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: Ministry of Health

August 26, 2020

Vacancy in the Ministry of Health.
Closing date: 30-08-2020.


Vacancy: Ministry of Health Vacancy: Ministry of Health Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: State Printing Corporation

August 26, 2020

Vacancy in the State Printing Corporation
Closing date: 31-08-2020.



Vacancy: State Printing Corporation Vacancy: State Printing Corporation Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: UNFPA (United Nations Population Fund)

August 26, 2020

Vacancy in the UNFPA (United Nations Population Fund)
Closing date: 30-08-2020.


Vacancy: UNFPA (United Nations Population Fund) Vacancy: UNFPA (United Nations Population Fund) Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancies: Ministry of Irrigation (Irrigation Department)

August 26, 2020


Vacancies in the Ministry of Irrigation (Irrigation Department)
Project: Basnagoda Reseevoir Project
Closing date: 31-08-2020.



Vacancies: Ministry of Irrigation (Irrigation Department) Vacancies: Ministry of Irrigation (Irrigation Department) Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5
Powered by Blogger.