தென் மாகாண பாடசாலைகள் ஐந்து நாட்களும் நடைபெறும்!

July 23, 2022


 
தென் மாகாண பாடசாலைகள் ஜூலை 25 முதல் 29 வரையான 5 நாட்களும் நடைபெறும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியான அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய(22) தினம் இது தொடர்பில் ஆளுநரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதம செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதே வேளை தற்போதைய போக்குவரத்து நெருக்கடி காரணமாக பாடசாலைக்கு வருவதில் சிக்கல்களை எதிர்கொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. 

இவ்வாறு பாடசாலைக்கு வர முடியாத தினங்கள் தொடர்பில் அதிபர்கள் வலய கல்விப் பணிப்பாளரிடம் அல்லது உதவி / மேலதிக கல்வி பணிப்பாளரிடம் அனுமதி பெறுவதோடு ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அதிபரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். 

அவ்வாறு அனுமதி பெறப்பட்ட தினங்களில் வராத பட்சத்தில் விசேட விடுமுறையாக கணிக்கப்படுவதோடு அவர்களின் தனிப்பட்ட விடுமுறையில் பதியப்பட மாட்டாது. 

நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் மாகாணத்தின் கல்வி தொடர்பாக காட்டும் அர்ப்பணிப்பை வரவேற்பதோடு எதிர்காலத்திலும் தென் மாகாண மாணவ, மாணவிகளின் கல்வியை மேம்படுத்துவதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தென் மாகாண பாடசாலைகள் ஐந்து நாட்களும் நடைபெறும்! தென் மாகாண பாடசாலைகள் ஐந்து நாட்களும் நடைபெறும்! Reviewed by Irumbu Thirai News on July 23, 2022 Rating: 5

Cut off Marks & Selected Name List: LLB Degree (Open University of Sri Lanka) - 2022/22

July 22, 2022

LLB Degree Programme of the Open University of Sri Lanka - 2022/ 2023. 

Selected name list of the selection test for the LLB degree programme. 

788 candidates selected 

Cut off marks - 180. 
 
How to check LLB entrance exam marks? Click Here
 

Selected name list as follows.
 

Cut off Marks & Selected Name List: LLB Degree (Open University of Sri Lanka) - 2022/22 Cut off Marks & Selected Name List: LLB Degree (Open University of Sri Lanka) - 2022/22 Reviewed by Irumbu Thirai News on July 22, 2022 Rating: 5

Annual Convocation - 2022 (SLIATE - Sri Lanka Institute of Advanced Technological Education)

July 21, 2022


 
The 17th Annual Convocation of SLIATE (Sri Lanka Institute of Advanced Technological Education) will be held on 12th, 13th and 14th of August 2022. 
 
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (SLIATE) 17வது வருடாந்த பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Click the link below for official announcement: 



Related:
 

 
 
Annual Convocation - 2022 (SLIATE - Sri Lanka Institute of Advanced Technological Education) Annual Convocation - 2022 (SLIATE - Sri Lanka Institute of Advanced Technological Education) Reviewed by Irumbu Thirai News on July 21, 2022 Rating: 5

22-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-07-2022

July 21, 2022

22-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
இதில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பம், இலங்கை கல்வி நிர்வாக  சேவையின் இணைப்பு மொழி (ஆங்கிலம்) பரீட்சைக்கான விண்ணப்பம் என்பன கோரப்பட்டுள்ளன.
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
22-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-07-2022 22-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-07-2022 Reviewed by Irumbu Thirai News on July 21, 2022 Rating: 5

15-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 15-07-2022

July 21, 2022

15-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (21-07-2022: 10:45 PM) எந்தவொரு மொழியிலும் வர்த்தமானி வெளியாகவில்லை. ஆனால் தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்பவற்றுக்கான லிங்குகளை தனித்தனியாக தருகிறோம். அரச அச்சக திணைக்களத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டதும் இந்த லிங்குகளில் சென்று பார்வையிடலாம். எனவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
 
15-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 15-07-2022 15-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 15-07-2022 Reviewed by Irumbu Thirai News on July 21, 2022 Rating: 5

CEYPETCO 92 Octane Petrol Distribution Places 21-25 July 2022.

July 21, 2022

 


 

CEYPETCO Fuel (92 Octane Petrol) Distribution Places 21-25 July 2022. 

 

Click the link below for Western province list: 

Western Province List 

 

Click the link below for Kandy District list: 

Kandy District List 

 

Click the link below for Southern Province list:

Southern Province List



எரிபொருள் வழங்கப்படும் போது பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படும். 


(1) வாகனத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் இந்த எரிபொருள் விநியோகம் இடம்பெறும். 

0,1,2 - செவ்வாய் மற்றும் சனி. 

3,4,5 - வியாழன் மற்றும் ஞாயிறு. 

6,7,8,9 - திங்கள், புதன் மற்றும் வெள்ளி 

ஆகிய தினங்களில் வழங்கப்படும். 

 

(2) வரையறுக்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும். 

மோட்டார் சைக்கிள் - ரூ. 1,500/- 

முற்சக்கரவண்டி - ரூ. 2,000/- 

ஏனைய வாகனங்கள் - ரூ. 7,000/- 

இந்த நடைமுறையை பின்பற்றாத நபர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என்பதுடன் விதிமுறைகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related:

Fuel Pass Introducing Places on 21-07-2022 / எரிபொருள் அனுமதி அட்டை அறிமுகமாகும் இடங்கள் 21-07-2022 


CEYPETCO 92 Octane Petrol Distribution Places 21-25 July 2022. CEYPETCO 92 Octane Petrol Distribution Places 21-25 July 2022. Reviewed by Irumbu Thirai News on July 21, 2022 Rating: 5

இன்று முதல் நாடளாவிய ரீதியில் CEYPETCO நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் முறை...

July 21, 2022


நீண்ட நாட்களுக்கு பிறகு நாடளாவிய ரீதியில் உள்ள CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று(21) முதல் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகிறது. 

இவ்வாறு எரிபொருள் வழங்கப்படும் போது பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படும்.

(1) வாகனத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் இந்த எரிபொருள் விநியோகம் இடம்பெறும். 

0,1,2 - செவ்வாய் மற்றும் சனி. 

3,4,5 - வியாழன் மற்றும் ஞாயிறு. 

6,7,8,9 - திங்கள், புதன் மற்றும் வெள்ளி 

ஆகிய தினங்களில் வழங்கப்படும். 

(2) வரையறுக்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும். 

மோட்டார் சைக்கிள் - ரூ. 1,500/-

முற்சக்கரவண்டி - ரூ. 2,000/-

ஏனைய வாகனங்கள் - ரூ. 7,000/-  

இந்த நடைமுறையை பின்பற்றாத நபர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என்பதுடன் விதிமுறைகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போதைய தகவல்களின்படி, இந்த நடைமுறை எதிர்வரும் 24 ஆம் தேதி வரை இடம்பெறும். 25 ஆம் தேதி முதல் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (National Fuel Pass) அடிப்படையில் நாடளாவிய ரீதியில் விநியோகம் இடம்பெறும்.

Fuel Pass இன் பரீட்சார்த்த நடவடிக்கை இன்று கொழும்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related:


இன்று முதல் நாடளாவிய ரீதியில் CEYPETCO நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் முறை... இன்று முதல் நாடளாவிய ரீதியில்  CEYPETCO நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் முறை... Reviewed by Irumbu Thirai News on July 21, 2022 Rating: 5

Fuel Pass Introducing Places on 21-07-2022 / எரிபொருள் அனுமதி அட்டை அறிமுகமாகும் இடங்கள் 21-07-2022

July 21, 2022

 


 

Recommended filling stations (Colombo district) for Introduction & testing of National Fuel Pass on 21-07-2022.

However this system will be implemented island wide from 25-07-2022.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (National Fuel Pass) அடிப்படையில் எரிபொருளை விநியோகம் செய்யும் பரீட்சார்த்த நிகழ்வு இன்று(21) கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஆரம்பமாகிறது.

எவ்வாறாயினும் எதிர்வரும் 25 ஆம் திகதி  முதல் இந்த நடைமுறை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Fuel Pass Introducing Places on 21-07-2022 / எரிபொருள் அனுமதி அட்டை அறிமுகமாகும் இடங்கள் 21-07-2022 Fuel Pass Introducing Places on 21-07-2022 / எரிபொருள் அனுமதி அட்டை அறிமுகமாகும் இடங்கள் 21-07-2022 Reviewed by Irumbu Thirai News on July 21, 2022 Rating: 5

How To Check LLB Entrance Exam Marks?

July 21, 2022

Selection Test for the LLB Degree Programme of the Open University of Sri Lanka - 2021 (2022) 

The selected applicants of the LLB 2021/2022 programme have been informed through email and sms stating further information. 

The registration of new students would be conducted at all Regional Centres of the OUSL on 27th, 28th July and 5th Aug 2022. 

Click the link below to see the marks.



Related



How To Check LLB Entrance Exam Marks? How To Check LLB Entrance Exam Marks? Reviewed by Irumbu Thirai News on July 21, 2022 Rating: 5

கடந்து வந்த பாதையும் கடக்கவுள்ள பாதையும்...

July 20, 2022

1993 ஆர். பிரேமதாச குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட பின்னர் டீ. பி விஜேதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட அப்போதைய சபை முதல்வராக இருந்த ரனில் பிரதமராக நியமிக்கப்படுகிறார். 

அதன் பின் கட்சியிலிருந்து பிரிந்து சென்றிருந்த காமினி திஸாநாயக்க போன்றவர்களும் கட்சியில் இணைய கட்சி பலம் பெற்ற போதிலும் சந்திரிக்கா அலையில் அள்ளுண்டு போனது. 

1994 ல் நடந்த பொதுத் தேர்தலில் PA 105, UNP 94 என ஆசனங்கள் பகிரப்பட்டன. கடைசியில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட காமினியிடம் பறிகொடுத்து விட்டு நின்றார் ரனில். 105 ஆசனங்களை வென்ற சந்திரிக்கா SLMC இன் 7, சந்திரசேகரினின் 1 ஆசனம் கொண்டு ஆட்சியமைத்தார். 

மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக காமினியிடம் தோற்ற ரனில் காமினி தேர்தல் பிரசாரத்தில் கொல்லப்பட பதில் வேட்பாளராக முன்வரும் வாய்ப்பு இருந்தும் கொல்லப்பட்ட காமினியின் மனைவிக்கு கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். 

பின்னர் 1999 ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டியுடன் தோல்வி. 

2000 பொதுதேர்தலில் PA 107, UNP 89 என்று தோல்வி. 

அதன் பின்னர் UPFA இல் பாங்களிக் கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆட்சி கவிழ 2001 தேர்தல். அங்கே UNP 109, PA 77, என ஆசனங்களை வென்றது. SLMC 5 ஆசனங்களையும் கொண்டு போதுமான பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார் ரனில். 

ஆனால் அவரால் ஆட்சிக் காலத்தை பூரணப்படுத்த முடியவில்லை. 2004 பாராளுமன்றம் ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல். அங்கே UPFA 105, UNP 82 பெற்றது. 

2005 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுடன் போட்டியிட்டு தோல்வி. 

2009 ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தி. அதிலும் தோல்வி. 

2010 பொதுதேர்தலில் UPFA 144, UNP 60. 

அதன் பின்னர் 2015 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மைத்ரியை களமிறக்கி வெற்றி பெற்று 42 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு பிரதமரானார் ரனில். 

தொடர்ந்து 2015 பொதுத்தேர்தலில் UNP 106, UPFA 95 பெற்றுக் கொண்டு ஆட்சியமைக்கிறார். 

2018 அக்டோபர் மாதம் ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையே உருவான கருத்து முரண்பாட்டினால் அவரை பதவி நீக்கம் செய்து மஹிந்த பிரதமராக்கப்பட நீதிமன்றம் சென்று மீண்டும் பிரதமரானார். 

அதனைத் தொடர்ந்து 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் ஐ போட்டியிட சொல்லி ஒதுங்கி விட்டு அதில் சஜித் தோற்ற போது பிரதமர் பதவியை இழந்தார். 

பின்னர் 2020 பொதுத்தேர்தல் நடந்தது. அதில் SLPP 145 + (SLFP 1, EPDP 2, NC 1, TMVP) 1 UNP 1 என்ன ஆசனங்களை பகிர்ந்து கொள்ள தேசியப் பட்டியல் மூலம் கிடைத்த ஒற்றை ஆசனத்தை வைத்துக் கொண்டு பாராளுமன்றம் வருகிறார் ரனில். அதுவும் 10 மாத இழுபறிக்குப் பின்னர். 

1994 ல் 94, 2000 ல் 89, 2001 ல் 109, 2004 ல் 82, 2010 ல் 60, 2015 ல் 106 உறுப்பினர்களை கொண்டு செய்ய முடியாததை, ஒரே ஒரு உறுப்பினரை வைத்து சாதித்துள்ளார் ரனில். இதனை திறமை என்பதா? குருட்டு அதிஷ்டம் என்பதா? தந்திரம் என்பதா? விதி என்பதா? 

எது எவ்வாறாக இருப்பினும் நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. மக்கள் பல சிக்கல்களுக்குள் மாட்டி இருக்கிறார்கள். எரிபொருள் தட்டுப்பாடு, கேஸ் தட்டுப்பாடு, மருந்துத் தட்டுப்பாடு, உணவுப் பொருள் விலையேற்றம் என மக்கள் பிரச்சினைகள் ஒரு புறம். 

ஏற்றுமதி வீழ்ச்சி, சுற்றுலா பிரயாணிகள் வருகை வீழ்ச்சி, வெளிநாட்டு ஊழியர்கள் சட்ட ரீதியாக வங்கி மூலம் பணம் அனுப்பாமை போன்ற பல சவால்கள் ஒருபுறம். 

ரனில் கடந்து வந்த பாதை ஒன்றும் பூப்பாதை அல்ல. கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதை. கடக்க இருப்பதும் கரடு முரடான பாதை. 

1974 ல் செயற்பாட்டு அரசியலுக்கு வந்து, 1977ல் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, கல்வி, தொழில் நுட்பம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட மிகப் பெரிய அமைச்சுக்களை வகித்து, பாராளுமன்றத்தில் சபை முதல்வராக இருந்து, 6 முறை பிரதமராக பதவி வகித்து, எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து, எதிர்க்கட்சியின் ஒரு எம்பியாகவும் செயற்பட்டு அனுபவம் இருக்கும், நிறைய வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதாக சொல்லும் ரனில் மூலம் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா? பார்க்கலாம் அனுபவமும், திறமையும் அவருக்கு கை கொடுக்கிறதா? கைவிடுகிறதா என்று. 

புதிய ஜனாதிபதி அதிமேதகு இல்லை இல்லை... மன்னிக்கவும் அவர் அப்படி சொல்ல வேண்டாம் என்று சொல்லியுள்ளார். எனவே கெளரவ ரனில் விக்ரமசிங்ஹ அவர்களுக்கு இரும்புத்திரை நியூஸ் இணைய தளத்தின் வாழ்த்துக்கள். 

எது எவ்வாறாயினும் மக்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

- Fayas M. A. Fareed.



Related:


கடந்து வந்த பாதையும் கடக்கவுள்ள பாதையும்... கடந்து வந்த பாதையும் கடக்கவுள்ள பாதையும்... Reviewed by Irumbu Thirai News on July 20, 2022 Rating: 5

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவான ஜனாதிபதி

July 20, 2022

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் தற்போதைய பதில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க.

தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும் டளஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுரகுமார திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றனர்.

இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போது இந்த வாக்கெடுப்பு ஆரம்பமானது. 

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன் காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் ஆயுதமேந்திய பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகப்பெரும அனுரகுமார திசநாயக்க ஆகியோர் இதில் போட்டியிட்டனர். SJB தனது ஆதரவை டளசுக்கு வழங்கியதோடு பிரதமர் பதவியை சஜித் பெறுவதற்கான உடன்பாடும் எட்டப்பட்டிருந்தது. இதனால் சஜித் போட்டியில் இருந்து விலகினார். 

இன்றைய வாக்களிப்பில் சபாநாயகரும் கலந்து கொண்டதோடு பாராளுமன்ற செயலாளர் அவர்கள் தேர்தலை நடத்தும் தெரிவித்தாட்சி அலுவலராக கடமையாற்றினார். 

இதே வேளை இன்றைய வாக்கெடுப்பில் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஜி ஜி பொன்னம்பலம் ஆகியோர் வாக்களிக்காமல் தவிர்ந்து கொண்டனர். மேலும் 04 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எனவே 219 வாக்குகளே செல்லுபடியான வாக்குகள் ஆகும். 

பாராளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் தனது சுகவீனத்துக்கு மத்தியிலும் சேலைன் ஏற்றப்பட்ட நிலையில் வந்து வாக்களித்தமே குறிப்பிடத்தக்கது. 

1993 ரணசிங்க பிரேமதாசாவின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டி பி விஜயதுங்க இவ்வாறு பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அவர் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டதனால் வாக்களிப்பு இடம் பெறவில்லை. 

ஆனால் இம்முறை கோத்தாபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மூவர் போட்டியிட்டமையினால் வாக்களிப்பு இடம்பெற்றது. எனவே இது பாராளுமன்ற வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்த முதல் சந்தர்ப்பமாகும். மேலும் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டது இலங்கையில் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகும். 

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் வரை இவர் பதவியில் இருப்பார். 

எவ்வாறாயினும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்க வேண்டும். தனக்கு வாக்களித்தவர்களை திருப்திபடுத்தவும் வேண்டும். போராட்டக்காரர்களின் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து அதன்படியும் செயல்பட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் வேண்டும். 

எனவே ஜனாதிபதியின் இந்த எஞ்சிய பதவிக்காலம் சவால் மிக்கதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவான ஜனாதிபதி இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவான ஜனாதிபதி Reviewed by Irumbu Thirai News on July 20, 2022 Rating: 5

வெல்லுமா ரனிலின் தந்திரம்?

July 20, 2022

இலங்கை அரசியலில் தந்திரத்துக்கு புகழ் பெற்றவர் ரனில். 6 முறை பிரதமராக பதவி ஏற்றவர். ஒரு முறையேனும் பூரண பதவிக் காலத்தை நிறைவு செய்ததில்லை. அநேகமான தன்னுடைய தந்திரத்தின் மூலம் எல்லாம் சாதிக்கலாம் என்ற சிந்தனையில் எதையுமே சாதிக்காமல் போன தலைவனாகவே ரனில் நோக்கப்படுகிறார். 

இந்நிலையில் 2020 பொதுத் தேர்தலுக்கான எல்லா தந்திரங்களும் பொய்த்துப் போய் தேசிய ரிதியாக கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துடன் திருப்திப்பட வேண்டி ஏற்பட்டது. அதற்கும் ஒருவரை நியமிக்க உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் 10 மாதங்கள் கழித்து ஒற்றை உறுப்பினராக எதிர்க்கட்சியில் அமர்ந்த ரனில் இன்று பதில் ஜனாதிபதியாக, சிலவேளை அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கான ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான வலுவான சாத்தியங்களுடன் இருக்கிறார். 

கோட்டாவை பதவி விலகச் செய்வதற்கான ஆர்ப்பாட்டங்கள் இம்மாத ஆரம்பத்தில் தீர்க்கமான கட்டத்தை அடைந்தன. 9 ஆம் திகதி தேசிய ரீதியான மாபெரும் எதிர்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இணக்கப்பாட்டு அரசு ஒன்றை உருவாக்கிக் கொள்ள பல பேச்சுவார்த்தைகளை நாடாத்தின. கோட்டா பதவி விலகும் பட்சத்தில் யாரை அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வருவது உள்ளிட்ட பல விடயங்கள் அங்கே பேசப்பட்டன. ஒருவாறு கோட்டா பதவி விலகலோடு புதிய ஜனாதிபதி தேர்வு விடயம் மேடைக்கு வந்தது. கடைசியில் 4 பேர் போட்டியிடும் நிலைமை உருவானது. சம்பிக்க, பொன்சேகா இருவரும் போட்டியிடும் ஆர்வத்தில் இருந்த போதிலும் போட்டியிடவில்லை. இங்கே ரனில் தன் விளையாட்டை ஆரம்பிக்கிறார். 

ரனிலை பிரேரித்து ஆதரவு அளிப்பது SLPP. 1993 ல் இருந்து ரனில் எதிர்ப்பு அரசியல் முகாமில் அரசியல் செய்யும் SLPP இனரில் எத்தனை பேர் தமக்கு வாக்காளிப்பார்கள் என்பதை ரனிலால் மட்டுமல்ல. யாராலும் ஊகிக்க முடியாது. எனவே ரனில் தன்னுடையை வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சியை மட்டுமல்லாது எதிராணி வாக்குளை உடைக்கும் வேலையையும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். 

சஜித் கேட்டால் SLPP இன் விரல் விட்டெண்ணக் கூடிய ஓரிருவர் சஜித்க்கு வாக்கு அளிப்பார்கள். ஆனால் SLMC, ACMC தெளிவாக சஜித் ஐ ஆதரிக்கும். அதே போன்று TNA வும் சஜித் ஐ ஆதரிக்கும். 

மறுபுறம் சஜித் – டலஸ் கூட்டை விட டலஸ் தனியாக கேட்கும் போது SLPP இன் உறுப்பினர்களில் அதிகமானோர் டலஸ்க்கு வாக்காளிக்கும் சாத்தியம் அதிகமாக இருக்கும். இதனை நன்றாக திட்டமிட்ட ரனில் அநேகமாக சஜித் – டலஸ் கூட்டையே விரும்பி இருப்பார். 

மறுபுறம் SLPP இல் இருந்த மிகத் தீவிர இனவாதிகளாக அறியப்பட்ட பலர் தமது ஆதரவை டலஸ் கூட்டுக்கு தெரிவித்து வருகின்றனர். SLPP இன் முன்னணி தலைவர்களான பலர் மெளனம் காக்கும் போது வெறும் இனவெறியை மட்டுமே மூலதனமாக்கி அதன் மூலம் பாராளுமன்றம் வந்து, பதவிகளைப் பெற்று, கையாலகாதவர்கள் என்று மக்களிடம் பெயர் பெற்று அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியம் மிகக் குறைவாக உள்ள சன்ன ஜயசுமண, நாலக கொடஹேவா, ரத்ன பிக்கு போன்றோர் பகிரங்கமாக பேசுவதில் பல உள்குத்துக்கள் இருக்கலாம். அதன் விளைவாக டலஸ் சஜித் கூட்டு இனவாதிகளின் கூடாரம் போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, விமல் கம்மன்பில வின் 10 கட்சி கூட்டும் அங்கே உள்ளது. போதாக்குறைக்கு முன்னொரு காலத்தில் டலஸ், கம்மன்பிலவுடன் மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடியை ஏந்திய படம் வேறு ஓடிக் கொண்டிருக்கிறது. ரனிலின் தேவையும் அதுவே. அதன் விளைவாக TNA, ACMC, SLMC உள்ளிட்ட சிறுபான்மைக் காட்சிகளின் வாக்கை தம்பக்கம் ஈர்க்க முடியும் என நம்புகிறார். அநேகமாக அந்த நம்பிக்கை வீண் போகாத நிலை உருவாகி வருவதாகவே தோன்றுகிறது. 

கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் அநேகமான ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் பதியுத்தீன், தெளபீக் ஆகிய முஸ்லீம் பா. உ க்களைத் தவிர ஏனைய எல்லா முஸ்லீம் உறுப்பினர்களின் ஆதரவும் ரனிலுக்கு என்றே அறிய வருகிறது. 

அது தவிர SLFP உத்தியோகபூர்வமாக தமது ஆதரவு டலஸ்க்கு என்று அறிவித்த போதிலும் அவர்களில் பலர் ரனிலின் வலையில் வீழ்ந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது. 

இது தவிர நேற்று நடந்த TNA வின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தின் போது தொடர்பு கொண்ட இந்திய உயர் ஸ்தானிகரலாயத்தின் பிரதித் தூதுவர் டலஸ்க்கு வாக்காளிகுமாறுகேட்டு கொண்டதாகவும், அதனை உடனேயே ரனிலிடம் உள்ளிருந்த யாரோ எம்பி போட்டுக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே, இந்தியா ரனிலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ள நிலையில், இதை ரனில் இந்திய மேல் மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அநேகமாக இது இந்திய உளவு அமைப்பான ரோ வின் நகர்வு என்றே நம்பலாம். 

பொதுவாக கொழும்பில் உள்ள பல மேற்கு நாட்டு தூதுவராலயங்கள் ரணிலுக்கு பச்சைக் கொடி காட்டி இருப்பதாகவும், கட்சித் தலைவர்கள் பலருக்கு அது தொடர்பில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக்கவும் சொல்லப்படுகிறது. 

இதை விட ரனிலின் மற்றோரு மாஸ்டர் plan சஜித் ஐ டலஸ் உடன் கூட்டு வைக்க தூண்டியதன் மூலம் SJB இன் பல வாக்குகளை கவர்வதாகும். இதன் மூலம் சஜித் தலைமையை ஏற்க தைரியம் அற்றவர் என்ற சிந்தனையை மக்களுக்கும், SJB உறுப்பினர்களுக்கும் வழங்கலாம். நீண்ட கால அடிப்படையில் SJB இன் கட்டமைப்பை சிதைக்கும் ஒரு நகர்வாகவும் இதனை கருதலாம். 

ஆரம்பத்திலேயே டலஸ் சஜித் கூட்டு உருவாகி இருந்தால் பொன்சேகா அல்லது வேறு ஒருவர் சுயேச்சையாக முன்வந்து SJB இன் வாக்குளை உடைத்திருக்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் இந்த நகர்வு ஏற்பட்டமையானது அவ்வாறு ஒருவர் வந்து போதுமான ஆதரவை திரட்டிக் கொள்ள போதுமான அவகாசத்தையும் இல்லாமல் செய்து விட்டது. 

ஏற்கனவே, தலைமை ஏற்க தைரியம் அற்ற தலைவர் சஜித் என்று UNP இன் செயலாளர் பாலித ரங்கே பண்டார இழிந்துரைத்தார். இதனால் எதிர்காலத்தில் SJB இல் தொங்கிக் கொண்டிருப்பதால் எந்த பலனும் இல்லை என்ற செய்தியை SJB எம்பிக்களுக்கு வழங்கி ரனிலுடன் இணைவதன் மூலம் பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று உடைக்க திட்டமிட்டு இருக்கலாம். 

அநேகமாக தற்போதைய நிலையில் ரனில் வென்றாலும் ரனில் ஆதரவு வாக்கில் அவர் வெல்லப் போவதில்லை. மாறாக வேறு தெரிவற்ற SLPP இன் வாக்குகள், டலஸ் - சஜித் கூட்டை விரும்பாத ஆனால் ரனில் மீதும் விருப்பற்ற SLPP இன் வாக்குகள்,டலஸ் - சஜித் இணைவை விரும்பாத SJB வாக்குகள், சஜித் மீது நம்பிக்கையிழந்த SJB வாக்குகள், டலஸ் உடன் கூட்டுச் சேர்ந்துள்ள இனவாதிகள் காரணமாக வெறுப்புற்ற சிறுபான்மையினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் வாக்குகள் என்பவற்றினாலேயே வெல்லப் போகிறார். ஒட்டு மொத்தத்தில் 4 முனைப் போட்டி இருந்த சந்தர்ப்பத்தில் இருந்ததை விட, தற்போது ரனிலின் வாய்ப்பு பிரகாசமானது. 

-  Fayas M. A. Fareed.


வெல்லுமா ரனிலின் தந்திரம்? வெல்லுமா ரனிலின் தந்திரம்? Reviewed by Irumbu Thirai News on July 20, 2022 Rating: 5

வெற்றி யாருக்கு? கள நிலவரம்...

July 20, 2022

கோட்டாபய ராஜபக்க்ஷ இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய நிலையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. 
 
அதில் 03 பேர் போட்டியிடுகின்றனர். தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ, SLPP இன் உறுப்பினரும் பா. உ ஆன டலஸ் அழஹப்பெரும, NPP இன் தலைவரான அனுர குமார திசாநாயக்க ஆகியோரே அவர்கள். 
 
நாம் ஏற்கனவே எதிர்வு கூறிய டலஸ் மற்றும் சஜித் கிடையிலான உடன்பாடு எட்டுப்பட்டமையினால் சஜித் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. மாறாக அவர் டலஸ் இன் பெயரை பிரேரித்தார். 
 
அனுர வெற்றிக்காக போட்டியிடவில்லை. மற்றைய தரப்புக்களோடு ஒப்பிடும் போது கொள்கை அரசியல் செய்யும் அவருக்கும் அவர் சார்ந்த கூட்டணிக்கும் மற்றைய இருவரில் ஒருவரை தெரிவு செய்ய முடியாத கொள்கை முரண்பாடுகள் உள்ளன. எதிர்கால அரசியல் எதிர்பார்ப்பு இல்லாத ஒருவரை முன்னிறுத்தி அனைத்துக் கட்சி ஆட்சி ஒன்றை அமைக்க வேண்டும் என்று அவர்கள் எடுத்த முயற்சி தோல்வி கண்டு விட்டது. 
 
