இரண்டு வான்கோழிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி!
Irumbu Thirai News
November 21, 2021
அரசியல், சமூக, கலாசார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐக்கிய அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் (Thanks Giving) நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நன்றி தெரிவிக்கும் நாளன்று அமெரிக்கர்கள் வான்கோழி இறைச்சியை
உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால் இந்த நன்றி தெரிவிக்கும் நாளுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதியால் 02 வான்கோழிகளுக்கு மட்டும் பொது மன்னிப்பு வழங்கப்படுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்படும் 02 வான்கோழிகளும் நாட்டிலுள்ள விலங்கு காப்பகங்களுக்கு பரிசாக வழங்கப்படும்.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான நன்றி தெரிவிக்கும் நாளை முன்னிட்டு இரண்டு வான்கோழிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். குறித்த நிகழ்வு வெள்ளை மாளிகையில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு வான்கோழிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி!
Reviewed by Irumbu Thirai News
on
November 21, 2021
Rating: