வைரஸ் பாதிப்பிற்காக ஏலத்தில் விற்கப்பட்ட உலகின் முதலாவது ட்விட்டர் (Twitter) பதிவு:

March 27, 2021

'எனது ட்விட்டை நான் அமைத்துள்ளேன்' என்ற ட்விட்டர் (Twitter) பதிவானது மலேசியாவைத் தளமாகக் கொண்ட வர்த்தகர் ஒருவரால் 2.9 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. 
இந்த டுவிட்டர் பதிவே ட்விட்டர் நிறுவனர் ஜக் டோர்சி பதிவிட்ட 
முதலாவது பதிவாகும். இந்தப் பதிவு 2006 மார்ச் 21 ஆம் திகதி வெளியானதாகும். 
இந்த ஏலத்தொகையில் 95% டோர்சிக்குச் செல்லும் என்று நம்பப்படுகிறது. இந்த தொகையானது ஆபிரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு நன்கொடையாகக் கொடுக்கப்படும் என்று டோர்சி தெரிவித்துள்ளார்.
வைரஸ் பாதிப்பிற்காக ஏலத்தில் விற்கப்பட்ட உலகின் முதலாவது ட்விட்டர் (Twitter) பதிவு: வைரஸ் பாதிப்பிற்காக ஏலத்தில் விற்கப்பட்ட உலகின் முதலாவது ட்விட்டர் (Twitter) பதிவு: Reviewed by irumbuthirai on March 27, 2021 Rating: 5

10,000 மாணவர்களுக்கு படிக்கும்போதே வேலைவாய்ப்பு: உ.தரம் சித்தியடைந்தவர்களுக்கு அரிய வாய்ப்பு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு:

March 27, 2021

Computer Science (கணினி அறிவியல்) பட்டப்படிப்பிற்காக இம்முறை 10,000 மாணவர்கள் ஒரே தடவையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். 
திறந்த பல்கலைக்கழகத்துடன் (The Open University of Sri Lanka) இணைந்த வகையில், இப்பட்டப்படிப்பு முன்னெடுக்கப்படும். உயர்தர பரீட்சையில் எந்தவொரு பாடப்பிரிவிலும் சித்தியடைந்த மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். 
இதேவேளை தற்போது, 
நாட்டில் கணினி அறிவியல் துறையுடன் தொடர்புபட்ட 40,000 வேலைவாய்ப்புகள் காணப்படுவதாகவும் இதற்கமைய, தற்போது இந்த பட்டப்படிப்பில் இணைத்துக்கொள்ளப்படுபவர்களுக்கு முதலாம் ஆண்டிலிருந்தே வேலைவாய்ப்புகள் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்த சம்பத் அமரதுங்க மாணவர்கள் பாடநெறியையும் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமெனவும் கூறினார்.
10,000 மாணவர்களுக்கு படிக்கும்போதே வேலைவாய்ப்பு: உ.தரம் சித்தியடைந்தவர்களுக்கு அரிய வாய்ப்பு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு: 10,000 மாணவர்களுக்கு படிக்கும்போதே வேலைவாய்ப்பு: உ.தரம் சித்தியடைந்தவர்களுக்கு அரிய வாய்ப்பு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on March 27, 2021 Rating: 5

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் முதல் கட்டம் இன்று...

March 27, 2021

2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணி இன்று(27) நாட்டிலுள்ள 86 பாடசாலைகள் மற்றும் 
111 மத்திய நிலையங்களில் ஆரம்பமாகிறது. 
இந்த முதற்கட்ட பணிகள் இன்று 27 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05 ஆம் திகதி வரையில் நடைபெறும். நாட்டில் 57 நகரங்களில் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் முதல் கட்டம் இன்று... சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் முதல் கட்டம் இன்று... Reviewed by irumbuthirai on March 27, 2021 Rating: 5

ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே... வெளியான புதிய சுற்றுநிருபம்...

March 26, 2021

மேல் மாகாணத்தில் இதுவரை ஆரம்பிக்கப்படாமல் இருந்த தரம் 1-4, 6-10, மற்றும் 12 ஆகிய வகுப்புகள் இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது. 
எனவே இது தொடர்பாக விசேட சுற்றறிக்கை ஒன்று கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. 
அந்தவகையில்,
  • ஒரு வகுப்பில் அதிகமாக 15 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 
  • மாணவர்கள் குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவும் ஒருநாள் விட்டு மறுநாளே பாடசாலைக்கு வரவேண்டும். 
  • கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். 
  • ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியர்களும் தினமும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். 
  • ஏதேனும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டால், அந்த பகுதிக்குரிய பாடசாலைகளுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதிக்கு விடுமுறை வழங்கப்படும். 
போன்ற விடயங்கள் உட்பட பல அறிவுறுத்தல்கள் அதில் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே... வெளியான புதிய சுற்றுநிருபம்... ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே... வெளியான புதிய சுற்றுநிருபம்... Reviewed by irumbuthirai on March 26, 2021 Rating: 5

சூயஸ் கால்வாயில் சிக்கிய பாரிய கப்பல்: 5,000 கடல் மைல்களை சுற்றும் நிலையில் ஏனைய கப்பல்கள்:

March 26, 2021

சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கொள்கலன்களுடன் புறப்பட்ட 'எவர்கிரீன்' என்ற வணிக கப்பல் சுயஸ் கால்வாய் வழியாக நெதர்லாந்தின் ரோட்டர்டாமுக்கு சென்றுகொண்டிருந்தது. 
அப்போது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கட்டுப்பாட்டை இழந்த கப்பலின் முன்பக்கம் 
கால்வாயின் வடக்கு பக்க சுவற்றின் மீது மோதியுள்ளது. அடுத்த கணமே கப்பலின் பின்பக்கம் மேற்கு திசையில் இழுத்து தள்ளப்பட்டு மற்றொருபக்க சுவரில் மோதி நின்றது. இவ்வாறு பக்கவாட்டில் சிக்கிக்கொண்ட இந்த கப்பலால், அந்த பாதையில் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்தும் தடைப்பட்டது. 
மாற்று வழியில் ஏனைய கப்பல்கள் செல்ல வேண்டுமாயின், ஆப்பிரிக்காவின் ஊடாகவே செல்ல வேண்டும். இவ்வாறு செல்வதன் மூலம் குறைந்தது 10 நாட்கள் மேலதிகமாக பயணிக்க வேண்டிவரும் அதாவது மேலதிகமாக 5,000 கடல் மைல்களை கடக்க வேண்டி ஏற்படும். 
தற்போது இந்த நிலைமை காரணமாக ஏராளமான சரக்கு கப்பல்கள் கால்வாயின் தென்பகுதியில் குவிந்து வருகின்றன. கப்பல்களின் இந்த அணிவகுப்பால் அந்தக் கடல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
சர்வதேச கொள்கலன்களில் 30% மானவை தினமும் இந்த கால்வாயின் ஊடாகவே எடுத்துச்செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சூயஸ் கால்வாயில் சிக்கிய பாரிய கப்பல்: 5,000 கடல் மைல்களை சுற்றும் நிலையில் ஏனைய கப்பல்கள்: சூயஸ் கால்வாயில் சிக்கிய பாரிய கப்பல்: 5,000 கடல் மைல்களை சுற்றும் நிலையில் ஏனைய கப்பல்கள்: Reviewed by irumbuthirai on March 26, 2021 Rating: 5

புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகஸ்டில் நடைபெறுமா?

March 25, 2021

புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவது தொடர்பாக இன்னமும் 
இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இதேவேளை மேல் மாகாணத்தில் இதுவரை ஆரம்பிக்கப்படாதிருந்த தரம் 5, 11, 13 ஆகிய வகுப்புகளை தவிர்ந்த ஏனைய வகுப்புகளை இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கினாலும் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகஸ்டில் நடைபெறுமா? புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகஸ்டில் நடைபெறுமா? Reviewed by irumbuthirai on March 25, 2021 Rating: 5

இரு வருடங்களில் 04 பொதுத் தேர்தலை சந்தித்த இஸ்ரேல்!

March 25, 2021

இஸ்ரேலில் கடந்த 02 வருடங்களில் 4வது பொதுத் தேர்தலையும் நேற்று முன்தினம் அந்த மக்கள் சந்தித்துள்ளனர். 
தற்போது பதவியில் உள்ள பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு 
இந்தத் தேர்தல் சவால் மிக்கதாக அமையும் என சொல்லப்படுகிறது. 
 முன்னைய 03 தேர்தல்களிலும் எந்தத் தரப்பும் உறுதியான வெற்றியைப் பதிவு செய்யாத நிலையில், இழுபறியை முடிவுக்குக் கொண்டுவர அமைக்கப்பட்ட ஐக்கிய அரசாங்கமும் கடந்த டிசம்பர் மாதம் முறிந்தது. 
 நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் விசாரணை தொடங்க 02 வாரங்கள் இருக்கும் நிலையிலேயே இந்தத் தேர்தல் நடைபெற்றது. 
 இதேவேளை தம் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் பென்ஜமின் நெதன்யாகு, அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்று தெரிவித்துள்ளார். எனினும் பிரதமரை பதவி விலகக் கோரி இஸ்ரேலில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இணைப்பு: இதுவரை வெளியான முடிவுகளின்படி யாரும் பெரும்பான்மையைப் பெறவில்லை.
இரு வருடங்களில் 04 பொதுத் தேர்தலை சந்தித்த இஸ்ரேல்! இரு வருடங்களில் 04 பொதுத் தேர்தலை சந்தித்த இஸ்ரேல்! Reviewed by irumbuthirai on March 25, 2021 Rating: 5

கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மற்றுமொரு திகதி அறிவிப்பு

March 25, 2021

கொழும்பு பேராயரின் கீழ் உள்ள சகல கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் தரம் 5,11,13 ஆகிய வகுப்புகள் தவிர ஏனைய வகுப்புகளுக்காக எதிர்வரும் 
ஏப்ரல் 05 திகதியே மீண்டும் திறக்கப்படும் என கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். 
மாறாக மார்ச் 29 இல் ஆரம்பிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மற்றுமொரு திகதி அறிவிப்பு கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மற்றுமொரு திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on March 25, 2021 Rating: 5

இரட்டிப்பு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

March 25, 2021

இரட்டிப்பு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில், 18 மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட 10,787 மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த புதிய வகை கொரோனா திரிபு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 
இதேவேளை இந்த 10,787 மாதிரிகளில் 736 பேர் பிரித்தானியாவில் 
கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா திரிபுடனும் 34 பேர் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுடனும் ஒருவர் பிரேஸிலில் உருமாறிய கொரோனா திரிபுடனும் ஒத்துப்போவது தெரியவந்துள்ளது. 
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. 
எனினும், இந்த புதிய வகை வைரஸிற்கும் தொற்று அதிகரிக்கின்றமைக்கும் தொடர்பில்லையெனவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரட்டிப்பு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு இரட்டிப்பு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on March 25, 2021 Rating: 5

சா.தர வினாப்பத்திரங்கள் கடுமையாக இருந்ததாக குற்றச்சாட்டு: பதிலளித்த கல்வியமைச்சர்:

March 25, 2021

பல மாதங்களாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாத நிலையில் கடந்த வருடத்திற்கான க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை இம்மாதம் (2021-மார்ச்) நடைபெற்றது. 
ஆனால் இந்த பரீட்சைக்கான வினாபத்திரங்கள் 
கடுமையானதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருக்கும் குற்றாச்சாட்டு தொடர்பில் அமைச்சர் G.L. பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 
இந்த விடயத்தை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.   
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சா.தர வினாப்பத்திரங்கள் கடுமையாக இருந்ததாக குற்றச்சாட்டு: பதிலளித்த கல்வியமைச்சர்:  சா.தர வினாப்பத்திரங்கள் கடுமையாக இருந்ததாக குற்றச்சாட்டு: பதிலளித்த கல்வியமைச்சர்: Reviewed by irumbuthirai on March 25, 2021 Rating: 5

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சியினை தொடர்வதற்காக ஆசிரியர்களை தெரிவு செய்தல் - 2021/2022 (விண்ணப்பம் உட்பட முழு விபரங்களும் இணைப்பு)

March 24, 2021

ஆசிரியர் கல்லூரிகளில் 2021/2022 இரு வருட கால பயிற்சி பாடநெறியை தொடர்வதற்காக உரிய தகைமைகளை கொண்ட ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
  • ஆசிரியர் கல்லூரிகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைய மற்றும் நியமனத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர் சேவையின் பதவி உயர்வின் போது தொழில்சார் தகைமை இன்மையினால் பாதிப்புகள் ஏற்படுவது மாத்திரமின்றி பாடசாலைக் கல்வியின் பண்புசார் தரத்தை விருத்தி செய்வதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இச்சகல விடயங்களையும் கருத்திற்கொண்டு சகல பட்டதாரி அல்லாத பயிற்றப்படாத ஆசிரியர்கள் பயிற்சியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 

  • இம்முறை 25 பாடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
  • நியமனம் பெற்ற பாடத்திற்கே பயிற்சி பெற வேண்டும். 
  • விசேட கல்வி பாட நெறிகளுக்கு மாத்திரம் வேறு பாடங்களுக்காக நியமனம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 
  • நியமனக் கடிதத்தில் பாடம் குறிப்பிடப்படாத ஆசிரியர்கள் தாம் உயர்தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த பாடத்திற்கு பயிற்சியை பெறலாம். 
  • சாதாரண தர தகைமைகளின் அடிப்படையில் நியமனம் பெற்றவர்கள் நியமன பாடம் குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில் ஆரம்பப் பிரிவு நியமனமாக அது கருதப்படும். 
  • விண்ணப்ப முடிவு திகதி: 27-04-2021.
இது தொடர்பான முழுமையான அறிவுறுத்தல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
இது தொடர்பாக 28/2016 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சியினை தொடர்வதற்காக ஆசிரியர்களை தெரிவு செய்தல் - 2021/2022 (விண்ணப்பம் உட்பட முழு விபரங்களும் இணைப்பு) ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சியினை தொடர்வதற்காக ஆசிரியர்களை தெரிவு செய்தல் - 2021/2022 (விண்ணப்பம் உட்பட முழு விபரங்களும் இணைப்பு) Reviewed by irumbuthirai on March 24, 2021 Rating: 5

23-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

March 24, 2021

23-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
23-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 23-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on March 24, 2021 Rating: 5

27 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட Lanka Ashok Leyland

March 24, 2021

ஹோமாகம, ஜல்தர பிரதேசத்தில் அமைந்துள்ள, லங்கா அசோக் லேலண்ட் (Lanka Ashok Leyland) நிறுவனத்தின் வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலையில் செயற்பாடுகள் 27 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் விமல் வீரவன்ச இந்த தொழிற்சாலையை அண்மையில் பார்வையிட்டார். 
 1994 ஆம் ஆண்டு முதல் செயற்படாமல் இருந்த அசோக் லேலண்ட் 
நிறுவனத்தின் ஹோமாகம, ஜல்தரயில் அமைந்துள்ள வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலை அதாவது 27 வருடங்களுக்குப் பின் இவ்வாறு பணிகளை ஆரம்பித்துள்ளது. 
லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் முறையே இந்தியாவுக்கு 28% மற்றும் இலங்கைக்கு 72% என்ற அடிப்படையில் உண்டு. இதில் 30% உள்நாட்டு பங்கு உரிமையாளர்களுக்கு இருப்பதுடன் மிகுதி 42% கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் லங்கா லேலண்ட் அரச நிறுவனத்திற்கும் உள்ளது. 
வாகன பாகங்களை ஒனறு சேர்த்து 1994 ஆம் ஆண்டு முதல் பஸ் லொறி உட்பட வாகனங்களட இலங்கையில் தயாரிக்கப்பட்டு வந்ததுடன் இந்நாட்டில் வாகனங்களை பொருத்துவதை விட இந்தியாவிலிருந்து முழுமையாக அசோக் லேலண்ட் வாகனங்களை இறக்குமதி செய்வது இலாபகரமானதாக காணப்பட்டதால் 1994 ஆம் ஆண்டு முதல் வாகனங்களை தயாரிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. 
 சமீபத்தில் கைத்தொழில் அமைச்சு வாகனங்களை தயாரித்தல், வாகனங்களை பொருத்துதல், வாகன உதிரி பாகங்களை தயரித்தல் பற்றிய ஒரு நிலையான செயல்முறையை வெளியிட்டது. நாட்டில் பாகங்களைக் கொண்டு வாகனங்களை தயாரித்து தேசிய பெறுமதியை ஒன்று சேர்த்து வரி நிவாரணத்தை அதிகரிப்பதன் மூலம், இலங்கை அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன இறக்குமதியை வரையறுத்து, பாகங்களைக் கொண்டு வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து இந்நாட்டிலே இலாபகரமான முறையில் வாகனங்களை பொருத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச இத்தொழிற்சாலை பார்வையிட சென்றபோது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 
 நிலையான செயல் முறையினூடாக வாகனங்களை பொருத்துதல் மற்றும் வாகன உதிரி பாகங்களை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம், மற்றும் சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்தி, லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் எதிர்வரும் சில வருடங்களுக்குள் இலங்கையில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறையில் பட்டதாரிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கவும், ஆயிரக்கணக்கான வாகனங்களை நாட்டிலேயே பொருத்துதல் மற்றும் வாகன உதிரிப் பாகங்களையும் தயாரிக்கும் மேம்படுத்துவதே தனது எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச இங்கு தெரிவித்துள்ளார். 
 அதேபோல் தெற்காசிய பிராந்தியத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் வாகன ஏற்றுமதியை மேற்கொள்ளவும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பஸ், லொரி மட்டுமல்லாமல் குப்பை கொண்டு செல்லும் லொரி, நீர் பவுசர்கள், கொங்கிரீட் கலக்கும் லொரிகள் போன்ற விசேடமான வாகனங்களையும் இலங்கையில் சந்தைப்படுத்தும் தேவைப்பாடு உள்ளதாகவும் அமைச்சர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
27 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட Lanka Ashok Leyland 27 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட Lanka Ashok Leyland Reviewed by irumbuthirai on March 24, 2021 Rating: 5
Powered by Blogger.