பெரிய கட்சிகள் இரண்டும் தேர்தலுக்கு செல்ல தயாரில்லை. இந்நிலையில் NPP இன் மூன்று உறுப்பினர் தவிர்ந்த வேறு வாக்குகள் அவர்களுக்கு கிடைத்தாலே அவர்கள் வென்றது போலதான். ஆனால் ஓரிரு வாக்குகள் கூடுதலாக கிடைக்கலாம். 
 
பிரதான போட்டி டலஸ் மற்றும் ரணில் இடையேதான். அதன் அடிப்படையில் மொத்தமுள்ள 225 இல் NPP இன் மூன்று தவிர எஞ்சியுள்ள 222 ஐ பகிர்ந்து கொள்ளவே போட்டி நடக்கவுள்ளது. 
 
இவர்களில் பெரும்பாலானோர் SLPP இன் உறுப்பினர்கள். நடப்பு பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை SLPP தேர்தலில் 145 ஆசனங்களை வென்றிருந்தது. அவர்களோடு கூட்டணியில் இருந்த அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், யாழ் மாவட்டத்தில் தனியாக போட்டியிட்ட SLFP ஒரு ஆசனத்தையும், சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான TMVP ஒரு ஆசனத்தையும், டக்ளஸ் தேவாநந்தாவின் EPDP இரண்டு ஆசனங்களையும் பெற்று 150 ஆசனங்களை கொண்டிருந்தது. 
 
எனினும் அது இப்போது பல தூண்டுகளாக உடைந்து உள்ளது. விமல் தலைமையில் 10 கட்சிக் கூட்டணி, SLFP இரண்டு பிரிவுகளாக உள்ளது. அனுர பிரியதர்ஷன சுசில் தலைமையில் மற்றொரு 14 பேர் கொண்ட அணி, இப்போது டலஸ் வேட்புமனு தாக்கல் செய்ததோடு SLPP இன் தவிசாளர் ஜிஎல் உடன் இன்னொரு குழு என பல பிரிவுகள். 
 
யார் என்ன சொன்னாலும் SLPP இன் இந்த பிரிவுகளே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாகும். SJB க்கு தேர்தலில் 54 ஆசனங்கள் கிடைத்தது. அவர்களின் கூட்டணி கட்சிகளான SLMC, ACMC என்பன தனியாக போட்டியிட்டு தலா ஒரு ஆசனத்தை வென்றிருந்தது. அத்தோடு முஸ்லீம் ஐக்கிய கூட்டமைப்பு என்ற பெயரில் புத்தளம் மாவட்டத்தில் ஒரு உறுப்பினருமாக 57 பேர் இருந்தனர். 
 
20 ஆம் சீர்திருத்த வாக்கெடுப்பு நிகழ்ந்த போது SLPP இன் விஜேதாச ராஜபக்க்ஷ அதனை எதிர்த்து வாக்காளித்தார். SLMC, ACMC இன் உறுப்பினர்கலும், முஸ்லீம் கூட்டமைப்பின் புத்தளம் உறுப்பினரும், மனோ கணேஷனின் அரவிந்த குமார் எம்பியும் அரசுடன் இணைந்து கொண்டனர். 
 
தற்போதைய நிலையில் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள்? எந்தக் கொள்கையில் இருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையே உள்ளது. எனினும் கிடைக்கின்ற உள்ளக தகவல்களை வைத்து பார்க்கும் போது பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் மூலம் ஒரே ஒரு ஆசனம் பெற்று வந்த ரணில் விக்ரமசிங்ஹவின் கையே ஓங்கி இருப்பதாக தெரிகிறது. 
 
பொதுவாக இரு தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக பதவிக்களுக்கான பேரம் பேசலில் இருப்பதாக தெரிகிறது. சில வேலை சற்று ஒதுங்கி இருக்கும் கருப்பு நிற பறவையின் கருப்பு பணமும் சூட்கேஸ் வழி கை மாறலாம். இலங்கை அரசியலில் அது ஒன்றும் புதிதல்லவே. 
 
 தற்போதைய நிலையில் சில அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் தம்முடைய ஆதரவு யாருக்கு என்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்புக்களின் பின்னர் அந்தக் கட்சிகளில் சில விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. அதிக ஆசனங்களைக் கொண்ட SLPP பல பகுதிகளாக பிரிந்து உள்ளது என்று ஏலவே பார்த்தோம். 
 
கட்சியின் உறுப்பினரான டலஸ் போட்டியிடுவதாக சொன்ன நிலையில் கட்சியின் ஆதரவு ரணில்க்கு என்று செயலாளர் அறிவிக்க, அது எப்படி என்று தவிசாளர் போர்க்கொடி தூக்கினார். அது தவிர தேசிய ரீதியில் அறியப்பட்ட பல பின்வரிசை உறுப்பினர்கள் அவ்வாறான தீர்வு ஒன்று கட்சியால் எடுக்கப்படவில்லை என்று உள்ளக முரண்பாட்டை பகிரங்கமாக கூறினார். 
 
மறுபுறம் SJB இலும் ரணில்க்கு சார்பான ஒரு குழு உருவாகி இருக்கலாம் என்றும், சஜித் வேட்பாளராக களம் இறங்காமல் போனால் அவர்கள் ரணில்க்கு வாக்காளிக்கலாம் என்ற நிலையும் காணப்பட்டது. மறுபுறம் இன்று காலை டலஸ் க்கு ஆதரவு வழங்குவது என்ற கடைசி முடிவு எடுக்கப்பட்ட சமயத்தில் கூட சஜித் போட்டியிடவில்லை என்றால் தனக்கு போட்டியிட அனுமதிக்குமாறு சரத் பொன்சேக்கா கோரிக்கை விடுத்ததாகவும், அது நிராகரிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 
 
ஏற்கனவே, SJB இல் இருந்த 57 பேரில் சுமார் 7 பேர் 20 க்கு கை தூக்கவும், இன்னும் இருவர் ரணிலுடன் ஆட்சியமைக்கவும் சென்று விட்ட நிலையில் இருக்கும் 50 க்கும் குறைவானவர்களை வைத்துக் கொண்டு ஜனாதிபதியை  தெரிவு செய்வதை மட்டுமல்ல அரசுக்கு எதிராக துரும்பைக் கூட நகர்த்த SJB இனால் முடியாது. 
 
இந்நிலையிலேயே SLPP இல் உருவான பிளவுகளை வைத்து பதவியைப் பிடிக்கும் வேலையை SJB ஆரம்பித்தது. ஜனாதிபதி ஆக சாதாரண பெரும்பான்மையே போதும். SJB க்கு ஒருபுறம் மேலதிகமாக தேவைப்படும் மேலதிக உறுப்பினர்களை தேடிக் கொள்ளும் சவால் ஒருபுறம். ரணிலின் வேட்டையில் இருந்து தம் உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ளும் சவால் ஒருபுறம் என்ன சஜித் இன் நிலை பரிதாபமானது. 
 
பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. 150+ ஆதரவு தமக்கு இருப்பதாக வாய் சவடால் எல்லாம் விடப்பட்டது. எனினும், டலஸ் கேட்கும் நிலையில் SLPP இன் ரணில் எதிர்ப்பு அணியின் வாக்குகள் எல்லாம் டலஸ் க்கு கிடைக்கும் சாத்தியமே காணப்பட்டது. 
 
SLFP இன் வாக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சஜித்க்கு என்று செயலாளர் தயாசிறி சொல்ல, ஒன்றுக்கு மேற்பட்டோர் வேட்பாளர்களாக வந்தால் தாம் யாருக்கும் வாக்களிப்பதில்லை என்று தலைவர் மைத்ரி சொன்னார். மறுபுறம் நிமல் சிறிபால, மஹிந்த அமரவீர உள்ளிட்ட சுமார் 10 உறுப்பினர்களின் ஆதரவு ரணிலுக்கு என்று தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் இன்று மாலை SLFP டலஸ் க்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. மைத்ரிக்கு சபாநாயகர் பதவிக்கான Offer ஒன்று பற்றிய தகவல்கள் கூட வெளி வந்துள்ளன. 
 
டலஸ் கேட்பதால் விமல் தலைமையிலான 10 கட்சி கூட்டணி சஜித் ஐ ஆதரிக்காது என்று சிக்னல்களை வெளிக்காட்டியது. சஜித் பின்வாங்க இது முக்கிய ஒரு காரணம். விமல் அணி டலஸ் ஐ ஆதரிக்க முடிவு செய்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டணியின் ஆதரவும் டளசுக்குதான். அவர்களுடன் 10 உறுப்பினர்கள் உள்ளனர். சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஏற்கனவே பகிரங்கமாக சொல்லி விட்டார். 
 
பெரிய கட்சிகளில் இருந்து பிரிந்து தனித்தனியாக இருக்கும் சில உறுப்பினர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியாது. என்னதான் வெற்றி தோல்வியை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கில் தங்கி இருந்த போதிலும் அதற்கு வெளியே உள்ள போராட்டக்காரர்களின் தாக்கம் அவர்கள் மீது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக அவர்கள் ரணில் ஜனாதிபதியாக வந்தால் போராட்டம் தொடரும் என்ற செய்தி, போராட்டத்திற்கு கிடைத்த மக்கள் அங்கீகாரம் என்பனவும் கட்சித் தலைமைகளின் முடிவுகளைப் போலவே எம்பிகள் தம் தீர்மானங்களை எடுப்பதில் செல்வாக்கு செலுத்தும் என எதிர்பார்க்கலாம். 
 
ரணில்க்கு அதிக உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவே உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் சமூகத்தில் அதன் தாக்கம் பேரணிகளாய், போராட்டங்களாய் வீதிகளில் எதிரொலிக்கிறது. 
 
இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் புள்ளடி தீர்மானிக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இலங்கையின் முதற் பிரஜை யார் என்று... 
 
- Fayas M. A. Fareed.
 
வெற்றி யாருக்கு? கள நிலவரம்... வெற்றி யாருக்கு? கள நிலவரம்... Reviewed by Irumbu Thirai News on July 20, 2022 Rating: 5
Powered by Blogger.