Covid-19 Recovery New Syllabus for Gr: 6-11 / தரம்: 6-11 வரை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் (மூன்று மொழி மூலங்களிலும்)

November 13, 2021

கொரோனா விடுமுறை காரணமாக மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் 06-11 வரையான வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த புதிய பாடத்திட்டங்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழி மூலங்களில் தரப்பட்டுள்ளன.
 
விரும்பிய மொழி மூலத்தில் விரும்பிய பாடத்தை பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
தேசிய கல்வி நிறுவனத்தால் (NIE) ஆரம்ப பிரிவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட 20 வாரங்கள் கொண்ட புதிய பாடத்திட்டத்தை முழுமையாக பார்வையிட இங்கே கிளிக் செய்க.

Covid-19 Recovery New Syllabus for Gr: 6-11 / தரம்: 6-11 வரை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் (மூன்று மொழி மூலங்களிலும்) Covid-19 Recovery New Syllabus for Gr: 6-11 / தரம்: 6-11 வரை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் (மூன்று மொழி மூலங்களிலும்) Reviewed by Irumbu Thirai News on November 13, 2021 Rating: 5

Covid-19 Recovery New Syllabus for Gr: 10-11 / தரம்: 10-11 ற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம்

November 13, 2021

கொரோனா விடுமுறை காரணமாக மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் தரம் 10, 11 ற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
கீழே உள்ள லிங்குகளைக் கிளிக் செய்து உரிய பாடத்திட்டத்தை பார்வையிடலாம். பதிவிறக்கம் செய்யலாம். 

தரம்: 10 

 
இழந்த கல்வியை மீட்கும் நோக்கில் தேசிய கல்வி நிறுவகத்தால் (NIE) ஆரம்ப பிரிவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட 20 வாரங்கள் கொண்ட புதிய பாடத்திட்டத்தை முழுமையாகப் பார்வையிட இங்கே கிளிக் செய்க.

 
 
தரம்: 11

இழந்த கல்வியை மீட்கும் நோக்கில் தேசிய கல்வி நிறுவகத்தால் (NIE) தரம்: 6-11 வரை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தை 3 மொழி மூலங்களிலும் பார்வையிட இங்கே கிளிக் செய்க.
Covid-19 Recovery New Syllabus for Gr: 10-11 / தரம்: 10-11 ற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் Covid-19 Recovery New Syllabus for Gr: 10-11 / தரம்: 10-11 ற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் Reviewed by Irumbu Thirai News on November 13, 2021 Rating: 5

2022 வரவு செலவு திட்டம் (சுருக்கமாக ஒரே பார்வையில்...)

November 13, 2021

சுதந்திர இலங்கையின் 76வதும் தற்போதைய அரசாங்கத்தின் 2வதும் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் இடம்பெறும் முதலாவதுமான வரவு செலவுத் திட்டம் நேற்று(12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 
 
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை சமர்ப்பித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் வருகை தந்திருந்தார். 
 
இந்த வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய விடயங்களை சுருக்கமாக கீழே தருகிறோம். 

  • பாராளுமன்ற உறுப்பினருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான காலம் 10 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. 
  • அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பணவு மாதத்திற்கு 5 லீட்டர் குறைக்கப்படும். 
  • தற்போது காணப்படும் அலுவலக கட்டிடங்கள் தவிர, புதிய அலுவலக கட்டிடங்களை நிர்மாணிப்பது 02 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
  • அரச நிறுவனங்களில் தொலைபேசிச் செலவுகளை 25% குறைக்கப்படும்.
  • சூரிய மின்சக்தி தேவையை ஊக்குவிக்கும் வகையில், அரச நிறுவனங்களுக்கு  மின்சாரத்திற்காக ஒதுக்கப்படும் செலவீனங்கள் 10% குறைக்கப்படும்.
  • சமுர்த்தி வங்கிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, One-Stop-Shop ஆக மாற்றப்படும். 
  • அரச துறையில் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்த்தப்படும், எனினும் இது இளைஞர்கள் அரச துறையில் இணைவதை பாதிக்காது. 
  • உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில், அரச துறைக்கு புதிய சம்பளக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.
  • 2021 வரவு செலவுத் திட்டம் மூலம் முன்மொழியப்பட்டு இதுவரை அறவிடப்படாமல் இருந்த வர்த்தக வரி, 2022 ஜனவரி முதல் அறவிடப்படும். இது மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும். 
  • நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு Coverage-ஐ நிறுவுவதற்கான செயல்முறை விரைவுபடுத்தப்படும்.
 
