நான்கு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை பெற்ற வருமானம்...
irumbuthirai
April 17, 2021
புத்தாண்டு காலப்பகுதியான கடந்த நான்கு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 13 கோடி 50 இலட்சத்திற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் ஐந்து இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்திருக்கின்றன. எதிர்வரும் சில தினங்களிலும்
அதிகளவான வருமானம் கிடைக்கும் என்றும் அதிவேக நெடுஞ்சாலை வழிநடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அதிகளவான வாகனங்கள் பயணித்திருக்கின்றன.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
நான்கு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை பெற்ற வருமானம்...
Reviewed by irumbuthirai
on
April 17, 2021
Rating: