பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கல்: ஆரம்பமானது கணக்கெடுப்பு!

October 30, 2021

அரச நிறுவனங்களில் பட்டதாரிகளுக்கு நிலவுகின்ற வெற்றிடங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
தற்போதைய நிலையில் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட
 
பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காகவே இந்த கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பயிலுனர்களாக இருக்கின்ற நிலைமையில் அதில் ஒரு பகுதியினர் பாடசாலைகளில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கல்: ஆரம்பமானது கணக்கெடுப்பு! பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கல்: ஆரம்பமானது கணக்கெடுப்பு! Reviewed by Irumbu Thirai News on October 30, 2021 Rating: 5

சகல பாடசாலைகளிலும் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

October 30, 2021

04 கட்டங்களாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நடைமுறையின் கீழ் தற்போது முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பாடசாலைகளில் ஏனைய வகுப்புகளையும் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கையில், 

ஏனைய வகுப்புக்களை அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
நேற்று (29) கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 
 
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

தற்போது மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெற்று வருவதோடு பாடசாலைகளை சுத்திகரிக்கும் பணிகளும் இடம்பெறுகின்றன. மேலும் கொரோனா பரவலும் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே சகல பாடசாலைகளிலும் ஏனைய வகுப்புக்களை அடுத்த வாரத்தின் பின்னர் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சகல பாடசாலைகளிலும் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு! சகல பாடசாலைகளிலும் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 30, 2021 Rating: 5

29-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 29-10-2021

October 30, 2021

29-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
Official Government Gazette released on 29-10-2021 
 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
29-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 29-10-2021 29-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 29-10-2021 Reviewed by Irumbu Thirai News on October 30, 2021 Rating: 5

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளைத் தெரிந்துகொள்ளும் முறைகள்!

October 29, 2021

2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான வெட்டுப்புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளன. 
 
அதன் அடிப்படையில் மாணவர்கள் தமது பெறுபேறுகளின் அடிப்படையில் உரிய கற்கை நெறிகளுக்கு தேவையான ஆகக்குறைந்த வெட்டுப்புள்ளிகளைப் பின்வரும் முறைகளில் அறிந்து கொள்ளலாம். 

UGC இணையத்தளத்தில் பார்வையிடல்: 
 
அரசாங்க தகவல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளல்: 
எந்த ஒரு தொலைபேசியிலிருந்தும் 1919 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 
 
SMS முறையில் பெறல்: 

ugc(space)Index Number -> send to 1919 Example: ugc 2223322 ->send to 1919 
 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (UGC) அழைப்பதன் மூலம்: 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 
0112695301, 0112695302, 0112692357, 0112675854
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளைத் தெரிந்துகொள்ளும் முறைகள்! பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளைத் தெரிந்துகொள்ளும் முறைகள்! Reviewed by Irumbu Thirai News on October 29, 2021 Rating: 5

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகின!

October 29, 2021

2020 உ.தர பெறுபேறுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 
 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பார்வையிடுக.
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகின! பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகின! Reviewed by Irumbu Thirai News on October 29, 2021 Rating: 5

Law College Entrance Exam Marks / சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை புள்ளிகள் -2021

October 27, 2021

இலங்கை சட்டக் கல்லூரி நுழைவு பரீட்சைக்கான புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. 2020ற்கான குறித்த பரிட்சை 2021 மார்ச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளிகளை ஒன்லைனில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
தெரிவுசெய்யப்பட்டோர் பெயர்ப் படடியலைக் கீழே காணலாம்.

Law College Entrance Exam Marks / சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை புள்ளிகள் -2021 Law College Entrance Exam Marks / சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை புள்ளிகள் -2021 Reviewed by Irumbu Thirai News on October 27, 2021 Rating: 5

ஓய்வுபெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள சேவையில் ஈடுபடுத்துதல்

October 27, 2021

ஓய்வுபெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் / முகாமைத்துவ சேவை அதி உயர் தர உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான அறிவித்தல் பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.

ஓய்வுபெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள சேவையில் ஈடுபடுத்துதல் ஓய்வுபெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள சேவையில் ஈடுபடுத்துதல் Reviewed by Irumbu Thirai News on October 27, 2021 Rating: 5

25-10-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

October 26, 2021
25-10-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
25-10-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 25-10-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on October 26, 2021 Rating: 5

கப்ராலின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி! இலங்கையின் 5வது முன்னுரிமை கொண்ட நபராக மாறினார்!

October 26, 2021

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அரசாங்கத்தின் புதிய முன்னுரிமையில் 5வது இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அமைச்சரவை அமைச்சரின் அந்தஸ்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
5வது இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், பீல்ட் மார்ஷல் போன்ற பதவிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கு சமமான அந்தஸ்து கப்ராலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 
 
ஆளுநர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதியினால் கோரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்குரிய இடம் வழங்கப்பட வேண்டும் என கப்ரால் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
இலங்கையில் தனி நபர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் முதலாம் இடத்தில் ஜனாதிபதியும் இரண்டாம் இடத்தில் பிரதமரும் மூன்றாம் இடத்தில் சபாநாயகரும் நான்காம் இடத்தில் பிரதம நீதியரசரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
இலங்கையில் ஒவ்வொரு பதவிகளுக்கும் வழங்குகின்ற முன்னுரிமை வரிசை பட்டியலையும் அது தொடர்பான ஏனைய விபரங்களையும் கீழே காணலாம்.




கப்ராலின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி! இலங்கையின் 5வது முன்னுரிமை கொண்ட நபராக மாறினார்! கப்ராலின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி! இலங்கையின் 5வது முன்னுரிமை கொண்ட நபராக மாறினார்! Reviewed by Irumbu Thirai News on October 26, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஆரம்பப் பிரிவுக்கு அறிமுகமான 20 வாரம் கொண்ட புதிய பாடத்திட்டம்! (முழு விபரம் இணைப்பு)

October 24, 2021

Recovery Plan for Learning loss Due to COVIC 19 Pandemic (Grade 1 to 5) 
 
கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாடசாலை மாணவர்கள் இழந்திருக்கின்ற பாடசாலை காலத்திற்கமைய கலைத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு பதிலீடான உத்தேச நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான ஆலோசனைகள். 
 
கொரோனா தொற்று நிலைமை காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் வருடங்களில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை ஆரம்பக்கல்வி பருவத்தில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கான கவனத்திற்கொள்ள வேண்டிய அளவில் கற்றலுக்கான காலம் இழக்கப்பட்டிருக்கின்றமை அவதானிக்கப்பட்டது. அவ்வாறு கற்றல் இழப்பு ஏற்பட்ட காலத்துடன் கல்வி ஆண்டின் இறுதியில் அடுத்த வகுப்பிற்கு கற்றலுக்காக பிரவேசிப்பதற்கான அத்தியாவசியமான கற்றல் உள்ளடக்கத்தை இனங் காணவும் வேண்டியுள்ளது. 
 
இதற்காக முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது முதன்மை நிலைகளுக்காக ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ள அத்தியாவசிய கற்றல் எண்ணக்கருவை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு வகுப்புகளிலும் இருக்கின்ற மாணவர்களுக்கு அடுத்த வகுப்பிற்கு செல்வதற்கான அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கத்தை உள்ளடக்கியதான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
"பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாகவும் பரீட்சை, பாடவிதானத்தை நிறைவு செய்தல், டிசம்பர் விடுமுறை போன்ற பல விடயங்கள் தொடர்பாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின் தமிழ் வடிவத்தைப் பார்வையிட..."
 
அந்தவகையில் 20 வாரம் கொண்ட கற்றல் கற்பித்தலுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2020 மற்றும் 2021 ல் இழந்த கற்றல் காலம் 2021 ல் எஞ்சியுள்ள கற்றல் காலம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் தேவைக்கேற்ப இந்த உள்ளடக்கங்களை பயன்படுத்தலாம். 
 
கீழே உள்ள லிங்குகளைக் கிளிக் செய்து உரிய பாட உள்ளடக்கங்களை பெற்றுக் கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஆரம்பப் பிரிவுக்கு அறிமுகமான 20 வாரம் கொண்ட புதிய பாடத்திட்டம்! (முழு விபரம் இணைப்பு) பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஆரம்பப் பிரிவுக்கு அறிமுகமான 20 வாரம் கொண்ட புதிய பாடத்திட்டம்! (முழு விபரம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on October 24, 2021 Rating: 5

மாணவர்கள் தடுப்பூசியை வைத்தியசாலைகளிலும் பெறலாம் - சுகாதார அமைச்சு

October 24, 2021

மாணவர்களுக்கான தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில் பாடசாலைகள் மூலம் தடுப்பூசி பெற முடியாத மாணவர்கள் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். 
 
இவ்வாறு பாடசாலைகள் மூலம் தடுப்பூசியை பெற முடியாத மாணவர்கள் சனி ஞாயிறு தினங்களில் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் தடுப்பூசியை வைத்தியசாலைகளிலும் பெறலாம் - சுகாதார அமைச்சு மாணவர்கள் தடுப்பூசியை வைத்தியசாலைகளிலும் பெறலாம் - சுகாதார அமைச்சு Reviewed by Irumbu Thirai News on October 24, 2021 Rating: 5

Vacancies (Japan International Cooperation Agency - JICA)

October 23, 2021

Vacancies (Japan International Cooperation Agency - JICA) 
 
Post: 
Administrative Officer. 
Consultant.
 


 Source: Sunday Observer.
Vacancies (Japan International Cooperation Agency - JICA) Vacancies (Japan International Cooperation Agency - JICA) Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் - கல்வியமைச்சர்

October 23, 2021

கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
திட்டமிட்டபடி 98% மான பாடசாலைகளை மீள திறக்க முடிந்தது. 26% ஆன ஆசிரியர்களும் 16% ஆன மாணவர்களும் பாடசாலைக்கு சமூகம் அளித்துள்ளனர். அடுத்த வாரம் ஆசிரியர் மாணவர் வருகை அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். 
 
மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது...
 
ஆசிரியர்கள் மொடியூலை நிறைவு செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது...
 
சில ஆசிரியர்கள் கையொப்பமிடாமலும் பணிக்கு திரும்பியுள்ளனர். துரிதமாக பாடசாலைகளைத் திறந்து நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவது முக்கியமாகும். எனவே இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் - கல்வியமைச்சர் கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் - கல்வியமைச்சர் Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5
Powered by Blogger.