  • நாட்டில் உள்ள 10,000 பாடசாலைகளுக்கு Fiber Optic அதிவேக இணையம் வழங்கப்படும்.
  • தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஒலி/ஒளிபரப்பு உரிமம் ஒதுக்கீடு திறந்த ஏல செயன்முறையின் மூலம் நடைபெறும். அலைவரிசைகள் பொதுச் சொத்தாகக் கருதப்படும். 
  • முச்சக்கர வண்டி மற்றும் Taxi சேவையானது தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் அதேவேளையில் , விரிவடைந்து வருகின்றது. இதனால், முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் அதிகார சபையொன்றை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • மூத்த குடிமக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஓய்வூதியம் பெறாதவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். 
  • விசேட தேவையுடையவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை இலங்கை அறிமுகப்படுத்தும். 
  • நாட்டில் மருந்துப் பொருட்களின் விலையை நிலையாகப் பேண விலை பொறிமுறை அறிமுகப்படுத்தப்படும். 
  • விவசாயத் துறையைப் பாதுகாக்கும் வகையில், பசுமை விவசாய மேம்பாட்டு சட்டமூலம் தயாரிக்கப்படும். 
  • ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத அரச ஊழியர்களின் வருடாந்த சம்பள அதிகரிப்பு தற்போதைய மதிப்பீட்டு அறிக்கையின்றி உரிய காலத்தில் வழங்கப்படும்.
 
  • இரத்தினக்கல் வர்த்தகத்திற்கான மையமாக இலங்கை மாற்றப்படும். 
  • சேதன பசளை விவசாயத்தை மேம்படுத்தப்படும்.
  • புதிய ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிலையங்களை நிறுவ திட்டம். 
  • அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளை களைந்து அடுத்த நிதியாண்டிலிருந்து புதிய சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
  • சமுர்த்தி இயக்கத்தை நவீனமயப்படுத்தி, கிராமிய அபிவிருத்தி அமைப்பாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
  • ஏற்றுமதியாளர்களை தரம் பிரித்து உயர்மட்ட ஏற்றுமதியாளர்களுக்கு இலவச சுங்க வசதிகளை வழங்க முன்மொழிவு.
  • பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் திரவ பால் பாவனையை அதிகரிப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக மேலும் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கம்.
  • கிராமத்துடன் கலந்துரையாடல் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கும் தலா 3 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 
  • வரி நிர்வாகத்திற்கான தொழில்நுட்ப நடைமுறைகளைப் பயன்படுத்த சட்டங்கள் திருத்தப்படும். 
  • அனைத்து திட்டங்களும் மையப்படுத்தப்பட்ட செயல்முறையுடன் கண்காணிக்கப்படும்.
 
  • இலங்கை ரயில்வேக்கு சொந்தமான, குறைவான பாவனையுடைய நிலங்கள் பொது-தனியார் பங்காளிகளாக கலப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். 
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் சர்வதேச தரத்தில் பாடசாலை மற்றும் மருத்துவமனை கட்டப்படும். வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நிலம் மற்றும் வரிச்சலுகை வழங்கப்படும்.. 
  • நுண் மற்றும் சிறு வணிகங்களுக்கு நிவாரணம் தேவை, அதன் மேம்பாட்டிற்கு மேலும் 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 
  • நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளர் தொகுதிக்கும் 4 பில்லியன் ஒதுக்கப்படும்.
  • மூத்த குடிமக்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுக்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • சிறை கைதிகளுக்கான சுகாதார வசதிகள் (சிறைகளில் அதிகரித்து வரும் எண்ணிக்கை காரணமாக) மேலும் 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • பொது பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ் துறைக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • நீதித்துறை செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்களைத் தடுத்து, திறமையின்மைகளைத் தவிர்ப்பதுடன், நீதித்துறை செயன்முறையை டிஜிட்டல் மயமாக்க மேலும் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • ரயில்வே பயணிகள் போக்குவரத்திற்காக மேலும் 2000 மில்லியன் ஒதுக்கீடு. 
  • தொழில் பயிற்சிக்கு 2000 மில்லியன் ஒதுக்கீடு. 
  • நீர்ப்பாசன மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு மேலும் 2000 மில்லியன் ஒதுக்கீடு. 
  • விளையாட்டு மேம்பாட்டுக்காக 3000 மில்லியன் ஒதுக்கீடு.
 
  • சுகாதாரத்திற்கு மேலும் 5000 மில்லியன் ஒதுக்கீடு. 
  • கிராமப்புற பாடசாலை மேம்பாட்டிற்காக 5300 மில்லியன் ஒதுக்கீடு. 
  • வனப் பாதுகாப்பிற்கு ரூ. 2000 மில்லியன் கூடுதலாக ஒதுக்கீடு. 
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு. 
  • ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் பெண் தொழில் முனைவோருக்கான வீட்டுக் கடை கருத்திட்டத்திற்கு 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • வறுமையில் வாடும் குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிக்கு 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • கர்ப்பிணிப் பெண்களுக்கான போசாக்கு பொதி 24 மாதங்களுக்கு வழங்கப்படும். இதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • வீட்டு அடிப்படையிலான பொருளாதாரம் மற்றும் நலனிற்கு 31,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • தொழில்முறை சங்கங்களுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு வழங்க 300 மில்லியன் ரூபா கூடுதலாக ஒதுக்கீடு. 
  • கிராமப்புறங்களில் உள்ள புத்த விகாரைகளின் அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • ஓய்வூதிய முரண்பாட்டிற்கு முதல் கட்டமாக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • அரசியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 100 மில்லியன் ரூபா கூடுதலாக ஒதுக்கீடு. 
  • அரச துறையில் பட்டதாரி ஆட்சேர்ப்பு: ஏற்கனவே பணியமர்த்தப்பட்டவர்களுக்கு 2022 இல் நிரந்தர வேலைவாய்ப்பு.
 
  • ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு: ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்திற்காக 30,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. இது தற்போதுள்ள ஒதுக்கீட்டிற்கு மேலதிகமானது. 
  • பொது சேவை டிஜிட்டல் மயமாக்கலுக்கு 500 மில்லியன் ரூபா கூடுதலாக ஒதுக்கீடு. 
  • மோட்டார் வாகன விபத்துகளைக் குறைப்பதை ஊக்குவிக்கும் வகையில், மோட்டார் வாகன விபத்தை ஏற்படுத்திய நபரிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதற்கும், அதை காப்பீடு மூலம் திருப்பிச் செலுத்துவதற்கும் வாய்ப்பு. 
  • அபராதம் மற்றும் வரிகளை செலுத்திய பின்னரே சுங்க வரிக்கு உட்பட்ட அனைத்து வாகனங்களும் விடுவிக்கப்படும். (700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இன்னும் சுங்கத்தில் உள்ளன). 
  • வாகன மேம்படுத்தல்கள் மற்றும் மாற்றங்கள்: அரசில் பதிவு செய்யப்பட வேண்டும். 
  • கலால் வரி அதிகரிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்படும். இதன் மூலம் அரசுக்கு 25 பில்லியன் ரூபா கிடைக்கும்.
  • சிகரெட் வரி: ஒரு சிகரெட் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும். 
  • சமூக நல நிதி: ஏப்ரல் 1, 2022 முதல் 120 மில்லியன் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஆண்டுக்கு 2.5%.1 ஜனவரி 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை மாதத்திற்கு 15% இல் இருந்து 18% வரை VAT வரி அதிகரிக்கப்படும். வங்கி அல்லது நிதி நிறுவன வாடிக்கையாளர்களிடமிருந்து இந்த வரியை வசூலிக்க முடியாது. இதன் மூலம் அரசுக்கு 14 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும். 
  • 2000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருவாய் ஈட்டும் வணிகங்களுக்கு 25% வரி கூடுதல் கட்டணம். அவ்வாறான 62 வணிகங்கள் உள்ளன. இந்த வரி மூலம் 100 மில்லியன் ரூபா வருமானம் ஈட்ட எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இலங்கை மத்திய வங்கியின் நடத்தை விதிகளை மீறி பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சம்பாதித்த பணத்தில் 8.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு மாற்றுவதற்கு முன்மொழியப்படுகிறது. 
  • வருவாய் ஈட்டும் பொருட்டு 5G அலைவரிசைகள் ஏலத்தில் விடப்படும். 
  • சமுர்த்தி திட்டம் கிராமிய அபிவிருத்தித் திட்டமாக மாற்றப்படவுள்ளதுடன், பயனாளிகள் தொடர்பில் விஞ்ஞான மீளாய்வு மேற்கொள்ளப்படும். 
  • இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஆயுள் மற்றும் சொத்துக்களுக்கான காப்புறுதியை ஒன்றிணைத்து மேற்கொள்வதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
 
  • எந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் கிடைக்காத சிரேஷ்ட பிரஜைகளுக்காக பங்களிப்பு ஓய்வுத் திட்டம் 
  • 2022 ஆம் ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்படும் வியாபாரங்களுக்கு பதிவுக்கட்டணம் அவசியம் இல்லை. 
  • பயிரிடப்படாத நிலங்களை பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்குவற்கும் அரச காணிகளை கையாள்வது தொடர்பில் புதிய சட்டங்களை கொண்டுவரவும் முன்மொழியப்பட்டுள்ளது 
  • வௌிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க தற்போதுள்ள சட்டங்களில் தளர்வுகளை மேற்கொள்ள தீர்மானம் 
  • ரயில்வே திணைக்களத்திற்கு உரித்தான காணிகளை கலப்பு அபிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த தீர்மானம் 
  • அனைத்து நிர்மாணப் பணிகளுக்கும் கட்டாயம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்  
  • மாற்று கிருமிநாசினிகளை பயன்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் 
  • திரவ உரம் மற்றும் புதிய விவசாய தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதி விவசாயத்தை முன்னேற்றுவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது 
  • பெருந்தோட்டங்களில் காணப்படும் தொடர் குடியிருப்புகளை மூன்று வருடங்களில் நீக்கி புதிய குடியிருப்புகளை அமைப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது 
  • COVID வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது 
  • COVID நிலைமையினால் தொழிலை இழந்த வேன் சாரதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 400 மில்லியன் ரூபாவும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்காக 700 மில்லியன் ரூபாவும் தனியார் பஸ் ஊழியர்களுக்காக 1500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது 
  • 1000 தேசிய பாடசாலை அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் பெண் வியாபாரிகளை ஊக்குவிக்க, HOME Shop என்ற பெயரில் சிறிய வர்த்தக நிலையத்தை ஆரம்பிப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
  • அரச உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின்படி எதிர்பார்க்கப்படும் வருமானம் 2,284 பில்லியன் ரூபா. எதிர்பார்க்கப்படும் செலவு 3912 பில்லியன் ரூபா. துண்டு விழும் தொகை 1628 பில்லியன் ரூபா. எனினும், அடுத்த வருடம் அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் உள்ளிட்ட கொடுப்பனவுகளின் மொத்த பெறுமதி 5245 பில்லியன் ரூபாவாகும். அரச கணக்குகளின் படி, அடுத்த வருடத்திற்குள் அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் 3200 பில்லியன் ரூபாவாகும்.
2022 வரவு செலவு திட்டம் (சுருக்கமாக ஒரே பார்வையில்...) 2022 வரவு செலவு திட்டம் (சுருக்கமாக ஒரே பார்வையில்...) Reviewed by Irumbu Thirai News on November 13, 2021 Rating: 5

ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த ஆசிரியை: அஞ்சலி செலுத்தும் பாடசாலைகள்!

November 11, 2021

நேற்று முன்தினம்(9) தேசிய எதிர்ப்பு தினமாக கருதப்பட்டு நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. 
 
இதில் அதிபர்கள் ஆசிரியர்களும் தமது சம்பள முரண்பாடுகளை தீர்க்கக் கோரி நாடளாவிய ரீதியில் உள்ள சகல வலயக்கல்வி காரியங்களுக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 
 
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெனியாய மத்திய கல்லூரியின் ஆரம்பப்பிரிவு ஆசிரியை வருணி அசங்கா திடீரென 

மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர். 
 
எனவே தனது நோய் நிலைமையையும் கருத்திற் கொள்ளாது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உயிரிழந்த அந்த ஆசிரியைக்கு நாளைய தினம் அஞ்சலி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. 
 
அந்த வகையில் நாளைய தினம் வட மாகாண பாடசாலைகளில் 5 நிமிடம் மௌன அஞ்சலி இவருக்காக செலுத்தப்படும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த ஆசிரியை: அஞ்சலி செலுத்தும் பாடசாலைகள்! ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த ஆசிரியை: அஞ்சலி செலுத்தும் பாடசாலைகள்! Reviewed by Irumbu Thirai News on November 11, 2021 Rating: 5

அதிபருக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று: மூடப்பட்டது பாடசாலை!

November 11, 2021

கொஸ்லந்தை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபருக்கு உறுதியானதைத் தொடர்ந்து அந்தப் பாடசாலை எதிர்வரும் 
 
திங்கள் வரை மூடப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஜீவன பிரசன்ன தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை ஏற்கனவே அந்தப் பாடசாலையின் மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்றைய தினம் மாணவர்கள் எவரும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதிபருக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று: மூடப்பட்டது பாடசாலை! அதிபருக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று: மூடப்பட்டது பாடசாலை! Reviewed by Irumbu Thirai News on November 11, 2021 Rating: 5

அதிபர் ஆசிரியர்களின் எதிர்ப்பால் அசைந்தது மாவனல்லை போலீஸ்: உப தவிசாளர் உட்பட மூவர் கைது!

November 10, 2021

மாவனல்லை மேதேரிகம பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் மாவனல்லை பிரதேச சபை உப தவிசாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
 
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 
 
பிரதேசசபை உறுப்பினர்கள் ஆவர். 
 
குறித்த நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நேற்றைய தினம் பல்லாயிரக்கணக்கான அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அணிதிரண்டு மாவனல்லை போலீஸ் நிலையம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 
 
இதேவேளை நேற்றைய தினம் தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனம் செய்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிபர் ஆசிரியர்களின் எதிர்ப்பால் அசைந்தது மாவனல்லை போலீஸ்: உப தவிசாளர் உட்பட மூவர் கைது! அதிபர் ஆசிரியர்களின் எதிர்ப்பால் அசைந்தது மாவனல்லை போலீஸ்: உப தவிசாளர் உட்பட மூவர் கைது! Reviewed by Irumbu Thirai News on November 10, 2021 Rating: 5

மறு அறிவித்தல் வரை ஓய்வூதியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி திட்டம் ரத்து! வெளியானது சுற்றறிக்கை! ((புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு))

November 09, 2021

மறு அறிவித்தல் வரை ஓய்வூதியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட அக்ரஹாரா காப்புறுதி நலன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசசேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
இது தொடர்பில் 09-11-2021 திகதியிடப்பட்ட 12/2005(1X) இலக்கம் கொண்ட சுற்றறிக்கை குறித்த அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுவதாவது, 

ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ் உள்ள நலன்களை தொடர்ந்தும் விரிவுபடுத்தல் தொடர்பாக 2021-10-29 திகதியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை 12/2005(VIII) மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. 
 
01-01-2016 ற்கு முன்னர் ஓய்வு பெற்ற அதேபோன்று 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு விசேட சலுகை வழங்கும் நோக்கிலேயே சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது இது தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு எதிர்ப்புகளை கவனத்திற்கொண்டு உரிய சகல தரப்பினருடனும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் வரை சுற்றறிக்கையில் கூறப்பட்ட விடயங்களை செயல்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது என புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
2021-10-29 திகதியிடப்பட்ட 12/2005(VIII) இலக்கம் கொண்ட அரச நிர்வாக சுற்றறிக்கையைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
குறித்த சுற்றறிக்கையின் படி 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களிடமிருந்து மாதாந்தம் 600 ரூபாவும் 70 வயதுக்கு கீழ்ப்பட்ட ஓய்வூதியதாரர்களிடமிருந்து மாதாந்தம் 400 ரூபாவும் அறவிட தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 
 
இதுதொடர்பான 09-11-2021 திகதியிடப்பட்ட 12/2005(1X) இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை கீழே காணலாம்.

மறு அறிவித்தல் வரை ஓய்வூதியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி திட்டம் ரத்து! வெளியானது சுற்றறிக்கை! ((புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு)) மறு அறிவித்தல் வரை ஓய்வூதியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி திட்டம் ரத்து! வெளியானது சுற்றறிக்கை! ((புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு)) Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

November 09, 2021

சீரற்ற காலநிலை காரணமாக வடமாகாணத்திலுள்ள மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை(10) விடுமுறை வழங்கப்பட உள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் L. இளங்கோவன் தெரிவித்துள்ளார். 
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கே இவ்வாறு நாளைய தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட 

செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு ஆளுநர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். இதேவேளை இன்றைய தினமும் யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகள் மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சில பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

Certificate in Teaching in Higher Studies (University of Sri Jayawardenapura)

November 09, 2021

Certificate in Teaching in Higher Studies (University of Sri Jayawardenapura) 
 
Duration: 06 Months. 
 
Medium: English. 
 
Course fees: 40,000/- 
 
Closing date: 30-11-2021. 

 Source: Sunday Observer.
Certificate in Teaching in Higher Studies (University of Sri Jayawardenapura) Certificate in Teaching in Higher Studies (University of Sri Jayawardenapura) Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

Diploma In Counselling - 2022 (University of Sri Jayawardenapura)

November 09, 2021

Diploma In Counselling - 2022 (University of Sri Jayawardenapura) 
 
Age limit: 22-50. 
 
Duration: 01 year (Every Sunday) 
 
Medium: English. 
 
Course fees: 100,000/- 
 
Selection: By an interview. 
 
Closing date: 31-12-2021.
Source: Sunday Observer.

 
Diploma In Counselling - 2022 (University of Sri Jayawardenapura) Diploma In Counselling - 2022 (University of Sri Jayawardenapura) Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

MSc in Structural Engineering -2022/2023 (Open University of Sri Lanka)

November 09, 2021

MSc in Structural Engineering (Open University of Sri Lanka) 
 
Course fees: 400,000/- 
 
Application fees: 800/- 
 
Closing date: 30-11-2021.

 Source: Sunday Observer.
 
MSc in Structural Engineering -2022/2023 (Open University of Sri Lanka) MSc in Structural Engineering -2022/2023 (Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

MSc in Environmental Science (Open University of Sri Lanka)

November 09, 2021

MSc in Environmental Science (Open University of Sri Lanka) 
 
Course fees: 207,000/- 
 
Duration: 02 years. 
 
Closing date: 30-11-2021.

 
MSc in Environmental Science (Open University of Sri Lanka) MSc in Environmental Science (Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி!

November 09, 2021

இவ்வருடம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பிக்கும் காலப்பகுதி நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் அது மீண்டும் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
அந்தவகையில் விண்ணப்ப திகதி 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த வருடம் பல்கலைக்கழக அனுமதியை இழந்த உயர்தர மாணவர்களால் 

முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5
Powered by Blogger.