சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை..
irumbuthirai
December 22, 2020
ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக தான் தெரிவித்த கருத்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பரப்பப்பட்டு வருவதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
வெளிநாட்டு டிஜிட்டல் நடவடிக்கையாளர்களை பதிவு செய்வதாகவே கூறப்பட்டது. மாறாக இங்குள்ள சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் பாவனையாளர்களை பதிவு செய்வதாக கூறப் படவில்லை.
இந்த Digital பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை
பெரிதும் பாதிப்பதாகவும் நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிப்பதாகவும் அமைகிறது. அதேவேளை இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை விட்டு பெருந்தொகையான பணம் வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை..
Reviewed by irumbuthirai
on
December 22, 2020
Rating:
![சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை..](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifU166GseeE-b-RmLx3UC9L11GQnCJtMwsKqzjePKtFmuMbBKDqDL9GS_p3R7VZq571Xr3_zHJAS00wMEQb_QgpIywgmx5MjF-zoGIZ1wSCMG4pqNrsvoJSny9_C0Hj0QU3pVfW6CvuAU/s72-c/20201219_193006.jpg)